பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/448

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரக்குப்புதை -த்தல்

அரக்குப்பு தை -த்தல் 11 வி. நெற்களத்தில் சூடிடுவதற் குத் துணைவேண்டித் தெய்வங்களை நேர்தல். (இலங்.

வ.)

அரக்குப்பூச்சி பெ. ஒருவகைப் பூச்சி. (கலை. அக. 2 ப.

104)

அரக்குப்பூமி பெ. சாதிலிங்கம் வழித்த பூமி. அரக்குப் பூமி ஆயமொடு ஏறி (பெருங். 1,34,226).

அரக்குப்பொறி பெ. அரக்கினால் இடப்படும் முத்திரை. ஓலை அரக்குப் பொறி ஒற்றி (பெருங்.1,37,

20 8-209).

அரக்குமஞ்சள் பெ. கருஞ்சிவப்பு மஞ்சள். (நாட்.வ.)

அரக்குமாடு பெ. சூட்டிற்கு மத்தியில் நின்று கதிரைத் துவைக்கும் கூடாமாடு. (இலங்.வ.)

அரக்குமாளிகை பெ. (காப்.) துரியோதனன் பாண்ட வரை வஞ்சனையாற்கொல்ல எளிதில் உருகும் அரக் கால் செய்வித்த வீடு. மற்றவருடன் அரக்குமாளிகை இப்படியினால் இயற்றிய (பாரதம். 1, 3, 123).

அரக்குருக்கு பெ. அரக்கின் குழம்பு, அரக்குருக்கூட் டிய அரத்தக் கஞ்சிகை (பெருங்.1,38,252)

அரக்குவளையல் பெ. பழங்காலத்தில் மகளிர் அணிந்த அரக்கினால் இயன்ற கைவளையல். (நாட். வ.)

அரக்குவிசிறி பெ,

சேலைவகை. (நாட்.வ.)

அரக்குவை-த்தல் 11 வி. 1. அரக்குமுத்திரை வைத் தல். (சங். அக.) 2. சூட்டுக்களத்தில் காவல்செய்தல். (இலங்.வ.)

அரகசா பெ. வாசனைக் குழம்புவகை. (நாட்,வ.) அரகத்து பெ. மன வருத்தம் விளைக்கும் பேச்சு. அரகத்து பேசி (தாசீல்தார் நா.15/செ.ப. அக. அனு.).

அரகம் ! பெ. போர்க்களம். அரகம் முந்தின நெடுங் கவியின் ஆக்கையில் (கம்பரா. 6, 19, 42).

அரகம்' பெ. சத்தம், ஒலி. சந்தையில் அரகம் சகிக்க முடியவில்லை (கோவை வ.).

அரகம்' பெ. நீர்ச்செடிவகை. (சாம்ப. அக.)

அரகர பெ. சிவனைச்சுட்டும் அடுக்குத்தொடர். வந்து எதிர் அரகர என்றே சிவமுன் பயில்மொழி பகர்

31

8

அரங்க

கின்றன (பெரியபு. 21, 160). ஓதினான் ஒலியோ( அரகர என்றே உளமலி தயவுடன் (ஞான. உபதேச

731).

அரகரதீர்த்தம் பெ. அரகரன் என்பவன்

உண்டாக்கிய

தீர்த்தம். அரகர தீர்த்தத்தில் அமர்ந்தருள்வான் (திருக்காளத். உலா 35).

அரகரபுத்திரன் பெ. (பிச்சாடன வடிவச் சிவபெரு மானுக்கும் மோகினி அவதாரத் திருமாலுக்கும் பிறந்த) அய்யனார். (பே.வ.)

அரகரா பெ. சிவனைக் குறிக்கும் தொடர். அரகரா என்பது அறிகிலேன் (பட்டினத்தார்.

அருட்பு. பூரண. 95).

பூரணமே

அரங்க வி. அ. முழுதும். மரத்தை அரங்கத் தறி (வின்.).

அரங்கக்கூத்தி பெ. 1. நாடகசாலையில் ஆடும் பெண். அரங்கக்கூத்தி சென்று ஐயம் கொண்டது (மணிமே. 24,22). 2. பரத்தை. அரங்கக்கூத்திகண் அன்பின் மனையவள் துறந்து செல்பவர் (சீவக. 1557).

அரங்கணி பெ. நீர் வற்றிய கால். (வட்.வ.)

அரங்கத்தனம் பெ. தவற்றினை மறைத்து நேரடியாகப் பேசமுடியாது அடங்கியிருத்தல் (மதுரை வ.)

சது

அரங்கநாதன் பெ. திருவரங்கத்துத் திருமால். முகன் பிதாவாம் அரங்கநாதன் வாழ்தமனிய விமானத்தை (வரத. பாகவத.வைந.46).

அரங்கபூசை பெ. 1. பந்தய விளையாட்டின் தொடக் கத்துச் செய்யும் பூசை. சினந்தணிந்து அரங்கபூசை செய்வன் (பாரதம். 1, 3, 65). 2.நாட்டிய நாடகத் தொடக்கத்திற் செய்யும் பூசை. (சங். அக.) 3. போர்த் தொடக்கத்துப் படைக்கலக் கருவிகளுக்குச் செய்யும் பூசை. (முன்.)

அரங்கபூமி பெ. 1. போர்க்களம். (கதிரை. அக.) 2. நடிக்கும் கூடம். (முன்.)

அரங்கம் 4(அலங்கம்*) பெ. 1.நாடகமாடும் இடம். ஆடுவார் அரங்கத் தாளமும் (பரிபா. 8,109). விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கத்து (சிலப். 3,113). மயிலாடு அரங்கின் மந்தி காண்பன (மணிமே. 4,6). ஆடன் மகளிர் அரங்கம் புல்லென (பெருங். 1, 44,