பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/424

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைதி2

மக்கு அடுத்த (பெரியபு. 19, 47). லும் அமைதிய (ஞானா. 32, 6). இடம் நெடிது ஆளும் அமைதியை

24).

அமையாது நுவ 2. தகுதி. அகல்

(கம்பரா. 2, 8,

கொள்வோர் அமைதி அறிந்து கொடுக்க வேண்டும் (குறள். 222 மணக்). 3. மாட்சிமை. ஐவகை மன்றத்து அமைதியும் காண்குதும் (சிலப். 6,17). அன்பினின் அளைஇய நண்பின் அமைதி யும் (பெருங்.2,8,14). அமைதிப்பத்திரப் பழு மரப் பொழில் (கம்பரா. 3, 1, 1). அது அவன் பகுதி தன் அமைதி வண்ணமே (சூளா. 58).

அமைதி' பெ. 1. (பொருள் முதலியவற்றின்) நிறைவு. அண்ணல் அம் கடிநகர் அமைதி செப்பு வாம் (சீவக. 78). கல்வி அமைதியும் அறிவும் என் னும் வேற்றுமை இவனோடில்லை (கம்பரா. 4,2, 17). உலகம் இன்புறும் அமைதி நன்றென (கச்சி. காஞ்சி. கழு. 134) 134). 2. மனநிறைவு. அமைதியுடை யராதல் பெறுதற்கரிது (குறள். 988 மணக்). அன்பு வாழ்கென்று அமைதியில் ஆடுவோம் (பாரதி. பல்

வகை. 5, 2).

அமைதி3 பெ. அசைவின்மை. ஆய்ந்தறிகின்ற பெரி யோர் சிந்தை அமைதியின் அமரும் புட்கள் (இரகு. தேனு. 47). அமைதியொடு பார்த்திடுவாய் மின்னே (பாரதி. பாஞ்சாலி 151).

அமைதி பெ. தாழ்வு, பணிவு. தொழுதகை அமைதி யின் அமர்ந்தோயும் நீயே (பரிபா. 4, 71).

அமைதி" பெ செய்கை. ஆனவன் அமைதி வல்லை அறிக (கம்பரா. 4, 10, 54). கண்ணினான் அவ் விடை செய்திடும் அமைதி கூறுவாம் (கந்தபு.5,2,

185).

அமைதி பெ. 1. காரணம். அரி எதிர்ந்து அமைதி என் என்றலும் (கம்பரா. 4, 5, 4). 2. (இலக்.) தவறா யினும் ஒரு காரணத்தால் அமைக்கை, வழுவமைக்கை. வழுவமைதி பயின்று வருதலின் (நன். 379 சங்கர நமச்.).

அமைதி' பெ. பொருத்தம். சீற்றம் ஆற்றினன் தருமத்தின் அமைதி உன்னுவான் (கம்பரா 4, 10, 105). அங்கவன் மொழிந்த பின்னை அவனையும் அமைதி கூறி (சூளா. 347).

அமைதி' பெ. (பொருந்தும்) நேரம், வேளை. எல் லோரும் வந்து அடைந்து சுற்றும் இருந்த அமைதி யினில் (கம்பரா.2, 13,69). அன்னதோர் அமைதி

294

தன்னில்

வள்ளல்

அமையப்படை

000

செவ்வேல் வருதல்

080

காணூஉ (கந்தபு. 4, 5, 210).

அமைதி பெ. வரிசை, ஒழுங்கு. வெள்ளெயிற் றமைதியானை (கம்பரா. 5, 2, 211).

அமைதிமண்டலம் பெ. சூறாவளி முதலியவையில்லாத ஆரவாரமற்ற நிலப்பகுதி. (மானிடவியல் க. அக. ப.98)

அமைநீக்கி பெ. கற்றாழை. (வைத். விரி. அக. ப. 19)

அமைப்பாளர் பெ. ஒரு நிறுவனத்தையோ நிகழ்ச்சி யையோ உருவாக்குபவர். சங்க அமைப்பாளர் விலகினார் (செய்தி. வ.).

அமைப்பான் பெ. பொருத்தமுறச் செய்பவன். சீர் முழாப் பண்ணமைப்பான் (கள. நாற்.20).

அமைப்பு பெ. 1. வழுவமைதி. இடவழுவமைப்பு (நன். 380 சங்கரநமச். உரை). 2. நடராசரது தாண்டவக் கோலத்தில் சமநிலையில் அமைந்த கை. தோற்றம் துடி அதனில் தோயும் திதி அமைப்பில் (உண்மைவி. 36). 3. (இக்) கூறுகள் அமைந்திருக்கும் இயல்பு. உடலமைப்பு (பே.வ.). அமைப்பியல் ஆய்வு (செய்தி.வ.). 4. (இக்.) நிறுவனம். நுகர்வோர்க்குரிய கழகம் என்னும் அமைப்பு (முன்.). 5. விதி. அவன் அமைப்பு அப்படித்தான் உள்ளது (பே. வ.).

அமைப்புக்கூறு பெ. ஒரு நிறுவனத்தின் (செய்தி.வ.)

உறுப்பு.

அமைப்புசமைப்பு. பெ. இயற்றலும் செயல்படுதலும். இப்படிக்கு அமைப்புசமைப்பும் அரக்கிலைச் செடி இருத்தின்றொம் (தெ.இ.க. 5,753).

பற்றிய

அமைப்புமொழியியல் பெ. பேச்சுச் சொல் அமைப்புச் சட்டநூல். (மானிடவியல் க. அக.ப. 98)

அமைப்போன் பெ. செய்பவன், கருத்தா. அமைப் போன் ஆதல் எனக்கு எங்கே (ஞானவா.நிருவா. 20).

அமைபடு-தல் 6 வி. பொருந்துதல்.

அணைபுரை

மென்மை அமைபடு பணைத்தோள் (பெருங்.2,15,

72).

அமையப்படை பெ. அவ்வக் காலத்துக்காகச் சேர்க்கப் படும் சேனைப்பகுதி. (சுக்கிரநீதி 7, 10)