பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/437

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயிராவதன்

அயிராவதன் பெ. அயிராவதம் என்னும்

யானைக்

குரியவனான இந்திரன். ஆகண்டலன் அயிராவதன் வலாரி இந்திரன் பெயரே (பிங். 160).

...

அயிரி பெ. எருமைநாட்டில் (மைசூரில்) உள்ள ஆறு. பேரிசை எருமை நன்னாட்டுள்ளதை அயிரியாறு இறந்தனராயினும் (அகநா. 253,19-20).

அயிரி' பெ. மீன் முள் அரிந்திடும் கத்தி. அயிரி மீன் முள் அரிந்திடும் கருவி (பிங்.1129).

அயிரி' பெ. நுண்மணல்.

(வட.நி.33)

அயிரி பெ. நெட்டிப்புல். (வின்.)

அயிரியம் பெ. நெட்டி. (வைத். விரி. அக.ப. 21)

அயிரை!(அசரை 1)பெ.1.சேரநாட்டில்உள்ளமலை.நேருயர் நெடுவரை அயிரைப்பொருந (பதிற்றுப். 21, 26). 2. அயிரை மலைக்குரிய துர்க்கை. உருகெழு மரபின் அயிரை பரவியும் (முன்.90, 19).

அயிரை' பெ. சேரநாட்டில் உள்ள ஆறு. உருகெழு மர பின் அயிரை மண்ணி (சிலப். 28, 145).

அயிரை' பெ. கருமணல். அயிரை வார்கரைக் குட கடல் திரையொடும் (சூளா.879).

அயிரை+

பெ. அசறை, நொய்ம்மீன். சிறுவெண் காக்கை அயிரை ஆரும் (ஐங்.164) அயிரை யும் பிறவும் அல்கிரை அமைத்து (பெருங்.1, 73). பற்றா அயிரை கெண்டை கெளிறு (முக்கூடற்

51, 9).

1

51,

அயில்' பெ. 1. கூர்மை. அறைவாய்க் குறுந்துணி அயில் உளி பொருத (சிறுபாண். 52). ஆர் ததும் பும் அயில் அம்பு (பரிபா. 18,30). ஆண்மகன் கையில் அயில் வாள் (நாலடி.386). அயிலுடை 1 வேலோர் அனல்புல்கு கையின் அம்பு ஒன்றால் (தேவா. 1,100, 7). அயில்வேல் ஆண்மை (பாரதம். 9, 1, 4). பிடித்து அயிற்பகழி தொடுத்திடாது (கச்சி. காஞ்சி. திருக்கண். 182). 2. இரும்பு. அயி லாலே போழ்ப அயில் (பழமொ.நா.337). அயிலிற் புனைந்த வெயில் புரை ஒள்வாள் (பெருங். 3,17, 244). 3. வேல். அயில் திணி நெடுங்கதவம் (கலித். 135, 3). தீவாய் அயில் ஏந்தி (மெய்க். பாண்டியர் 1, 93). அயிலுடைத் தடக்கை வென்றி அண்ணலார் அருளினாலே (பெரியபு. 10, 12). அமர பெ. சொ. அ.1-20 அ

.

307

4.

...

அயிலவன்

னான தாமா அயிலை வீமன் மேல் வீச (பாரதம். 9, 1, 94). அயில் புரை நெடுங்கண் (ஞானா. 40). அறுவை மருத்துவக் கத்தி. அயிலரி அரலை விழுப்புண் (முன். 37). 5. கலப்பை. (உரி. நி. 11, 18). 6. கொடுமை. அயில் இயல் காட்டுள்

வீழ்ந்தேன் (சீவக. 1580).

அயில் 2 பெ. விரை. அயிலே விரையும் இரும்பும் கூர்மையும் (அக. நி. அம்முதல்.180).

அயில்' பெ.

முசுமுசுக்கை. (பச்சிலை. அக.)

அயில் பெ. கோரை. (மலை அக.)

அயில் பெ. அழகு. அயில் மலி நாரசிங்கன் (திருக் கோவ. பு. 17,97).

அயில்6 பெ. அனுபவம், அனுபவிக்கை. ஆன்மா அயில் செய் சிற்றறிஞன் மாசன் (சிவப்பிர. விகா.

111).

அயில்- தல்

3வி.

1.உண்ணுதல். கரும்பின் கால் எறி கடிகைக் கண் அயின்றன்ன (குறுந். 267). பால் விட்டு அயினியும் இன்று அயின்றன (புறநா. 77, 7-8) அந்நிலை அயின்றனர் (பரிபா.

5, 45).

அலை கடல் நஞ்சு அயின்றானை (தேவா. 6,88,1). அயின்றனை கிழங்கும் காயும் அமுது என (கம்பரா. 2, 12, 40). அடிசில் அயில்வோர் தம்மை அயில்வித்து (திருவிளை. பு. 12, 60). 2. பருகு தல். வழைச்சு அறுசாடி மட்டு அயின்று (சீவக. 1614). பால் அயில் உற்றிடு பொழுதத்தினில் (கந்த 4. 1, 13, 33). 3. அனுபவித்தல். ஆற்று நல் வினைப் பயன்பல பயன்பல அயின்றனர் ஆங்காங்கு (செ.

பாகவத. 5,3,59).

அயில்வார் பெ. ஆங்கிலேயரின் முதல் வரித் திட்டத்திற் குப் பின் வரி விதித்த நிலங்கள். (செ.ப. அக.)

அயில்வார்நன் செய் பெ. புன்செய்யைத் திருத்திய பின் நன்செய்யான நிலம். (வருவாய்த்துறை. க. சொ.)

அயிலம்1 பெ. இலுப்பை வேர்ப்பட்டை. (இராசவைத் /செ.

ப. அக.)

அயிலம்' (அகிலம் ) பெ. 2) உலகம். அயிலம் புரக்க

(சிலேடை. ப. 267).

அயிலவன் பெ. (வேலுடைய) முருகக்கடவுள். தினை காவல் மயிலை மணந்த அயிலவ (திருப்பு.1053).