பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமிலரத்தம்

(திராவகம்). அமிலம் கலந்த நீர், மின்னோட்டத் தைக் கடத்துகிறது (அறிவி. 9 ப .127).

அமிலரத்தம் பெ. அமிலம் கலந்த ரத்தம். (மருத் க.

சொ. ப. 3)

அமிழ் - தல் 4 வி. 1. மூழ்குதல். இன்பக் கடலூடே அமிழுவேனை (திருப்பு. 509). ஆனநெடுநாள் கிடந் தமிழ்தலே சுகமாகும் (அறப்பளீ. சத. 49). 2. மூடு தல். அமிழ் இமைத்துணைகள் கண்ணுக்கு அணி என அமைக்குமாபோல் (கம்பரா. 1,21,3).

அமிழ்கட்டை பெ. கப்பலில் கீழ் தொங்கி நீரில் மூழ்கி யுள்ள கட்டை. (ஆட்சி. அக.)

அமிழ்த்தி பெ. அழுத்தும் கருவி.

(முன்.)

அமிழ்த்து-தல் 5 வி. 1. ஆழ்த்துதல். ஆடன் மைந்தர் அடங்க அமிழ்த்தினான் (சேதுபு. அக்கினி. 31). 2. அமுக்குதல். (செ.ப.அக.)

அமிழ்தக்கொடி பெ. அமிர்தக்கொடி. (செ. சொ. பேரக.)

.

அமிழ்தம் ( (அமிர்தம், அமிர்து, அமிருதம், அமிழ்து, அமுதம், அமுது, அமுர்தம்) பெ. 1. தேவருணவு. வானோர் அமிழ்தம் புரையுமால் (தொல். பொ. 144, 13 இளம்.) இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயி னும் (புறநா.182,2). தான் அமிழ்தம் என்றுணர பாற்று (குறள்.11). முளரிக்கும் செம்மை ஈந்த தையலாள் அமிழ்தமேனி (கம்பரா. 1, 21,9). உவரி அமிழ்தம் என்ப (CITIT. 6). 2.உணவு. அறு சுவை நால்வகை அமிழ்தம் பாத்திரத்து அளித்து (LDGOOGLD. 28, 116). ஆரணி தெரியலான் அமிழ்தம் மேயினான் (சூளா. 373). திருவயிற்றுக்கு அமிழ்த மாகவும் அமுது செய்து (தக்க. 110 ப. உரை). 3.பால். அலர்மாரி மேற்சொரிவார் அமிழ்த நீர் ஆட்டுவார் (சூளா. 2050). 4. பற்களில் ஊறிய நீர். சூட்டு மலர் புனைதாழ் மென்சுரிகுழல் உண்மூரல் அமிழ்து (செ.பாகவத. 3,12,26). 5. இனிமை. மருந்தினும் அமிழ்தம் ஊற மாதவன் வகுத்தான் மன்னோ (முன். 10, 7,23).

அமிழ்து (அமிர்தம், அமிர்து, அமிருதம், அமிழ்தம், அமுதம். அமுது. அமுர்தம்) பெ. 1. தேவருணவு, அமிர்தம். உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறி னும் (மதுரைக். 197). அமிழ்தினும் ஆற்ற இனிதே (குறள்.64). அமிழ்து உறழ் அடிசில் அயிலா அசை வொடு (பெருங்.1,54,61). 2. உணவு. அரிவையர் அடுமடை அமிழ்து கொண்டோச்சி (முன்.2,3,

2

83

அமுக்கம்'

45). 3. தண்ணீர். அமிழ்து திகழ் கருவிய கண மழை (பதிற்றுப். 17, 11). 4. பால். பயசு கீரம் அமிழ்து பயம் பாலே (பிங்.1130).

அமிழ்ந்து-தல் 5 வி. (தானாக) மூழ்குதல். கயம் ... விழுந்து அமிழ்ந்தி (சேதுபு. அகத். 14).

.

அமினா (அமீன், அமீனா) பெ. 1. பொருள்களைப் பறிமுதல் செய்து பணவசூல் செய்யும் அதிகாரமுடைய அரசு அலுவலர். ஆமை புகுந்த வீடும் அமினா புகுந்த வீடும் ஆகிவராது (பழ. அக. 58). 2. பொருள் சார்பான வழக்குத் தீர்ப்பின்படி நீதிமன்றக்கட்டளை களை நிறைவேற்றும் அலுவலர். (செ.ப.அக.) 3. அந்தரங்க அலுவலர். (செ. ப. அக, அனு.)

அமீர் பெ. தலைவன். (செ.ப.அக.)

அமீன் (அமினா, அமீனா) பெ. 1.பொருள்களைப் பறிமுதல் செய்து பணவசூல் செய்யும் அதிகாரமுடைய அரசு அலுவலர். (செ.ப. அக.) 2. பொருள் சார்பான வழக்குத் தீர்ப்பின் படி நீதிமன்றக் கட்டளைகளை நிறைவேற்றும் அலுவலர். (முன்.) 3. அந்தரங்க அலுவலர். (செ.ப.அக. அனு.)

அமீன்கெச்சு பெ. கிராம நில அளவுக்குறிப்பு. (செ.ப.

அக.)

அமீனதார் பெ. அரசிறைக் கீழ்த்தர அலுவலர்களுள் ஒரு பிரிவினர். (நாஞ்.வ.)

அமீனா (அமினா, அமீன்) பெ. 1. பொருள் சார்பான வழக்குத் தீர்ப்பின்படி நீதிமன்றக் கட்டளைகளை நிறை வேற்றும் அலுவலர். ஆ ஆ என்று அலை ஆமீன். ஆமீன் - அமீனா (நாஞ். மரு. மான். 9,246 அடிக்குறிப்பு). பொருள்களைப் பறிமுதல் செய்து பணவசூல் செய்யும் அதிகாரமுடைய அரசு அலுவலர். (செ.ப.அக.) 3. அந்தரங்க அலுவலர். (செ.ப.அக. அனு.)

2.

அமுக்கடி1 பெ. நெருக்கடி. நாட்டில் அமுக்கடி இப் போது இல்லை (பே.வ.).

அமுக்கடி2 பெ. அகப்பட்டதைப் பற்றுபவன். (ரா.வட்.

அக.)

அமுக்கம்' பெ. புழுக்கம். இங்கு ஒரே அமுக்கமாய் இருந்தது (பே.வ.).

அமுக்கம்' பெ. பிறர் அறியாதவாறு மறைத்துச் செயல் புரிகை. இவன் அமுக்சுமாய் இதைச் செய்கிறான் (முன்.).