பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/441

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்ச்சனாபாகம்

போது சுழுமுனை நாடி வழியாக வெளிப்பட்டு மோட் சம் செல்லும் வழி. அர்ச்சராதி சென்று (பிரபோத. 45, 10 பா . பே.).

மார்க்கத்தில்

அர்ச்சனாபாகம் பெ.

- அர்ச்சனாபோகம்.

கோயில்

அர்ச்சனாபோகம் (அர்ச்சினாபோகம்) பெ. அர்ச்சகருக்கு விடப்பட்ட மானியம். அர்ச்சனா போகம் செய்த நிலம் (தெ. இ.க.12,83).

அர்ச்சனாவிபவகாணி பெ. கோயில் அர்ச்சகருக்கு விடப் பட்ட இறையிலி நிலம். (செ. ப.அக.அனு.)

அர்ச்சனாவிருத்தி பெ.அர்ச்சனாபோகம். (சங். அக.) அர்ச்சனியம் பெ. வணக்கம். (செ. ப. அக. அனு.)

அர்ச்சனை (அரிச்சனை, அருச்சனை )

பெ. மலர்

முதலிய இட்டு மந்திரம் கூறிச்செய்யும் வழிபாடு. அவிக்கொண்ட சோதிக்கு ஓர் அர்ச்சனை தானே (திருமந். 1243). நெய்யும் ஆட்டி அர்ச்சனைகள். செய்து (தேவா. 4, 65,6). பாதம் அர்ச்சனை புரிவதும் பணிவதும் என்றே (பெரியபு. 26, 5). செவ்விது அர்ச்சனை செய்தனர் (கந்தபு. 1, 14, 123). சைவ சவுராதி சண்டாந்த அர்ச்சனைகள் (மதுரைச் உலா 47). மூன்று காலமும் வில்வ அர்ச் சனை தினம் நடத்தி (செங்கோட். பள். 47).

அர்ச்சனைத்தட்டு பெ. அர்ச்சனைப் பொருட்களுடன் கோயிலுக்கு எடுத்துச் செல்லும் தட்டு. குருக்கள் அர்ச்சனைத் தட்டை வாங்கினார் (பே.வ.).

அர்ச்சாவதாரம் பெ. (வைணவம்) பரம், வியூகம், விப வம், அந்தர்யாமி, அர்ச்சை என்னும் ஐந்து நிலைகளுள் திருமால் திருப்பதிகளில் திருவுருவங்களாய் எழுந்தருளி யிருக்கும் நிலை. அர்ச்சாவதாரத்துக்குப் பொற் கால் பொலிய விட்ட இடம் (அமலனாதி. 1 பெரிய.). அர்ச்சாவதாரம் ஆகிச் சேவித்தற்கு எளிதாய்

(மாறனலங்.173 உரை).

அர்ச்சாவிக்கிரகம் பெ. (வைணவம்) வழிபடு தெய் வத்திற்குரியதிருமேனி. சடகோபனை அர்ச்சாவிக் கிரகமாகப் பிரதிட்டிப்பித்து (கோயிலொ.7).

அர்ச்சி -த்தல் 11 வி. மலர் இட்டு மந்திரம் ஓதிப்பூசித் தல். அஞ்சலியோடும் கலந்து அர்ச்சித்தார்களே (திருமந். 1827). அர்ச்சித்த கடவுளர் (கலித். 93, 23 நச்.). அடி அர்ச்சித்த மணிவண்ணற்கு அருள் செய்தவன் (தேவா. 5,59,3). ஆதியை அர்ச்சித்

3

11

அர்ச்சினாபோகம்

...

தற்கு அங்கமும் (களிற்று. 17). அர்ச்சித்து உன் புகழ்பாடி (திருப்பு. 29). அர்ச்சிப்பார் இந்நூல் அலரினால் (சைவ. நெறி பொது. 566). பரிவு கொண்டு அர்ச்சிக்க நிமலனே அருள் புரிகுவாய் (அறப்பளீ. சதி. 19). நாராயணனை அன்புடன் அர்ச்சித்து வழிபாடாற்றுவர் (குசே. 32 சங்கு.).

அர்ச்சி பெ. விண்ணப்பம். அர்ச்சி கொடுத்தேன் அவதி மாற்றினேன் (நாஞ். மரு. மான். 9, 470).

அர்ச்சிசு பெ. மோட்சத்திற்குச் செல்வோரை முதலிற் கண்டு உபசரித்து வழி நடத்தும் தெய்வம். முற்பட அர்ச்சிசைக் கிட்டி அவன் சிறிதிடம் வழிநடத்த ... அவ்வருகே போய் அர்ச்சி. பிர . 2).

...

(அட்டாதச.

அர்ச்சிடம் பெ. காலாக்கினி ருத்திரரின் அதிகாரத்துக் குட்பட்ட புவனம். (சைவபூ. சந். 57)

அர்ச்சிதன் பெ. பூசிக்கப்படுவோன். ஆதிநாதன் அம ரர்கள் அர்ச்சிதன் (தேவா. 5,65,7).

அர்ச்சிதாசுது பெ. எழுத்து மூலமான விண்ணப்பம்.

(வட். வ.)

அர்ச்சிதார் பெ. விண்ணப்பம் செய்வோன். (செ. ப.

அக.)

அர்ச்சிதாவா பெ. பிராது விண்ணப்பம். (வட்.வ.)

அர்ச்சியசிட்டர் பெ. (கிறித்.) பரிசுத்தவான்கள். (கதிரை.

அக.)

அர்ச்சியம் பெ. பூசிக்கத்தக்கது.

(சங். அக.)

அர்ச்சியன் பெ. (கிறித்.) பரிசுத்தவான். மகிழ் அர்ச் சியனும் ஆவன் என்றார் (ஞானா. ராய. 5, 37).

அர்ச்சிராதிகதி பெ. பரமபதத்துக்குச் செல்லும் வழி அர்ச்சிராதிகதி... திருவேங்கட யாத்திரை போலே போகை (திருப்பா. 8 மூவா.).

அர்ச்சிராதிமார்க்கம்

பெ.

(அர்ச்சராதிமார்க்கம்) மோட்சத்தை அடைகின்ற ஆன்மா உடலை நீங்கும்போது சுழுமுனை நாடி வழியாக வெளிப்பட்டு மோட்சம் செல் லும் வழி. அர்ச்சிராதி மார்க்கமே பெருவழியாக வும் (அட்டாதச. அர்ச்சி. பிர. 1).

அர்ச்சினாபோகம் (அர்ச்சனாபோகம்) பெ.

கோயில்

அர்ச்சகருக்கு விடப்பட்ட மானியம். இவர்களுடைய