பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/438

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயிலாதரன்

அயிலாதரன் பெ. முருகக்கடவுள். இலங்கு அயிலா தரன் ஐங்கரன் மோடி (திருவரங்.அந்.23).

அயிலான் பெ. (வேலுடைய) முருகக்கடவுள். புத்திர ராம் தார்க்குஞ்சரம் அயிலான் தாதை (சிங். சிலே. 48). போர்வளர் தடங்கையுறும் அயிலான் (காவடிச் சிந்து 2).

அயிலி பெ. சதுரக்கள்ளி. வச்சிராங்கம் கண்டீர்வம் அயிலி சதுரக்கள்ளி (பிங். 2742)

...

அயிலிடம் பெ. சிற்றரத்தை. (மலை அக.)

அயிலுழவன் பெ. வேல் ஏந்திய வீரன். (உரி. நி.2,

12)

அயிலேயம் பெ. முசுமுசுக்கை. வான நாடு அயிலேயம் (தைலவ. 11),

அயிலை பெ. ஒரு வகை மீன். வெண்சோறு அயிலை துழந்த அம்புளிச் சொரிந்து (அகநா. 60, 5).

அயிற்கடு பெ. அங்குசம். (சங். அக.)

அயிற்கதவம் பெ. வேல்தைத்த கதவு. அயிற் கதவம் பாய்ந்து உழக்கி (முத்தொள்.71).

அயிற்படை பெ. வேற்படை. அங்கையின் அயிற்படை யர் ஆணுடையர் பூணர் (சூளா. 861). வடியுடை அயிற்படை மன்னர் (கம்பரா. 2, 13, 22).

அயிற்பெண்டு பெ. வரிக்கூத்து வகை. பிச்சி திருக் குன்று அயிற்பெண்டு இருள் முகத்துப்பேதை' .. வரிக்கூத்தின் குலம் (சிலப். 3,13 அடியார்க்.).

...

அயிறல் பெ. உண்டல். அயிறல் மிசைதல் அருந்து உண்டல் (பிங். 1998). சிங்க ஊன்

தல்

...

...

அயிற

லைத் தொடர் வாயினான் (கம்பரா. 6, 15, 66). தேனொடு பால்தயிர் அயிறல் மேயினான் (கந்தபு. 4, 12, 27). அயிறலைத் தொடங்கி எயிறலைத் திருத் தலின் (திருவாரூர் நான். 17).

அயின்றாள் பெ.

அன்னை.

அயின்றாள் என்பது அன்னையின் பேராம் (அக. நி. அம்முதல். 13).

அயினி' பெ. 1. (பொதுவாக ) அரிசி உணவு, சோறு. நெல்லின் அயினிமா அருந்த (நற். 254, 6-7). நன்னற்கும் அயினி சான்ம் (மலைபடு. 467). முகிழ்த்

808

அயுதம்

தகைச் சாலி அயினி பொற்கலத்தேந்தி (சிலப். 22, 47-48). அடிசில் அயினி ஆர்பதம் அயின்று (பெருங். 2,5,185).இளங்கதிர்க் கலத்தின் ஏந்த அயினி கண்டு அமர்ந்திருந்தான் (சீவக. 2469). பூவும் பூ நிற அயினியும் தீபமும் (கம்பரா. 5, 11, 80). புசி யாது ஒருவன் பசியால் வருந்துதல் அயினியின் குற்றம் அன்று (பட்டினத்துப். திருவிடை. மும். 16,35). நரிக்கு ஆர் அயினியை (ஞானா. 50, 12). 2. (சிறப் பாக) மென்மையான குழந்தைஉணவு. பால் விட்டு அயினியும் இன்று அயின்றனனே (புறநா. 77, 7-8). 3. நீராகாரம். அயினி வடிவே புவனையாம் (தேரை.

வெண். 211).

2

அயினி' பெ. (கண்ணேறு கழிக்கச் (கண்ணேறு கழிக்கச் சுற்றும் அரிசி கலந்த மஞ்சள் நீராகிய) ஆலத்தி. மங்கல அயினி மரபுளி உறீஇ (பெருங். 2, 3, 161). பவனி வரும் போது அயினி சுற்றி (திருமலைமுரு. பிள். 73). சுரத மடவார் அயினி சுற்ற (மான். தூது 241).

அயினிநீர் பெ. ஆலத்தி நீர். போதுடன் அயினிநீர் சுழற்றிப் போற்றினர் (கம்பரா. 1, 10, 51). அயினி நீரால் கண்ணெச்சிற் கழுவினரால் (சீறாப்பு. 1,

22, 5),

அயினேக்கை பெ. அங்கு. (இலங்.வ.)

அயுக்தம் (அயுக்தி, அயுத்தம்) பெ. பொருத்தமின்மை, நூலும் நாரும் புனைந்தாற் போல அயுக்தமாத லின் (நீல.207 உரை).

அயுக்தி

(அயுக்தம்,

பெ. அயுத்தம்)

பொருத்த

மின்மை. அயுக்தி மேலே சொல்லுவர் (முன்.).

அயுகலம் பெ. தனிமை. (யாழ். அக. அனு,) அயுட்சடம் பெ. ஏழிலைப்பாலை. (மரஇன .தொ.)

அயுத்தம் (அயுக்தம், அயுக்தி) பெ. பொருத்தமின்மை. அயுத்தமெனும் சுரிகை ஒருபால் வீக்கி (பிரபோத. 34, 11). தீதில் ஒருங்குடன் தோற்றம் யுத்தாயுத்தம்

(வீரசோ. 166).

அயுதம் பெ. பதினாயிரம். அண்டவர் வன்மையால் அயுதயோசனை உண்டது கொழுங்கனல் (கந்தபு. 4, 6, 51). உலகு அளிக்கும் நாள் குறைகொள் ஆண்டு அயுதம் சென்றது (இரகு. திருவவ. 1). வருடம் அயுதம் சொலினு மாற்றாது (வள்ள. சாத், 5, 14).