பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/434

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயாமரம்

அயாமரம் பெ. அலரி. (முன்.)

அயாலி பெ. கோரை. (முன்.)

அயாவு-தல் 5 வி. வருந்துதல். மான் அயாநோக் கியர் மருங்குல்போல்வதோர் கானயாறு (சீவக.

1822).

அயாவுயிர்-த்தல் 11 வி. 1. நெட்டுயிர்த்தல். பரும் யானை அயாவுயிர்த்தாங்கு (நற். 89,8). புலம்பு அயாவுயிர்க்கும் வெம்முனை அருஞ்சுரம் (அகநா. 103, 9-10). மையல் யானை அயாவுயிர்த்தன்ன (புறநா. 261, 7). அழுதனள் ஏங்கி அயாஉயிர்த் தெழுதலும் (மணிமே.21,26). துயருற்று ஆழும் அழுந்தும் அயாவுயிர்க்கும் (சேரமான். உலா 147). அருமையின் உயிர்வர அயாவுயிர்த்து அகம் பொரு மினான் (கம்பரா. 2, 13, 59). 2. கொட்டாவி விடுதல். குஞ்சரம் அயாவுயிர்த்தனைய குய் கமழ் அடி சிலை (சீவக. 2941). 3. இளைப்பாறுதல், வருத்தந் தீர்தல். பள்ளியுட் செலவு அயாவுயிர்த்த காலை (பெருங்.1,36, 240 - 241). அமரர் கற்பம் புக்கு அயாவுயிர்த்ததன்றே (சீவக. 600). 4. இளைப்பாற்று தல். எம்மைச் சுமந்து அயாவுயிர்த்த ஆண்மை (முன். 2947). 5. தங்குதல். அருகு அயாவுயிர்ப் பின் அல்லால் அரண் பிறிது ஆவது. ண்டோ (சூளா. 1863). 6.சிந்துதல். நறவு அயாவுயிர்க்கும்

மாலை (சீவக. 1125).

...

அயாவுயிர்ப்பு பெ. தளர்ச்சி நீங்குகை. மதுகை மைந் தர்க்கு அயாவுயிர்ப்பு அளித்ததம்மா (கம்பரா. 2,

12, 56).

அயாவுறு-தல் 6 வி. துன்புறுதல். உலகு மிக வருந்தி அயாவுறு காலை (நற். 164,3).

அயானம்

பெ. இயல்பு. (யாழ். அக. அனு.)

அயிக்கம் (அயிக்கியம், ஐக்கியம்) பெ. ஒன்றாந்தன்மை. அங்கலிங்கம் அயிக்கம் இது என (பிரபு. லீலை 23, 11). சீவபர அயிக்கம் மேவுற்ற சிவயோகம் (திருக் காளத். பு. 18, 34).

அயிக்கவாதசைவம் பெ. சைவத்தின் கள் ஆறனுள் ஒன்று.

அகப்புறச்சமயங் (சி.போ. பா. அவை. சிவஞா.)

அயிக்கியம் (அயிக்கம், ஐக்கியம்) பெ. ஒன்றாந் தன்மை. அத்துவிதமான அயிக்(கி)யவனுபவமே (தாயுமா. 43,293). ஆவியிரண்டும் அன்று அபே தம் என்றே ஆகமவேதம் எல்லாம் அயிக்கியபதத் தினாலே... உணர்த்திடும் (சிவதரு. 10, 108).

30

4

அயிணம்

அயிகம்' (அயாகம்) பெ. ஊமத்தை. (மலை அக.)

அயிகம்' (அயிகா2) பெ. கருவூமத்தை.

தொ.)

அயிகா1 பெ. இலவு. (முன்.)

(மரஇன.

அயிகா' (அயிகம் 2) பெ. கருவூமத்தை. (முன்.)

அயிங்கவலை பெ.நீலங்கலந்த பச்சை சூடைமீன். (செ.ப.அக.)

நிறமுள்ள

அயிங்கிசை (அகிஞ்சை, அகிம்சை, அயிங்கிதம், அயிங்கிதை, அயிஞ்சை, அயிம்சை) பெ. கொல் லாமை. அயிங்கிசை பொறையே

(சிவதரு. 5, 3 பா. பே.).

அயிங்கிதம் (அகிஞ்சை, அகிம்சை,

மெய்ம்மை

அயிங்கிசை,

அயிங்கிதை, அயிஞ்சை, அயிம்சை,) பெ. கொல் லாமை. அற்புதன் அமலன் கூறும் அறம்பல அயிங் கிதாதி (சிவதரு. 5, 2).

அயிங்கிதை (அகிஞ்சை, அகிம்சை, அயிங்கிசை, அயிங்கிதம், அயிஞ்சை, அயிம்சை) பெ. கொல் லாமை. இதயத்தினுள்ளே அயிங்கிதை முதலிய மலர் கொண்டு (சிவதரு.3,25 உரை). அயிங்கிதை மெய் ஆதி இயமம் (அட்டாங், குறள் 3).

அயிச்சுரியம் (அயிச்சுவரியம், அயிச்சொரியம், ஐசு வரியம்) பெ. செல்வம். மன் அயிச்சுரியம் வழங்கு தன்மையினால் மாசறு விபூதி (வாயுசங். பாசு பத. 34).

அயிச்சுவரியம் (அயிச்சுரியம், அயிச்சொரியம், ஐசு வரியம்) செல்வம். மெச்சு அயிச்சுவரியம் உள் வேள்விநாயகற்கு (நல். பாரத. காருட. 24).

அயிச்சொரியம் (அயிச்சுரியம், அயிச்சுவரியம், ஐசுவரி யம்) பெ. செல்வம். தத்துவம அதன் அயிச்சொரி யம் (கூர்மபு. பூருவ. 1,34).

அயிஞ்சி பெ. நிலப்பனை. (மலை அக.)

அயிஞ்சிரம் பெ.

கருஞ்சூரைச்செடி.

(மர இன. தொ.)

அயிஞ்சை (அகிஞ்சை, அகிம்சை, அயிங்கிசை, அயிங் கிதம், அயிங்கிதை, அயிம்சை) பெ. கொல்லாமை. அயிஞ்சையே பரம தன்மம் (பிரபோத . 18, 4).

அயிணம் பெ. மான்தோல். (கதிரை. அக.)