பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/468

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரவிந்தம்2

சரண அரவிந்தங்கள் சார்ந்து (காரை. அந். 81). அரவிந்தம் ஒக்கும் ஐயாறன் அடித்தலமே (தேவா. 4,92,18). கண்ணிணையும் அரவிந்தம் அடியும் அஃதே (திருமங்கை. திருநெடுந். 21). அரவிந்த மலருள் நீங்கி ... திருவிங்கு வருவாள்கொல்லோ (கம்பரா. 3, 5, 59). அரவிந்த முகத்திளையவர் (மெய்க். பாண் டியர் 2,33). அளிக்குலங்கள் சுளித்தகல அரவிந் தம் முகம்புலர (பெரியபு. 28,329). வண்டும் சுரும் பும் அரவிந்தத் தடத்துவர (பாரதம். 9, 1, 3).

அரவிந்தம்" பெ. இரசம். (பச்சிலை. அக.)

2

அரவிந்தராகம் பெ. (மாணிக்கவகையுள் ஒன்றான) பதுமராகம். கோங்கம் அரவிந்தராகம் (கம்பரா. 3,

7,96).

அரவிந்தலோசனன் பெ. (தாமரைக் கண்ணனாகிய) திருமால். அரவிந்தலோசனனைத் தினைத்தனையும் விடாள் (திருவாய். 6,7,10). அனைத்துலகுமுடைய அரவிந்தலோசனன் அவன் (திருப்பா.13 மூவா. ப. 184). சீதர அரவிந்தலோசன பெருமாளே (நூற்றெட். திருப்பு. 2,5).

...

அரவிந்தன் பெ. (தாமரையிலுள்ள) பிரமன். அரி அரவிந்தன் புகழ் மருதூர் (மருதூரந். 8), அரவிந் தன் குலத்தோர் (கல்வளையந். 81).

அரவிந்தை பெ. (தாமரையிலுள்ள) திருமகள். அர விந்தையன்னாளை (சங். அக.).

அரவின்விந்து பெ. வெள்ளி உலோகம். (முன்.)

அரவினர் பெ. (பாம்பை அணிந்த) சிவபெருமான். இரைமரும் அரவினர் இடைமருது என (தேவா. 1.

122, 5).

அரவினார் பெ. (பாம்பை அணிந்த) சிவபெருமான். மாடமழப்பாடியுறை பட்டீசரம் மேயகடிகட்டு அர வினார் (தேவா. 3, 73, 1).

அரவினாள் பெ. (அரவின்+நாள்)

ஆயிலியம். அரவி

னாள் கௌவை ஆயிலியப் பெயர் (திவா.85).

அரவீரியம் பெ. பாதரசம். (குண. 2 ப. 131)

அரவு-தல் 5 வி. வருத்துதல். வேளரவு கொங்கை யிளமங்கையர்கள் (தேவா. 3, 74, 2).

அரவு-தல் 5 வி. ஒலித்தல். வண்டரவு கொன்றை (தேவா. 3, 81, 3).

338.

அரவுயிர்ப்பு

அரவு* (அர, அரவம், அரா, அராவு?) பெ. 1. பாம்பு. அரவு இரைதேரும் ஆர் இருள் நடுநாள் (நற்.285, 1). அரவுஉரி அன்ன அறுவை (பொருந. 83). அர வின்வாய்க் கோட்பட்டு (கலித். 105, 45). அரவோடு என்பு அணிகலனா (தேவா. 7, 9, 9). நச்சு அரவு ஆட் டிய நம்பன் போற்றி (திருவாச. 3,106). அரவா கிச் சுமத்தியால் (கம்பரா. 3, 1, 57). அரவுக்கோ வெம்புலிக்கோ இரையாகுங் காயந்தன்னை (அந்தோனி. அண். 5). 2. நாகாத்திரம். ஆற்றலன்

அரவு கொண்டு அசைப்ப ஆரமர் தோற்றனன்

(கம்பரா. 6,21,39).

அரவு பெ. உடைப்பு அடைக்கும் வைக்கோல் சுற்றைச் சுருள். பரிநிறுத்துவார் அரவு உருட்டுவார் அடி கிடத்துவார் (திருவிளை. பு.61, 5).

அரவு பெ. ஆயிலியம்.

அளைபுகும் அரவினோடு அலவன் வாழ்வுற இளையவற் பயந்தனள் (கம்ப

ரா. 1,5,105).

அரவு (அரவம்) பெ. ஒலி. பாய்குழக்கன்றினார்ப்பு. அரவும் (திருக்காளத். பு. 2, 7).

அரவு

பெ. 1. குண்டலிசத்தி. அரவு. அறிவார் முன் ஒரு தெய்வம் (திருமந்.2101). 2. விந்து. (வைத்.

விரி. அக. ப. 16)

அரவு இ.சொ. தொழிற்பெயர் விகுதி. தோற்றரவு மாத்திரமே ஈது இப்படியே தோற்றுகின்றது (ஞான வா. தேவபூ. 1). தொழிற் பெயர் விகுதிகள் தல் அல் அரவு (நன். 140.ஆறுமுக உரை).

...

அரவுச்சக்கரம் பெ. சித்திரகவி வகை. (யாப். வி, 96

உரை)

அரவுயர்கொடியோன் பெ. (காப்.) (பாம்புக் கொடி எடுத்த) துரியோதனன். அரவுயர்கொடியோன் ஆதி (குசே. 698).

அரவுயர்த்தவன் பெ. (காப்.) (பாம்புக்கொடி எடுத்த) துரியோதனன். அரவுயர்த்தவன் வணங்காமுடி யினன் சுயோதனன் (சூடா.நி. 2, 15).

...

அரவுயர்த்தோன் பெ. (காப்.) (பாம்புக்கொடி எடுத்த) துரியோதனன். அரவுயர்த்தோன் சொன்ன .அவதி (பாரதவெண்.5). அரவுயர்த்தோன் கொடுமையினு முரசுயர்த் தோய் உனதருளுக்கு அஞ்சினேனே

(பாரதம். 5, 4, 13).

அரவுயிர்ப்பு பெ. பாம்பின் மூச்சு. (செ.ப.அக.)