பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/467

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரவம்2

அரவம்" (அரவு)பெ.1.ஒலி. இயங்குபடைஅரவம் (தொல். பொ. 65 இளம்.). போர் ததும்பும் அரவம் (பரிபா. 18, 44). குரவை முடிவில் ஓர் ஊர் அரவம் கேட்டு (சிலப். 18,6). அமிர்து கடை கடலின் அரவம் ஓவாது (பெருங். 2,10,45). அம்பந்தும் வரிக்கழ லும் அரவஞ்செய் பூங்காழி (தேவா. 2, 41, 11). பொங்கு அரவவக்கிரனைக் கொன்றான் (இயற். மூன்றாம் திருவந். 21). அரவவானின் அதிர்ந்த அணி முழா (சீவக. 2393). அரவமாக்கடல் அஞ்சிய அச்சமும் (கம்பரா. 6,8, 39). ஊர் அரவம் சால உடைத்து (கபிலதேவ. அந். 33). படையெழுச்சி மாத்திரமே கூறினமையான் அதனுள் அரலம் ஆயிற்று (பதிற்றுப். 34 ப. உரை). உபய பலத்து எடுத்தது அரவமே (கலிங். 439).2. மாணிக்கக் கல் உள்ளீடாக உள்ள சிலம்பு. அரவமும் சிலம்பின் அபி தானம்மே (பிங்.1185).

அரவம்' பெ. மனக்கலக்கம். பொருகயல் அனைய கண்ணும் புருவமும் அரவம்செய்ய (சீவக. 2806).

அரவம்' பெ. குங்குமமரம். (த.த.அக.)

அரவம்' பெ. அதிமதுரம். (பரி. அக./செ. ப. அக. அனு.)

அரவம்' பெ. மர மஞ்சள். (செ. ப. அக. அனு.

அரவம் பெ. தமிழ்மொழி.

(தெலுங்.வ.)

அரவமணி பெ. 1. நாகமணி. (சித். பரி. அக.ப. 155) 2. உருத்திராக்கம். (முன்.)

அரவமணிக்கடல் பெ. மணிக்குடல் ( வைத்

ப.16)

(வைத். விரி. அக,

அரவர் பெ. தமிழர். அரவர் என்பதுவே தமிழர் ஆகும் (அக.நி. அம்முதல். 44).

அரவரசன் பெ. (பாம்பிற்கெல்லாம் அரசனாகும்) ஆதிசேடன். அரவரசப் பெருஞ்சோதி அனந்தன் (பெருமாள்தி.1). அவ்வரவரசன் தலையை எடுக்கா விடில் (சிலையெழு.11).

அரவரசு பெ. (பாம்பிற்கெல்லாம் அரசனாகும்) ஆதிசேடன். செங்கண் அரவரசு அகிலம் வைத்து

(LIGHT. LIGHT. 98).

அரவன் பெ. (பாம்பணிந்தவனான) சிவபிரான். மிளிர்வதோர் அரவர் வேறுமோர் சரிதையர் (தேவா. பெ.சொ.அ.1-22

3

37

அரவிந்தம்!

1,78,4). அரவனை அரவின் அரங்கனை (திருவரங்.

கலம். 67).

அரவாசலம்

பெ.

(பாம்புவடிவாய் உள்ள மலை)

திருச்செங்கோடு. அருள்சேர் அரவாசலவாசன் (செங் கோட்டுப் பள். காப்பு 4).

அரவாசலர் பெ. (மோரூர்க்கோயிலுள்ள)

காரப் பெருமான். பிறைச்சடையார்

ஆலயத்தில் (பெருந். 1734).

பாம்பலங்

அரவாசலர்

அரவாட்டிப்பச்சை பெ. பெ. தொழுகண்ணி என்னும் செடி வகை. (சித், பரி, அக.ப. 155)

அரவாபரணன் பெ. (பாம்பை அணியாக உடைய) சிவன். அரவாபரணன் தந்தருள்

(பாரதம். 7, 4, 51).

அரவாய்க்கடிப்பகை

அருமாமறை

பெ. அரம்போன்ற விளிம்பு

உடையதாய்ப் பேய்களின் பகையாகிய வேப்பிலை. அர வாய்க்கடிப்பகை ஐயவிக்கடிப்பகை (மணிமே.7,73).

அரவாள் பெ. பழைய நாணயவகை. (சரவண. பணவிடு.58)

அரவிக்கல் பெ. கல்நார். (போகர் நி.20)

அரவிகாந்தம் பெ. இண்டங்கொடி. (மரஇன. தொ.)

அரவி 1-த்தல் 11 வி. ஒலி செய்தல். அமரரோடு அசு ரர்கூடி அரவித்துக் கடைய (தேவா. 4, 70, 7). அரவிக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே (பூந்துருத் திருவிசை.2,9).

அரவி2 பெ. குளம். உத்தரத்தில் புகுந்து ஆங்கு ஓர் அரவியாக்கி (பெருந். பு. 37,2).

அரவிந்தநாயகி பெ. (தாமரைமலரிலுள்ள ) திருமகள். அரிசெய் நாட்டத்து அரவிந்தநாயகி (தக்க. 278 பா.பே.).

திரு

அரவிந்தப்பாவை பெ. (தாமரை மலரிலுள்ள) மகள். அரவிந்தப்பாவையும் தானும் அகம்படி வந்து (பெரியாழ். தி.5,2,10). அரவிந்தப்பாவையும் தானுமாய் (குருபரம். ஆறா.ப.30).

அரவிந்தம் 1 பெ. தாமரை. அல்லி கழுநீர் அரவிந் தம் ஆம்பல் (பரிபா. 12, 78). புனைகடகச் செங்கை அரவிந்தம் நூறாயிரம் (முத்தொள். 78).