பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/453

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசவீதி

அரசவீதி பெ. 1. அரசன் வாழும் அரண்மனை யுள்ள வீதி. அரசவீதிகள் புலத்திடைத் தாமரை பூத்த போலுமே (சூளா. 74). 2. அரசன் உலா வரும் வீதி. (நாட். வ.)

அரசவுழிஞை பெ. அரசன் புகழ் கூறும் புறத்துறை. (புற. வெண்.100 தலைப்பு)

அரசவை

பெ. அரசன் வீற்றிருக்கும் சபை. அரசவை யிருந்த தோற்றம் போல (பொருந. 55). அரசவை நின்றும் ... முனிவன் எய்தினான் (கம்பரா. 2, 4, 157). அரசவை விடுத்த வேந்தன் (சூளா. 110). சூதினால் அரசவையில் வஞ்சித்துச் சூதாடி (பாரத

வெண்.34).

அரசளி-த்தல் 11 வி. அருளோடு அரசாளுதல். திருவா ரூர் அரசளிப்பவர் (பெரியபு. 28,506).

அரசன் (அரயன், அரைசன், அரையன் 1) பெ. (குலப்பிறப்புரிமையால்) நாட்டை ஆள்பவன். முறையுடை அரசன் செங்கோல் (குறுந். 276). சென்றாள் அரசன் செழுங்கோயீல் வாயில் முன் (சிலப்.19,75). அயோத்தி அரசனைப் பாடிப்பற (பெரியாழ். தி.3,9,8). அல்லல் உற்று அழுபவர்க்கு

ரசன் சொல்லினான் (சீவக. 2982). சுடர்முடி அரசன் செம்மல் (சூளா. 319). அரசரில் பிறந்து பின் அரசரில் வளர்ந்து ... பேரரசியான நீ (கம்ப ரா.2, 2,69). காதலால் அரசன் உற்ற வருத்தமும் (பெரியபு. 11,26), அரசன் மற்றவன் தன்னொடும் (யசோதர. 9). தேவருக்கு அரசனாய் விசும்பின் மேல் செல (கலிங். 257). அரசனும் உணர்ந்து ... உரை செய்ய வேண்டும் என்றுரைப்பர் (பாரதம். 1, 1, 55). அரசன் ஏவலும் அவுணர்கள் ... முரசம் ஏற்றினார் (கந்தபு. 2, 12, 10). அரசனை எண்ணி இவ்வாறு அழும் இராகவனை நோக்கி (இராமநா.

2, 29).

600

அரசன்' பெ. வியாழன். மேலே அரசன் உலகு ஈரிலக்கம் (கந்தபு. 2, 11, 63).

அரசன்' பெ. சீவன். அத்துள்ளே வாழும் அரசனும் (திருமந்.189).

அங்குளன்

அரசன் + பெ.

5

துருசு. (வைத். விரி. அக. ப. 21)

அரசன் பெ. கார்முகில் பாடாணம்.

(சங். அக.)

அரசன்' பெ. பாணகெந்தகம். (முன்.)

அரசன்' பெ. பூவரசு. (மருத். க. சொ. ப. 4)

பெ. கொ.அ 1-21 அ

323

அரசன் பெ. கோவைக்கொடி. (முன்.)

-9

அரசாணி2

அரசன் பெ. (அ + ரசன்) ஒன்றை விரும்பி மகிழும் தன்மை இல்லாதவன், இரசமற்றவன். அடிமை யேன் நான் அரசன் (அண்ணாமலை. வர.).

அரசன்நோய் பெ. அண்ணீரகச் சுரப்பி சுரக்காததனால் ஏற்படும் ஒரு நோய். (மருத். க.சொ.ப. 4)

அரசன்விருத்தம் பெ. அரசன் சிறப்பைப் பத்துக் கலித் துறை முப்பது விருத்தம் முப்பது கலித்தாழிசை ஆகியவற்றால் பாடும் ஒருவகைச்

(தொன்.வி.283 உரை)

சிற்றிலக்கியம்.

அரசன்விரோதி' (அரையன் விரோதி) பெ. கோவைக்

கொடி. (வாகட அக.)

அரசன்விரோதி2 பெ. பூவரசு. (சங். அக.)

அரசனம்1 பெ. அரசமரம். (மரஇன. தொ.)

அரசனம்' பெ. அரத்தை. (முன்.)

அரசனிருப்பு பெ. மன்னன் தங்குமிடம், இராசதானி. பாக்கம் என்பது ஒரோ வழி அரசனிருப்புக்கும் பெயராம் (பதிற்றுப். 13, 12 உரை).

...

அரசாங்கம் பெ. 1. அரசர்கள் ஆட்சி செலுத்துதற்குரிய உறுப்புக்கள். (செ. ப. அக. அனு.) 2. அரசியல் துறை கள். (முன்.) 3. (இக்.) அரசு. 3. (இக்.) அரசு. அரசினுடைய ஓர் இயந்திரம் அல்லது அமைப்பே அரசாங்கம் ஆகும்

(அரசியல் 11 ப. 41).

அரசாங்கயோசனை பெ. அரசு முன் ஆய்வுக்கு மேற் கொள்ளும் திட்டங்கள். (ஊரகத்துறை. க. சொ. ப. 22)

அரசாட்சி பெ. 1. அரசாளுகை. யானாம் இவ்வரசு ஆள்வென் என்னே இவ்வரசாட்சி (கம்பரா. 6, 37, 221). அருமந்த அரசாட்சி (பெரியபு. திருநகரச். 44). 2. (இக்.) அரசியல் சட்டப்படி ஆளும் உரிமை. மக்கள் தேர்ந்தெடுத்த கட்சிக்கு அரசாட்சி (செய்தி.வ.). 'அரசாணி1 பெ. 1. திருமணச் சடங்கில் நடும் அரசங் கொம்பு. தேவி அரசாணியை வழிபட்டு (பெரியாழ். தி,3,8,3). 2. அரசங்கொம்புக்கால் கட்டிய தூணு டைய மேடை. (யாழ். அக.)

(நூ.

அரசாணி2 பெ. அரசி. அல்லியரசாணிமாலை பெ.). நீயே மனையாட்டி நீயே அரசாணி (பாரதி. குயில்.9,100)