பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/411

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமிர்தசஞ்சீவினி'

அமிர்தசஞ்சீவினி1

(அமிர்தசஞ்சீவி1) பெ. இறந்

தோரை மீண்டும் உயிர்ப்பிக்க வல்ல வல்ல ஒரு மூலிகை.

(of cor.)

அமிர்தசஞ்சீவிQ' (அமிர்தசஞ்சீவி') பெ. கடுக்காய். (மரஇன. தொ.)

அமிர்தசர்க்கரை பெ. சீந்தில்மா. (செ. ப. அக.)

அமிர்தசாகரம் பெ. பிரதாபசிம்மர் எழுதிய ஒரு மருத் துவ நூல். (அபி. சிந்.)

அமிர்தசாகரர் (அமிதசாகரர், அமுதசாகரன்) பெ. யாப்பருங்கலக் காரிகை ஆசிரியர் பெயர். அவர் பெயர் அமிர்தசாகரர் அமுதசாகரர் என்றும் குறிக்கப் பெற்றன (யாப். வி. ஆராய்ச்சி முன்னுரை).

அமிர்தசாமரம் பெ. செஞ்சிற்றகத்தி. (சித். அக./செ.ப. அக. அனு.)

அமிர்தசித்தயோகம் பெ. (சோதிடம்) இருபத்தேழுயோகங் களுள் சுபயோகம் ஆறனுள் ஒன்று. (பெரிய வரு.ப. 45)

அமிர்தசுரோணிதம் பெ. இந்திரகோபப் பூச்சி (குண. 2

ப.338)

அமிர்தநாதம் பெ. நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று.

(சங். அக.)

அமிர்தநிலை பெ.

(காமசாத்திரம் கூறும்) அமுத நிலை. அறிந்து பதினைந்து அமிர்தநிலை ஆராய்ந்து (கூளப்ப. விறலி. தூது 547).

அமிர்தப்பால் பெ. தாய்ப்பால். (சித். பரி. அக. ப.155)

அமிர்தபதி பெ. மறைந்து போன ஒரு தமிழ்ச் சமணக் காவியம். (யாப். வி. 94 உரை)

அமிர்தபலம் பெ. நெல்லி. அமிர்தபல மெளிலாங் கோதிலிரதங்களும் (தைலவ. தைல. 48/செ. ப. அக.).

அமிர்தபலா பெ. கொய்யா. (மரஇன. தொ.)

அமிர்தபலை 1 பெ. கடுக்காய். (முன்.)

அமிர்தபலை' பெ. கொம்புப்புடல். (முன்.)

அமிர்தபலை' பெ. எலுமிச்சை. (முன்.)

2

81

அமிர்தமெழுகு

அமிர்தபானம் பெ. காமபானம். அரிவையர் அமிர்த பானம் (பரிபா. 8, 120).

அமிர்தம்' (அமிர்து, அமிருதம், அமிழ்தம், அமிழ்து, அமுதம், அமுது, அமுர்தம்) பெ. அமுர்தம்) பெ. 1. (சாவாமை தரும்) தேவருணவு. அமிர்தம் நின் மனத்தகத்து அடைத்தர (பரிபா. 2,69). செவிச்சுவை யமிர்தம் இசைத்தலின் மயங்கி (பெருங்.3, 14, 277). தோளான் அமிர்தமன்னாளை எய்தி (சீவக. 268). சொல் மலை அல்லன தொடுகடல் அமிர் தம் (கம்பரா. 1, 2, 47). மறைப்பாற்கடலைக் கடைந்து தமிழ் ஆயிரத்தின் சுவை அமிர்தம்

...

...

(திருவரங். கலம். 4). 2. உணவு. பேணித்தந்தவன் அமிர்தம் ஊட்ட உண்டு (சீவக. 1178). சுரபியை விளித்து நீயே சுரந்தருள் அமிர்தம் என்ன (கம்பரா. 1, 10,93).3. அழிவின்மை. (செ.ப.அக.)

அமிர்தம்2

பெ.

1.இனிமை. அமிர்தம் கொள உயிர்க்கும் கருங்காழ் அகிலின் நறும்புகை (சீவக. 349). அமிர்த அம் சொல் அணங்கனையார் (கம்பரா. 1, 13, 28 பா.பே.).2. புணர்ச்சியின்பம். மூப்பு இலா முலையினார் அமிர்தம் இன்று உகுப்ப (சீவக. 769). 3. நலம். வருரோக நிண்ணயம் தோற்றியே அமிர்தகரனாய் (அறப்பளீ . சத. 51).

...

அமிர்தம் 3 பெ. 1. பசுவின் பால். ஆன்முலைப் பிறந்த வால்நிற அமிர்தம் (பெருங்.2,8,11). பஞ்சகெளவியம் அஞ்செனும் அமிர்தம் பரிந்து (சிவரக. 2, 5, 4). 2 நெய். (நாநார்த்த.530) (பாலொத்த) நிலவின் வெள்ளிய கதிர். மதியின் அமிர்தத் துளியான் (மதுரைச். உலா 29).

அமிர்தம் + பெ.

பெ. நீர். (வின்.)

3.

அமிர்தம்' பெ. இரவாமல் கிடைக்கும் பிச்சை. ஒன்றிர வாமல் வருவதே அமிர்தம் (சிவஞா. காஞ்சி. ஒழுக்.

36).

அமிர்தம்' பெ. மோட்சம். (சங். அக.)

அமிர்தம்' பெ. யாகசேடம். (நாநார்த்த. 530)

அமிர்தம் பெ. பொன். (முன்.)

அமிர்தமூடுவிடம் பெ, சுக்கு. அமிர்தமூடுவிடமஃதை

(தைலவ. தைல.1/செ .ப . அக.).

அமிர்தமெழுகு பெ. பிளவை, புண்

போன்றவற்றிற்

கான வெளிப்பூச்சு மருந்து. (குண. 2 ப. 169)