பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/417

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதம்2.

...

பாலும் ... ஆவியும் ஆகும். (பொதி.நி. 2, 74). 3.கள். தெங்கின் ஊறலும் தேம்பிழித்தேற லும் தாங்கரும் பெண்ணைப் பூங்குலை அமுத மும் (பெருங். 2, 2, 177-178). 2,2, 4. பால். பணைத்து ஏந்து இளமுலை அமுதம் ஊற.(மதுரைக்.601). என் இளங்கொங்கை அமுதம் ஊட்டி (பெரியாழ். தி.3, 2,8). அமுதம் இருத்திய செப்பு அனைய தனத்தி னளே (கலிங். 124). அமுத வெண்டிரைச் சிந்து (பாரதம். 1, 1, 33). அசேத்ன அமுதம் கன்றை வளர்த்தல் போல் (சிவப்பிரவிகா. 34). தெள் அமு தம் ஊட்டி. (கூளப்ப. காதல் 8). 5. தயிர். (வின்.) 6. சோறு, உணவு. அமுதம் உண்க அடிகள் (சிலப். 16, 43). எடுத்த பாத்திரத்து ஏந்திய அமுதம் (மணிமே.17, 17). அன்னை தேன் தேன் கலந்து இன் அமுது உகந்து அளித்து (கருவூர். திருவிசை.1,9). கங்குல்வாய் அமுது அருந்தி இக்காரியம் முடித்து (திருவிளை. பு.36,25). மூகை மொழி வாக்கியென ஆக்குவது நீர் அமுதம் (ஆனந்த. வண்டு.13).7.நீர். துலங்கிய அமுதம் கலங்கியது என்ன (கல்லாடம் 5, 22). ஊதைகள் சொரிவன உறையுறும் அமுதம் (கம்பரா. 1,2,51). அகிலும் சாந்தும் அப்பி இன் அமுதம் ஊட்டி (திருவிளை. பு.நாட்டுச்.13). அமுத வேணிபித்தர் (திருப்பு. 1067). அமுதம் என்ற தண் புன லினால்... அமைக்கும் அச்சிவலிங்கம் (ஆனைக் காப்பு. மூர்த்தி. 7). 8.மேகம். அமுதம் மேகமும் பெருமையும் ஆகும் (பொதி. நி. 2, 74). 9. உப்பு. கடல் விளை அமுதம்பெயற்கு ஏற்றாஅங்கு உருகி (நற். 88, 4). கடல்விளை அமுதம் கண்டபொழுதில்

...

...

அடிசில் அம்சுவை மிக்காங்கு (சீவக. 805).10.

கரும்பின்காறு, தென் அமுதச் செஞ்சிலை ஒன்று

கையில் பெய்யும் காமன் (கம்பரா. 1,16, 33). 11. வாயூறல். அரமங்கையர் பவழவாய் அமுதம் பருகி (சூளா. 122).தீங் குதலை இன்னமுதம் மார்பின் வழி சிந்தி (திருவிளை. பு. 4, 17). அமுதவாய்க்குழவி (மதுரைக்கலம். 102). 12. சந்திரகலை. அமுதத்தோடும்

...

தோன்றும் திங்கள் (கூர்மபு. பூருவ.பதி.12). எமது மதியில் ஒழுகும் அமுத கிரணமே (முத்துக். பிள்

6,9).

அமுதம்2 பெ. 1. (கவிதையில் காணும்) ஒன் பான் சுவை. சுவை பால்... உப்பும் அமுதம் (பிங். 3067). தெள்ளார் அமுதக் கவிதை பொழி சிறுவன் (கூர்மபு. பூருவ. பாயி. 6). 2. இனிமை. தித்தமாகிய அமுத நன்னதி (தெ.இ.க. 7,69). அமுதம் ஊற... கீதம் பாடிய தொடங்கினானே (சீவக. 2048 அமுதம் -இனிமை. நச் .). நின் அமுதவாக்கு அளித்த நல்லற நூல்

(சிதம். மும்.2,21). 3. பெருமை. அமுதம்

287

அமுதர் 1

பாலும்... பெருமையும் ஆகும் (பொதி. நி. 2,74).

4.

தன்மை. சுவை பால் நீர்மை உப்பும் அமுதம்

(பிங்.3067).

அமுதம்' பெ. திரிபலை. (வின்.)

அமுதம் பெ. திரிகடுகம். (முன்.)

...

அமுதம்' பெ. சீந்தில். (மூலி. அக.)

அமுதம் பெ. சிறு செருப்படை. (வைத். விரி. அக.ப.

19)

அமுதம் பெ. கடுக்காய். (முன்.)

அமுதம்' பெ. நெல்லி. (முன்.)

அமுதம்' பெ. காட்டுக்கொஞ்சி. (பச்சிலை. அக.)

அமுதம் 10 பெ. சீதேவி. ((LOGOT.)

அமுதம் 11 பெ. பூமிச்சர்க்கரைக் கிழங்கு. அமுதம்... பூமிச்சர்க் கரையாம் (நாம.நி.345).

அமுதம் 12 பெ. விந்து. விந்து அமுதம் சுக்கிலம் (நாம்.

.601).

அமுதம் 13 பெ. முத்தி. நீங்கா அமுதம் நிலை பெற லாமே (திருமந். 1605). மாலை அமுது செய்து அமுதம் பெறு சண்டி (தேவா. 7,65,2).ஆகமம் பகராலவாய் அமுதமன் திருவாலவாய் (திருவால். பு. திருநகரச்.11 அமுதம்-முத்தி அடிக்குறிப்பு).

அமுதகதனம் பெ. அமுதத்தின்பொருட்டுள் சுடலைக் அமுத மதனத்தில் ... வருமதகளிறு (பார

கடைகை.

தம், 7, 2, 40).

அமுதமூளை பெ. பெருமூளை. (சாம்ப. அக.) அமுதமேந்தல் பெ. பெரியோருக்கு ஆகாரமளிக்கை. அதிகருக்கு அமுதமேந்தல் (சூடா.நி.12,99). அமுதயோகம் (அமிர்தயோகம்) பெ. (சோதிடம்) ஆறு சுபயோகங்களுள் ஒன்று. சதயம் காரி சேர்ந் திடில் அமுதயோகம் (பெரியவரு. ப. 44).

அழ

2.திரு

அமுதர்' பெ. 1. சிவன். அமுதர் வண்ணம் லும் அழல் வண்ணமே (தேவா. 3, 46, 2). மால். என் அரங்கத்து இன் அமுதர் குழல் அழகர் (நாச்சி. தி.11,2). 3. தேவர். அமுதர் உண்டி அயில்வுறும் அமலைத்து (கம்பரா. 1, 2, 22 பா.பே.) 4. மேலோர். விண்ணவர் பகவர் அமுதர் ... தேவர் மேலோருமாமே (ஆசி.நி.12).