பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/419

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதுகுத்து-தல்

54). 14.

தருமருந்து. மறைவிலாமிருதசஞ்சீவனியுடன் அமு திரண்டும் குறைவற மூர்ச்சை தீர்த்தே குற்றுயிர் தருமருந்தாம் (சூடா. நி. 4, 65). 13.உப்பு. அள்ள லோங் களத்தமுதின் பண்டியும் (கம்பரா. 1, 2, கண்டசருக்கரை. அருங்கடித் தீஞ்சுவை அமுதொடு (பெரும்பாண். 475). 15. இன்பம். செழுந்தென்றல் அமுது அளிக்கும் காலம் (நந்திக் கலம். 56). 16. வீடுபேறு. கனிந்த காமம் அமு துங்கைப்ப விற்கும் நல்லவரிருக்கை (திருவிளை.

பு. நகரச். 53).

அமுதுகுத்து-தல் 5 வி. உறைமோர் குத்துதல். (செ. ப.

அக.)

...

அமுதுசெய்-தல் 1 வி. 1. உண்ணுதல். தீதில் நஞ்சு அமுதுசெய்து (தேவா. 6, 26, 5). முந்நீர் நஞ்சு அமுது செய்தாய் (திருவாச. 6, 2.8). வெண்ணெய் அமுது செய்து (பாரதம். 3, 8, 1). ஐயனே அமுது செய எழுந்தருளும் (திருவிளை. பு. 23, 23). அமுது செயற்குரிய திருப்போனகம் (தக்க. 148 ப. உரை). 2.உணவு சமைத்தல். ஓதும் அமுதுசெய்யுமாறு (திருவால. பு. 31, 12).

...

அமுதுண்டோர் பெ. தேவர். அமுதுண்டோர் தேவ ராம் (நாம. நி. 63).

அமுதுபடி (அமிதபடி) பெ. 1. படைக்கும் உணவு. இவள்தான் அமுதுபடி திருத்துவது (பெரியாழ். தி. 3, 7, 8 வியாக்.). புற்றிடங்கொள் புனிதர்க்கு அமுது படி முதலாம் (பெரியபு. 27, 19).2. அரிசி. ஓர் அகத் துப் போயினள் அமுதுபடி புறம்பில்லை (திருவால.

4. 31, 12).

அமுதுபடை-த்தல் 11 வி. உணவு பரிமாறுதல். உழை யிடை அமுதுபடையென

(முன்.31, 11). அமுதம் படைத்து உணவே பணித்தீர் (திருவருட்பா

3783).

அமுதுபடை பெ. பெ. சித்திரை மாதம் சிறுத்தொண்டநாய னார் திருநாளான பரணி நட்சத்திரத்தில் வீடுதோறும் அரிசிப்பிச்சை எடுத்துச் சமைத்து அடியவர்களுக்குச் சோறிடும் விழா. (சைவ வ.)

அமுதுபடையல் பெ.

அமுதுபடை. (நாட்.வ.)

அமுதுபாறை பெ. சோற்றுத் திரளைக்கொண்டு தயிர்ச் சாதம், புளிச்சாதம் போன்றவை கூட்டுவதற்கான கல்.

(வைண.வ.)

அமுதுபுரம் பெ, சிறுகுறிஞ்சா. (செ. சொ. பேரக.)

பெ. சொ.அ. 1-19

28

CO

அமுர்தவிந்து

அமுதுமண்டபம் பெ. கோயில் மடைப்பள்ளி. (செ.ப.அக.)

அமுதுமோர் பெ. உறைமோர். (வின்.)

அமுதுரை (அமுதுறை) பெ. எலுமிச்சை. (யாழ். அக. அனு.)

அமுதுறை (அமுதுரை ) பெ. எலுமிச்சை. (மரஇன. தொ.)

அமுதூட்டு-தல் 5 வி. பிள்ளைக்கு ஏழாம்மாதத்தில் சோறூட்டுதல். ஏழாந்திங்களில் இன்னமுதூட்டலும் (பிங். 1368).

அமுதூறு-தல் 5 வி. 1. இன்பநீர் சுரத்தல். அண் ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே (மதுரகவி. கண்ணி. 1). எங்கும் நிறைந்த அமுதூறு பரஞ்சுடர் (திருவாச. 49.8).2. குழந்தைகளின் வாயில் எச்சில் சுரத்தல். வாய் அமுதூறிய குறுநகை (முத்துக். பிள்

2, 7).

.

அமுதெழுத்து (அமுதவெழுத்து) பெ. மங்கல எழுத்து. ஆதி அமுதெழுத்து ஆகிய அச்சீர்க்கு (பிங். 1353).

அமுதேசுவரி பெ. பராசத்தி. தாளதினுள்ளே சமைந் தமுதேசுவரி (திருமந். 1355).

அமுதை (அமுதவி) பெ. சீந்தில். (நாநார்த்த. 533) அமுதை? (அமுதவி2) பெ. கடுமரம். (முன்.)

அமுதை3 (அமுதவி3) பெ. நெல்லி. (முன்.) அமுதையூட்டுஞ்சத்து பெ. பெ. பூநாகம். (போகர் நி. 20) அமுந்திரம் பெ. முத்தக்காசு, கோரைக் கிழங்கு.( வைத். விரி. அக./செ.ப. அக. அனு.)

அமுந்திரி பெ. அரிசி. (செ. ப. அக.)

அமுர்தம் (அமிர்தம், அமிர்து அமிருதம், அமிழ்தம், அமிழ்து, அமுதம், அமுது) பெ. தேவருணவு. சங்குநிகர்த்த கண்டம் அமுர்தசங்கம் (பாரதி. தோத் திரம். 55,3).

அமுர்தமுத்திரை பெ. கையால் காட்டும் ஒரு முத்திரை. (செ . ப . அக. அனு.)

அமுர்தவிந்து பெ. சாதிலிங்கத்தில் வடித்த ரசம். (முன்.)