பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமலை11-த்தல்

அமலை -த்தல் 11வி. ஒலித்தல். 11வி. ஒலித்தல். அமலைக்கும் நீர்த் தில்லைக்கண் விடைப்பாகன் ( தில்லை. யமக அந். 44).

அமலைதாரம் பெ. அரிதாரம். (சித். அக./செ. ப.அக.அனு.)

அமலைநிம்பூரம் பெ. எலுமிச்சை. (மரஇன. தொ.)

அமவாசி (அமாவசி, அமாவசியை, அமாவாசி, அமா வாசியை, அமாவாசை) பெ. சந்திரனும் சூரியனும் கூடிநிற்கும் நாள். அமவாசியாதி வந்துறினே மருவற்க (சிவதரு. 11, 14). தென்புலத்தோர்க்கு ஊட்டிடுதற்கு அமவாசி (கூர்மபு. உத்தர. 19,1).

30).

...

அமளி பெ. 1. துயிலும் படுக்கை. பொய்க்கனா மருட்ட எழுந்து அமளி தைவந்தனன் (குறுந். பால் ஆர்ந்து அமளித்துஞ்சும் அழகுடை நல் இல் (பெரும்பாண். 251-52). அமளி அங்கட் பூவணைப்பள்ளி (சீவக. 1710). பூவியல் அமளி மேலாப் பொய் உறக்கு உறங்குவானை (கம்பரா. 5,2, 213). அடலரவு அமளியில் அறிதுயில் அமரும் அரங்கேசர் (திருவரங்கலம். 22). மற்றவன் அமளி மேலால் வாள்வழி படுக்கும் (கச்சி. காஞ்சி. இருபத். 279). 2. படுக்கும் மெத்தை. ஐந்து மூன்று எடுத்த செல்வத்து அமளி (சீவக. 838). பஞ்சுடை அமளி மேற்பள்ளியேற்பவன் (சூளா.86). ஐவகை அமளி அணைமேல் பொங்க (பட்டினத்துப். திருவிடை. 19,39). ஐந்தணை அமளியும் அம்பொன் மாளிகை (கச்சி. காஞ்சி. கழு. 258). 3. படுக்கையுடைய கட்டில். மணிக்கால் அமளி மிசை (சிலப்.2, 12). ஐவகை அமளிச் சிங்கம் சுமப்ப ஏறி (பட்டினத்துப். கோயில். 36,12). பசும்பொற்கால் அமளி மீது பெருமாள் தமை இருத்தி (பெரியபு. 37, 71). சிங்கம் சுமந்த ஐம்பேர் அமளி (ஞானா. 16, 47). 4. அரசிருக்கை. பெரும்பேரமளி ஏறியபின்னர் (சிலப். 26, 91). அழலவிர் பைங்கண் அரிமான் அமளி (புற. வெண்.

9, 20).

அமளி' பெ. ஆராவாரம். வந்தபோதிருந்த அமளி காண் (திருமங்கை. திருநெடுந். 21 வியாக்.). அண்ணன் மார் அமளி வந்து செய்யாமே (மலைய. ப. 64).

அமளி3 பெ. மிகுதி. பனம்பழம் இப்போது நல்ல அமளியாயிருக்கும் (இலங். வ.).

அமளிக்கச்சு பெ.

திருமாலின் படுக்கையாகிய பாம்

பணை. கனசக்கரன் அமளிக்கச்சு (திருவாரூருலா

149).

27

8

அமாந்தமுறை

அமளிகுமளி (செ.ப.அக.)

(அமளிதுமளி) பெ. பேராரவாரம்.

அமளிதுமளி (அமளிகுமளி) பெ. பேராரவாரம். உற வினர் வருகையால் வீடு அமளிதுமளிப்படுகிறது (நாட். வ ).

அமளிபண்ணு-தல் 5 வி.சச்சரவு விளைத்தல். (பே.வ.)

அமளியம்பர் பெ. (கடலில் பள்ளிகொண்ட) திருமால். துஞ்சு அமளி யம்பர்க்கு (திருவாரூருலா 80).

அமளை 1

பெ. கடுகுரோகணிப்பூடு. (பச்சிலை. அக.)

அமளை' பெ. ஒரு களைச்செடி. (ரா. வட், அக.)

அமளை' பெ. சிறுமரவகை. (செ.ப.அக.)

அமளைக்கண்ணி பெ. கொள்ளு. (பச்சிலை. அக.)

அமளோகிதம் பெ. செங்கீரை. (சித். அக. செ. ப. அக.

அனு.)

அமனற்கம் பெ. நினைப்பொடுக்கம், (சேந். செந்.109)

அமனி பெ. தெரு. (யாழ். அக.அனு.)

மனோலயம்.

அமனிதம் பெ. புளியாரை. (சித். அக./செ. ப. அக. அனு . )

அமாத்தியர்

பெ. அந்தணரில் அமைச்சுத்தொழில் பூண்ட பிரிவினர். அமாத்தியர் பலருள் ஆராய்ந்து கூட்டி (குறள். 461 மணக்.). ஆய வளம்பதி யதனில் அமாத்தியரில் (திருவிளை. பு. 58,4).

அமாத்தியன் பெ. அமைச்சன். மன்னர் மூவரும் அனுப்பும் அமாத்தியர்கள் (திருக்கோவ. பு. 12, 19).

அமாந்தக்காரன் பெ. 1. துணி வியாபாரி. (புதுவை வ.) 2. தெருவில் பண்டம் விற்போன். (ராட். அக.) அமாந்தம் பெ. பொய். (நாஞ். வ.)

அமாந்தம்பற்றவை -த்தல் 11 வி. இல்லாததைச் சொல்லு தல். (முன்.)

அமாந்தமுறை

பெ. (அம + அந்தம் + முறை) சந் திரனை அடிப்படையாகக் கொண்டு கணிக்கும் மாத