பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/457

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசு பொறுப்புறுதி.

அரசுபொறுப்புறுதி பெ. அரசாங்கம். (அரிசனப் பழங்குடி.

க.சொ.)

அரசுமக்கள் பெ. அரசனின் அலுவலர். அரசுமக்களும் பிற முதலிகளும் பிரமாணம் பண்ணிக்குடுத்த பரி சாவது (புது. கல். 393).

என்று

அரசுமறுப்பாளர் பெ. அரசை நீக்கவேண்டும் கூறுவோர். அரசு நீக்கப்படுதல் வேண்டும் என்று கூறும் அரசு மறுப்பாளர்களின் கருத்து. (அரசியல்

12 ப. 4).

அரசுமுறை பெ. பெ. ஆட்சி ஒழுங்கு. மர்புகள் அனுபவங் கள் ஆகியவற்றிலிருந்து அரசுமுறை தோன்றி யுள்ளது (முன். 12 ப. 5).

கள்

...

அரசுரிமை பெ. 1. அரசனாகும் உரிமை. எம்பரத் தது ஆக்கி அரசுரிமை தவம் இழைத்தவாறு ஈதோ (கம்பரா. 2, 13, 63). அரசுரிமைப் போர் அவ்வப்போது நிகழ்ந்தன (வரலாறு 12 ப. 136). 2. அரசனின் ஆட்சி. பூவில் இருந்தூதும் முறைபுரிதலே அன்றி மேவும் அரசுரிமை மேவாயே (ஆனந்த. வண்டு. 424). (இக்) அரசாங்கத்தின்

உரிமை. (நாட். வ.)

அரசுவரி பெ. நிலம் முதலியவைகளுக்கு அரசு விதித்த வரி. இவ்வயல்களுக்கு வரும் அரசுவரி கடமை அந்தராயம் (தெ.இ.க.23, 164).

அரசு வருவாய் பெ. அரசாங்கத்திற்குரிய வருமானம். (வரு வாய்த்துறை.க.சொ.)

அரசு வா. பெ. அரசனது பட்டத்து யானை. அரசுவா அழைப்பக் கோடறுத்து (பதிற்றுப். 79, 13). அர சோடு அரசுவா வீழ்ந்த (கள. நாற். 35). அரசோடும் அரசுவா அடுகளத்துள் ஆழ்ந்தனவே (சீவக. 2243). அருளறிந்துழையரோடி அரசுவா வருக என்ன (சூளா. 926). இஃதரசுவா ஆதற்கு ஏற்ற (தொல். சொல். 37 சேனா.). அரசுவாக்களின் வலி மெலிந்த மேனியான் (பாரதம். 1, 3, 17). ஓங்கல் கள் அரசுவா எனச் சிறந்தன (பேரூர்ப்பு. 1,8).

...

அரசுறுப்பு பெ. அரசன் நாட்டை ஆள்வதற்கு உறு துணையாகும் ஆறு அங்கங்கள். ஆணை அரசும் அரசுறுப்பும் கைக் கொண்டருளும் என இறைஞ்ச

(பெரியபு. 37, 36).

அரசுறை பெ. அரசன் இருப்பிடம். தன்நகர் அரசுறை கருமாளிகை பொடியாக்கி (தெ.இ.க. 5, 465).

327

அரட்டு-தல்

அரசொக்கு பெ. கருணைக்கிழங்கு. (வாகட அக.)

அரசோனம் பெ. ப. அக.)

வெள்ளைப்பூண்டு.

(தைலவ. செ.

அரட்சி (அருட்சி) பெ. மனக்குழப்பம். (செ.ப. அக.)

அரட்டடக்கி பெ. (குறும்பு செய்வோரை அடக்குப வன்) சிவன். தக்கன்தன் வேள்வியை அரட்ட டக்கிதன் னாரூர் அடைமினே (தேவா. 5, 7, 5).

அரட்டம்1 பெ. பாலைநிலம். (யாழ். அக.அனு.)

அரட்டம் 2 பெ. பொழுது விடிகை. அரட்டம் என்பது விடிகையின் நாமம் (அக.நி. அம்முதல். 9).

அரட்டமுக்கி பெ. 1. (பகைவர்களை அடக்கியவரான ) திருமங்கையாழ்வார். அருள்மாரி அரட்டமுக்கி அடையார்சீயம் (பெரியதி. 3,4,10).2. செருக்குள்ள வர்களை அடக்குபவன். (செ. ப. அக. அனு.) 3. குறு நிலத் தலைவர்களை ஒடுக்குபவன். (முன்.)

அரட்டர் பெ. 1. குறுநில மன்னர். இன்பருக்கு அன்பு செய்யா அரட்டரை (திருமாளி. திருவிசை. 4,3). கூனல்வார்சிலை வஞ்சக் கொடுஞ்சமர்க்கு ஆன வாழ்க்கை அரட்டக் கரும்படை (திருவிளை. பு,12,19). 2.கொடியவர். அரட்டர் ஐவரை ஆசறுத்திட்டு (தேவா. 5, 7, 5). ஆறு இரு மதியின் எய்தி அரட்டனையடர்த்து... (சீவக. 1221). நெரித்த உரு நெற்றியர்கள் நிட்டுரர் அரட்டர் ( சிவதரு. 7,88). 3.குறும்பர், துட்டர். அடைந்தவர்க்கு உறுகண் ஆற்றும் அரட்டரும் (கச்சி. காஞ்சி. இருபத். 384).

அரட்டல் பெ. அச்சுறுத்துகை. (சங். அக.)

அரட்டல் புரட்டல் பெ. நோய்

வேதனை. (பே.வ.)

முற்றலால் நிகழும்

அரட்டன் பெ. மிடுக்குடையவன். அரட்டன்வந்து அப் பூச்சி காட்டுகின்றான் (பெரியாழ். தி. 2, 1, 4).

அரட்டி பெ. அச்சம். (நாட்.வ.)

அரட்டு-தல் 5 வி. அச்சுறுத்துதல். (செ.ப.அக.)

அரட்டு 2-ல் 5 வி. விழித்தெழச் செய்தல். (இலங்.வ.) அரட்டு-தல் 5 வி. வீண்வார்த்தை பேசுதல். (முன்.)