பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/460

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரணாக்கவுறு

அரணாக்கவுறு (அருணாக்கயிறு, அருணாக்கவுறு, பெ. அரைஞாண். (கோவை வ.)

(அருணாக்கயிறு,அருணாக்கவுறு,

அரணி'-த்தல் 11 வி. 1. அரண் செய்தல். (செ.ப. அக.) 2. அலங்கரித்தல். (வின்.) 3. கடினப்படு தல். அரணித்த பரு (இலங். வ ).

4. 10, 145).

அரணி2 பெ. தீக்கடை கோல். அரணி கான்ற அணி கிளர் செந்தீ (பெருங். 1,42,160). இந்தனத்தை முறித்து அடுக்கி எரிகடையும் அரணியினில் (பெரிய அரணி வேள்வியில் அகப்படும் அகண்ட உருவால் (கலிங். 185). அரணியின் புறத்து அனல் என அவதரித்தனன் (பாரதம். 1, 2, 7). அர ணியில் அனல் வந்துற்று அவ்வரணியை அழிப்ப தேய்ப்ப (செ.பாகவத. 3,9,19).

...

...

அரணி பெ. 1. கவசம். அரணி என்பது கவச மும் (அக.நி. அம்முதல். 169). மெய்யில் அரணி யணிந்த சயவீரர் (ஞானாதிக்க. 17, 15). 2, கோட்டை மதில். அரணி என்பது ... மதிலும் (முன்.).3. வேலி. அரணி கோலும் வேலியும் கவசமும் (பொதி.நி. 2, 112). 4. காடு. (வின்.)

அரணிப்பு பெ. பாதுகாப்பு. (ரா. வட். அக.)

அரணியகணம் பெ. காட்டுச் சீரகம். (மரஇன. தொ.)

அரணியகதலி பெ. காட்டு வாழை. (சித். அக.) செ.ப.

அக. அனு.)

அரணியகற்பாசி பெ. கோங்கிலவு. (மரஇன. தொ.)

அரணியகுலத்திகை பெ. கொடிவகை. .(சாம்ப. அக.)

அரணியகேது பெ. செடி வகை. (முன்.)

அரணியசாரணை (அரணியசாறணை) பெ. காட்டு இஞ்சி. (மரஇன.தொ.)

அரணியசாறணை (அரணியசாரணை)

இஞ்சி. (மலை அக.)

பெ.காட்டு

அரணியசீரம் பெ. காட்டுச் சீரகம். (பிரஇன. தொ.)

அரணியதிலகம் பெ. காட்டுஎள். (முன்.)

அரணியதுளசி பெ. காட்டுத்துளசி. (முன்.)

3

30

அரத்தகோபம்

காடு. அரணியம் மந்திரம் அனல்

அரணியம்

பெ.

கள் அவை

உம்மை

...

அறிந்திடின்

(கலிங். 271).

மறைந்துறை நாளின் மீண்டும்

...

அர

ணியம் அடைதிர் (பாரதம். 2, 2, 277). மலை களையும் அரணியங்களையும்

...

ஆராய்ந்து பார்த் தோம் (பிரதாப. ப. 352), தீமையெல்லாம் அரணி யத்திற் பாம்புகள் போல் மலிந்து (பாரதி. தேசியம்.

52, 2).

அரணியர் (அரணியா) பெ. காட்டுக்கருணை. (மூலி.

அக.)

அரணியவான பெ.அ. சொற் செறிவுடைய. அரணிய வான கவிகளைக்கொண்டு (திருவாய். 39,3 ஈடு).

அரணியன் பெ. அடைக்கலமானவன். அரணியன் என்று அவற்கு அன்பு பூண்டனை (கம்பரா.

6, 4, 2).

அரணியா (அரணியர்) பெ. காட்டுக்கருணை, (மலை

அக.)

அரணை பெ. உடல் பளபளப்பாய் உடலின் பின்பகுதி செந்நிறமுடையதாய்ப் பல்லியொத்து ஊரும் சிறு .உயிரினவகை, அரணை தீண்டினால் மரணம் (பழ . அக. 464).

அரணைக்கல் பெ. வேலை செய்யப்படாத கல். (பே.வ.) அரணைச்சம்பா பெ. நெல்வகை. (செ. ப. அக. அனு.) அரணைப்புத்தி பெ. நினைவுக் குறைவான புத்தி.

' (வட்.வ.)

அரணைமுத்து பெ. முத்து வகை. (நாஞ்.வ.)

அரணைவால்சுருட்டை பெ. மண்ணுக்குள் இருக்கும் சுருட்டைப் பாம்புவகை. (செ.ப.அக.)

அரத்தகம் (அலத்தகம், அலத்தம்) பெ. 1. செம் பஞ்சுக்குழம்பு. அரத்தகத்து ஈரத்து ஐதுகொண்டு எழுதிய சீறடி (பெருங்.1,35,209). அரத்தக மருளிச் செய்த சீறடி (சீவக. 2459).2. செம்மை நிறம். அரத்தகம் பூப்ப அலமந்து எழலும் (பெருங்.1,

42, 132).

அரத்தகோபம் பெ. செந்நிறமுடைய இந்திரகோபப் பூச்சி. பாயிதழ்ப் பரப்பின்மேல் அரத்தகோபம் ஊர்ந்து (சூளா.793).