பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/415

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுக்குருளை

அமுக்குருளை பெ. சாலையில் பரப்பிய கற்களை அமுக் கப் பயன்படும் கல் அல்லது இரும்புருளை. தெருவைச் சமப்படுத்த அமுக்குருளை வந்து கொண்டிருக் கிறது (பே.வ.).

அமுக்கொத்தி பெ. கத்தி வகை. (வின்.)

அமுகம் பெ. கடுக்காய்.

(மரஇன. தொ.)

அமுங்காக்கொடி பெ. நெட்டி. (சித். அக./ செ. ப. அக. அனு.)

அமுங்கு-தல் 5 வி. 1. அமிழ்தல். அச்சமில்லை அமுங் குதலில்லை (பாரதி. தோத்திரம். 1, 24, 1). 2. உள் அழுந்துதல். கையால் தொட்டால் பழம் அமுங்கு கிறது (பே.வ.).

அமுசகம் (அமுசம் 1) பெ. செருப்படை எனும் மூலிகை. (சித். அக./செ. ப. அக. அனு.)

அமுசம் 1 (அமுசகம்) பெ. சிறு செருப்படை எனும் மூலிகை. (சித் பரி. அக.ப. 55)

அமுசம்' பெ. அன்னப்பறவை. (சம். அக./செ. ப. அக.

அனு.)

அமுசு பெ. புகை படிந்த ஒட்டடை. (வின்.)

அமுசு2 பெ. அழகு. நல்ல அமுசுடையார் (ரா. வட். அக,).

அமுசோகம்பாவனை பெ. (மெய்ப்பொருள்) தன்னை அதுவாகப் பாவிக்கை.

(வள்ள.சாத் 3 சிவயோக. 11)

அமுணங்கம் பெ. அடக்கமின்மை. (யாழ். அக. அனு.)

அமுத்தம்1 பெ. வச்சநாவி. (வைத். விரி. அக. ப.19) அமுத்தம் 2 பெ. கையாயுதம். (யாழ். அக. அனு.)

அமுத்தல்1 பெ. கர்க்கடக சிங்கி, (பரி. அக /செ.ப. அக. அனு.)

அமுத்தல் 2 பெ. தன் கருத்தை வெளியிடாது இருக்கை.

அமுத்தலாக

(பே.வ.).

அப்பெண்

நடந்துகொள்கிறாள்

அழுத்தி பெ. விருப்பமின்மை. (யாழ். அக.அனு.)

அமுத்திரம் பெ. மஞ்சிட்டி. (பச்சிலை. அக.)

28

35

அமுதகிரணன்

அமுதக்கடல்

பெ. பாற்கடல் தெள்ளமுதக் கடல் நடுவில் தோன்று செழுங்கமலக் குயில் (மீனா. பிள்.

9, 10).

அமுதக்கதிர்க்கடவுள் பெ. சந்திரன். அமுதக்கதிர்க் கடவுள் ரவிகட்கிரட்டி தனிஅறை கூறவே (தக்க.

460).

அமுதக்காய் பெ. கடுக்காய். (மர இன. தொ.)

அமுதக்குவிகம் பெ. செங்கற்றாழை. (சித். அக./செ.ப. அக. அனு.)

அமுதக்கொடி பெ. பெருமருந்துக் கொடி. (பச்சிலை.

அக.)

அமுதக்கோணிகம் பெ. செங்கிளுவை.

ப. அக. அனு.)

அமுதகடிகை

(சித்.அக/செ.

பெ. நல்ல செயல்களுக்குரிய வேளை.

(வி பிதான. குணா. 26, 27/செ. ப. அக.)

அமுதகதிரோன் பெ. (பால் போன்ற கதிர்களை யுடைய) சந்திரன். அமுதகதிரோன் சீதன்குரங்கி சோமன் தன்பெயர் (பிங். 225).

அமுதகதி ரோனும் புளகவிமானத்துள் பொதிய (மயிலையுலா

177).

அமுதகம்1 பெ. 1. இறவாமைக்குக் கருவியாகிய அமிர் தம். (சங். அக.) 2. மருந்து. (வைத். விரி. அக.ப.19) 3. பாற்கடல். (கதிரை. அக.) 4. (வைத். விரி. அக.ப.19) 5. முலை. தயிர். (வைத். விரி. அக. ப. 19) 7.நீர். (all cir.)

நெல்லிப்பால். (சங். அக.) 6.

அமுதகம்' பெ. பெ. சுக்கு மிளகு திப்பிலி ஆகிய திரிகடுகம். (வைத். விரி. அக.ப.19)

அமுதகம் ' பெ.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்

காய் ஆகிய திரிபலை. (முன்.)

அமுதகம் + பெ. சீந்தில். (முன்.)

அமுதகரந்தை பெ. சிவகரந்தை. (சித். அக. | செ. ப. அக. அனு.)

அமுதகிண்ணம் பெ. 1. பாற்கிண்ணம். (செ. சொ. பேரக.) 2. இளம் பெண் முலை. (சாம்ப. அக.) அமுதகிரணம் பெ. நிலவொளி. மதியில் ஒழுகும் அமுதகிரணமே (முத்துக். பிள். 6,9).

அமுதகிரணன் பெ. சந்திரன், அமுதகதிரோன். வியோமத் துடுபதி அமுதகிரணன் தெய்வம் இந்து