பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/455

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசிரு-த்தல்

அரசிரு-த்தல் 12 வி. 1. அரசனாக வீற்றிருத்தல். தென் னரசு ஈன்ற கன்னிப்பெண் அரசிருந்து நேமிஉருட் டிய பெருமை சொல்வாம் (திருவிளை. பு. 4, 43). 2. ஆட்சிபுரிதல். வெங்கனல் அரசிருந்த காட்டி னில் (கம்பரா. 1, 7, 12).

அரசிலக்கணம் பெ. நாட்டைப் ஆள்பவர்க்குரிய பண்பு கள். நித்தியகருமம் அகன்றுவாளா இருந்திடுதல் அரசிலக்கணம் அன்று என (மகா. துறவு 31).

அரசிலி பெ. தேவாரப் பாடல்பெற்ற நடுநாட்டுச் சிவத் தலம். ஆடல்மாசுணம் அமைத்த அடிகளுக்கு இடம் அரசிலியே (தேவா. 2,95,1).

அரசிலை பெ. 1. அரசமரத்தின் இலை. (நாட். வ,) 2. (அரச இலை வடிவில் செய்து பெண்குழந்தை களின் அரையில் கட்டும்) அரைமூடி. பின்னல் துலங்கும் அரசிலையும் (பெரியாழ். தி. 1, 8, 3). அல்குல் தொடக்குறு காஞ்சித்தொடுத்த அரசிலை (பட்டினத்துப். அந். 43). முத்தில் கோத்த மாங்காய் இரண்டும் அரசிலை ஒன்றும் (தெ.இ.க. 8, 234). 3. அல்குல். அரைதனில் உடைதனை அவிழ்த்து ஆங்குள அரசிலை தடவியும் (திருப்பு.67). 4. எருத்தின் தலையில் அணிவிக்கும் அரச இலை வடிவ அணி. அரசிலை ஒளிபெற மிளிர்வதோர் சின முதிர்விடை {தேவா. 3, 86,2).5. மிருகங்களுக் கிடும் சூட்டுக்குறி. (சங். அக.)

...

அரசிலைக்கரண்டி பெ. கொத்துக்கரண்டி. (வட். வ.)

அரசிலைத்தூக்கம் பெ. (அரசிலை போன்ற வடிவில் பொன் அல்லது வெள்ளியில் செய்து தொங்கவிடும்) அரைமூடி. (முன்.)

அரசிலைத்தொங்கல் பெ.அரசிலைத்தூக்கம். (முன்.)

அரசிலைப்பஞ்சாயுதம் பெ. சங்கு, சக்கரம், வாள், கதை, வில் ஆகிய திருமாலின் ஐந்து படைகளையும் காப்புக் காகச் சிறியனவாகச் செய்து அரசிலை உடன் அணிந்து கொள்ளும் அணி. (இலங்.வ.)

அரசிளங்குமரன் பெ. அரசகுமாரன். ஆடல் அம் புரவி வல்ல அரசிளங்குமரன் (சூளா.319).

அரசிறை பெ. 1. அரசனுக்குச் செலுத்தவேண்டிய வரி. அரசி ைதிறையே (திவா. 1915). 2. அரசர்க்கு

.

325

அரசு1

அரசன், சக்கரவர்த்தி. அரசிறை அரசரொடு எழுத லும் (சூளா. 935).

அரசினம் பெ. மன்னர் கூட்டம். மோதினர் அரசி னம் மகிழ்வுறவே (பாரதி. பாஞ்சாலி. 36).

அரசு1 (அரைசு) பெ. 1. அரசன். அரசுபட அமா உழக்கி (மதுரைக். 128). மன்பதை பெயர அரசு களத்து ஒழிய (பதிற்றுப். 77, 3). அறநெறி முதற்றே அரசின் கொற்றம் (புறநா. 55,10). அங்கண்மா ஞாலத்து அரசு (முத்தொள். 6). முறையின்றி ஆளும் அரசு இன்னா (இன். நாற்.5). தனிமுடி கவித்து ஆளும் அரசினும் (தேவா. 5,14,10). உத் தரகோச மங்கைக்கு அரசின் சீரடியார் (திருவாச. 6,48). அருமணிப்பைம்பூண் அரசகத்தடைந்து (பெருங்.3,3,106). 106). அந்தரஉணர்வு நூலா அர செனும் உருவு கொண்ட எந்திரம் (சூளா.565). சீவரமங்கை அரசே (நூற்று. அந். 58). 2 அரசனது தன்மை. மான முடையது (அரசு அரசனது தன்மை மேல்நின்றது குறள். 384 பரிமே).3. அரசாட்சி. அந்தணாளர்க்கு அரசு வரை வின்றே (தொல். பொ. 627 இளம்.). காவற்கு அமைந்த அரசு துறை போகிய (பதிற்றுப். 74, 20). அரசே தஞ்ச மென் று (சிலப். 13, 64). அரசாக எண்ணேன் மற்றரசு தானே (பெருமாள் தி. 10,7). அவனும் அரசு இழவா வண்ணம் அறிந்து (பாரதவெண்.33). வன்திறல் யமனையும் அரசு மாற்றுவார் (கம்பரா. 6,5,22). புரந்த அரசும் கொள்ளும் என மொழிந் தார் (பெரியபு. 37, 35). கிளை அற்றபின் செய்யும் அரசுமோர் அரசோ (பாரதி. தோத்திரம்.68,20). 4. அரசனின் ஆளுகை. அரசு வீற்றிருந்த திருவுடை யான் (இறை. அக. 2 உரை). எம்பிரான் கழல் ஏத்தி வானரசாள வல்லவர் (தேவா. 2,52,2).தருவென் அரசு என்றான் (கம்பரா.3, 4, 32). தன்னுடைய தாதை பணியால் அரசு ஒழிந்து (இயற். பெரியதிரு மடல் 47). எனதுயிர் அரசு வாழ்வு என்ப யாவையும் (பாரதம். 1, 1, 45). 5. (இக்) அரசினர்க்குரியது, அரசாங்கம். அரசு நிலம், அரசு கல்லூரி, அரசு மருத்துவமனை (செய்தி.வ.). 6. அரசுரிமை. சிறை விட்டரசருளிச் செய்து (குலோத்,உலா 33). 7. இராசி. அரசே மன்னனும் இராசியும் (அக.நி.அம்முதல். 154). 8. பூமி. அரசு பூமியும் மன்னரும் ஆகும் (பொதி.நி.2,99). 9. தலைமையாக விளங்குவது. நாடு பலவினுக்கு அரசு (சிலையெழு. 66). மின்னார் தமக் கோர் அரசே (கந்தபு. 5, 2, 143). 10. தலைவன். உவணத்து அரசேயும் ஒக்க (கம்பரா. 5, 1, 42). நாமே அரசு என்று நாள்தோறும் எண்ணுதே