பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/464

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரம்பை 3

...

...

மகளிர் (பெருங். 5, 3, 59). திலோத்தமை அரம்பை வெள்கி மயங்கி மாறினர் (பெரியாழ். தி.3, 6,4). அங்கு அரவு அல்குலாளை ஆட்டினார் அரம்பை அன்னார் (சீவக. 623). அரம்பை மேனகை திலோத்தமை உருப்பசி ஆதியர் (கம்பரா. 5, 2, 197). ஆடலால் அரம்பை ஒப்பார் (சூளா. 676). அலர் செய். பூங்குழல் அரம்பையர் அளப்பிலர் சூழ (செ

பாகவத. 5, 3, 46)..

அரம்பைஃ பெ.

சூரியன் தேரோட்டியாகிய அருணன் அருணன் அரம்பை தனைப்புணர உதித்தனம் (கம்பரா. 3, 4, 24-5 மிகை.).

மனைவி.

அரம்பை பெ. ஓமம். (மலை அக.)

அரம்பைக்கனி பெ. ஓமம். (மர இன. தொ.)

அரம்பைப்பூ பெ.

வாழைப்பூ.(வைத். விரி. அக.ப.21.)

அரம்பைமாதர் பெ. தேவலோக மகளிர்: நீடிய நதியி லாடு நேரிழை நேரிழை அரம்பைமாதர் (செ. பாகவத. 1, 3,4). அரம்பைமாதர் தில்லை வளம்புகழ் (தில். கலம்: 70). அரம்பைமாதர் கொம்மை வரிமுலைப் போகம் (குசே.315).

...

அரம்பையர் பெ. தெய்வமகளிர். தடம்பூண் முலை அரம்பையரோடு அருளிப்பாடியர் (தேவா. 4,20,3). அரம்பையர் தம் கைவளர்த்த இன்னிசையாழ் (இயற். பெரியதிருமடல் 27). அரம்பையர் குழுவும் அகல (கம்பரா. 5,3, 98). ஆடல் பாடல் அரம்பையர். ஒக்கும் (கலிங். 321). அஞ்சன நாட்ட ஈட்டத்து அரம்பையர் உடனாய் உள்ளோர் (பெரியபு. 28, 1204). அரம்பையரில் வரிசையிற் குறைவற்ற உருப்பசி (சிலப். 7 அடியார்க்.). அந்தர வானத்து. அரம்பையர் எதிர்கொள (மெய்க். சோழர் 11,9). உருப்பசி முதலாம் அழகுடை யரம்பையர்' (பாரதம். 1, 6,18). செருவின் மாண்ட அரம்பையர்ச் சேர்குவர் அன்றே (நைடத. 7,13). வனப்பு வாய்ந்த அரம்பையர் தம்மை. நோக்கி (செ. பாகவத. 3,5). காதல் புரியும் அரம்பையர் போல் இளங் கன்னியர் (பாரதி. தேசியம். 20, 2).

3.

1

1,

அரமகள்' பெ. தெய்வப் பெண். மதி உண் அரமகள் என (பரிபா. 10, 78). காண்வர வான் அரம்களோ நீயே (ஐங்.418). நீர் அரமகள் கொல்லோ (இறை. அக. 2 உரை). திருமகளோ அரமகளோ என்னாது (தொல்.சொல். 255 சேனா..).

334

அரமியம்!

அரமகள் 2 பெ. வாழை. அரமகளைத் தேயுஎனலாம் (தேரை. வெண்.61).

அரமகளிர்

பெ. 1. தெய்வப்பெண்டிர். மாதிரந் தோறும் அருவி நுகரும் வான் அரமகளிர் (மலைபடு. 294). ஒருகை வான் அரமகளிர்க்கு வதுவைசூட்ட (முருகு. 116-117). வான்அரமகளிரிற் றானணி சுடர. (பெருங்.3,7, 49). அரமகளிர் அமுத இசை பாடினார் கேம்பரா. 6, 15, 360). வந்து அரமகளிர் போல்வார் வரன்முறை கவரி வீச (சூளா.362). அரமகளிர் சூழ அகிலாண்டம் பெற்ற வரைமகள் 'தான் வீற்றிருந்த வாறு (மதுரைச். உலா 432). உற்று அரமகளிர் பாட உவந்துறை மலரினானே (செ. பாகவத. 5, 1, 15). 2. அரம்பையர். துயில் காத்து அரமகளிர் சோர்குழை காத்து (குலோத். உலா 4). விண் நாட்டு அரமகளிர் அவ்வுயிரைப் புண்ரா முன்னம் (கலிங். 483).

அரமங்கையர் பெ. விண்ணுலகப் பெண்டிர். சொரிந் தார் மலர் அரமங்கையர் (சீவக. 2265). அவிழும் காதலராய் அரமங்கையர் பவழ்வாய் அமுதம் பருகி (சூளா. 122). அரமங்கையர் விண்ணிடம் எங்கும் அசைந்து அலர் சிந்தி (ஆனந்த. வண்டு.237).

அரமடந்தை பெ. தெய்வப் பெண். அரமடந்தையர் கற்பகம்... உவர்புக்கு ஒளிப்ப (கம்பரா. 1 மிகை. 9,

3-7).

அரமனை (அரண்மனை) பெ. அரண் அமையப் பெற்ற மாளிகை. அரமனைக்கு எய்தும் முன் இயம்பினேன் (பாரதம். 4,3,9). அவர்கள் தேசாதிபதியின் அர மனைக்குள் பிரவேசியாதிருந்தார்கள் யோவான் 18,28).

(விவிலி.

அரமாதர் பெ. தெய்வப் பெண்டிர். அம்மென்மூரல் அரமாதர் (இரகு. திக்கு. 105); வழுவில்... அரமாதர் (தேவையுலா 131).

அரமாரவம் பெ. நாயுருவி. (மலை. அக./செ. ப. அக.)

அரமான் பெ. தெய்வப் பெண். அரமான் அரம்பை அண்டர்பெண் (நாம.நி.69).

அரமி பெ. கடுக்காய். (சங். அக.)

அரமியம்1 பெ. 1. (அரண்மனையின் மேல் நிலையில் உள்ள) நிலாமுற்றம். நிரை நிலை மாடத்து அரமியந்