பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/469

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரவுருட்டு-தல்

அரவுருட்டு-தல் 5வி

உடைப்பு அடைக்கவேண்டிவைக்

கோற்புரியைத் திரணையாகச் சுருட்டுதல். கிட்டுவார் பரி நிறுத்துவார் அரவுருட்டுவார் (திருவிளை. பு.

61, 5).

ப.18)

அரவைத்தல் பெ. புடமிடுகை. (வைத், விரி. அக. ப.

அரவொலி பெ. அர அர என்னும் ஒலி. தலவலய முழுதும் அரவொலி வளர (சம்பந். பிள். சப்பாணி. 31). அரவொலி ஆகமங்கள் அறிவார் (தேவா. 7, 100, 8). கலந்தொலிக்கும் அரவொலி ஏழ்கடலின் விம்ம (பெருந். பு. 20, 12). அரவொலி எங்கும் விம்ம

(திருவிளை. பு. 10,24)

அரள் (ளு) - தல் 2 வி. அச்சம் அடைதல். அரண்டு என் மேல் வினைக்கு அஞ்சி (தேவா. 7, 66, 2). அவனைப் பார்த்து ஏலேலோ அரளுமே ஐலசா மலைய. ப. 169). அரண்டவன் கண்ணுக்கு இருண்ட தெல் லாம் பேய் (பழ. அக. 465).

அரளவத்தக்கொடி பெ. ஒருவகைக் கொடி. ஆதளங் காய் தூதளங்காய அர்ளவத்தக் கொடியுடனே

(சின்னத்தம்பிகதை 431),

அரளி (அரலி ) பெ. அலரி. அரளிப்பூவு வாங்கணு

மே (மலைய. ப. 109).

அரளி பெ. பீநாறி. (மலை அக./செ.ப. அக.)

அரளி 3 பெ. செம்பருத்தி. (செ. ப. அக. அனு.)

அரளி பெ. நாறுமரம். (வைத். விரி. அக. ப. 21)

அரளைசரளை பெ. சாலை அமைப்பதற்கேற்ற பருக்கைக் கல். அரளைசரளை பரப்பியாய்விட்டதா (பே.வ.).

அரற்றல் பெ. 1. யாழ் நரம்போசை. கறங்கல் அரற்றல் இசைததல்... யாழ்நரம்போசை (பிங். 1441). 2. புலம் புகை. அங்கே என்ன அரற்றல் (பே.வ.).

...

அரற்று 1-தல் 5 வி. 1. கனவில் பேசுதல். காதல் கைம் மிகக் கனவின் அரற்றவும் (தொல். பொ. 113,6 இளம்.). காதல் பெருமையின் கனவினும் அரற்றும் (புறநா. 198,7). மடந்தை கனவின் அரற்றின்று (புற. வெண்.302). 2. பலவும் சொல்லித் தன்குறை கூறுதல், புலம்புதல். மால் அயனும் காணாது அரற்றி (காரை.அந். 80) ஐயாறன்னே என்றென்றே நான் அரற்றி நைகின்றேனே (தேவா. 6,37, 1). பெ . செ. அ.1-22 அ

339

அரன்1

(திருவாச. அரற்றி

நாத நாத என்று அழுது அரற்றி 2,136). அரக்கன் அவ்வுரை எடுத்து னான் (கம்பரா.3,9,11). அழுகையன்றிப் பலவுஞ் சொல்லித் தன்குறை கூறுதல் (தொல். கூறுதல் (தொல். பொ. 260 பேரா.). 3. ஆரவாரித்தல். இனையள் என்று எடுத்து அரற்றும் அயல்முன்னர் (கலித்.48,14). தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலைந் தனர் (திருவாச. 4, 53). 4. ஒலித்தல். கோட்சுரும்பு அரற்று நாட்சுரத்து (ஐங்.383). வண்டு அரற்றும் கூந்தலாள் (கலித். 1, 10). கருநீலவண்டு அரற்றுங் காளத்தி (தேவா. 6,8,12). கிங்கிணி அடிமிசை அரற்ற (சேரமான். மும். 22). அடியிணைச் சிலம்பு பூண்டுஅரற்றும் (கம்பரா. 1,3, 37). தேன் சுவைத்து அரற்றும் பைந்தார்ச் பைந்தார்ச் சீவகுமரன் சீவகுமரன் (சீவக. 373). வையகம் பொலிய மறைச் சிலம்பு அரற்ற ஆடு கின்றார் (பெரியபு. 5, 105). நோன்கழல் கல்லென அரற்றிட (கந்தபு. 4,3,22). 5. பிதற்றுதல். இக் குவலய மன்னா என அரற்றி (திருவரங். அந். 66). 6. புலம்புதல். வணிகரும் பிள்ளையார் அணி மலரடியில் வீழ்ந்தரற்ற (பெரியபு. 28, 1115).

...

அரற்று' பெ. புலம்புகை. அரற்று எடுப்ப (பரிபா. 11, 113). தேவந்தி அரற்று (சிலப். 29 தலைப்பு ). அரற்று' பெ. குறிஞ்சி யாழ்த்திற வகை. அயிர்ப்பு அரற்றுச் செந்திறம் குறிஞ்சி யாழ்த்திறனே

....

(பிங். 1377).

1

5

...

அரறு-தல் (அலறு-தல்) 5 வி. (அச்சம் பசி முதலிய வற்றால் உரத்து ) ஒலித்தல், கத்துதல். அரறுவ போல ஆர்க்கும் (பெருங். 1, 38, 40).

அரன்1 பெ. 1. சிவபிரான். தொல்லுலகுக்கு ஆதியாய் நின்ற அரன் (காரை. அந். 17). ஆலம் அமர் கண் டத்து அரன் (இயற். முதல்திருவந். 4). அஞ்செழுத்து

ஓதின் நாளும் அரன் அடிக்கு அன்பதாகும்

(தேவா. 4,70, 5). அரன் இருந்த மலை எடுத்த அண்ணாவோ (கம்பரா. 3, 5, 109). அரனை முன் னிறைஞ்சி அன்னான் அன்பரைத் தாழ்ந்து (கந்தபு. 2, 5, 192). அரிஎனவாகி அரன்எனஆகி அவர் மேலாய் (திருப்பு. 3). அரிவடிவுமாய்ப் பின் அரன் வடிவு ஆகி (அழ. கிள். தூது 67). அரவு பிடித்துச் சடை அணி கொற்றத்து அரனார் (திருமலைமுரு. LIGT. 4). 2. ஏகாதசருத்திரருள் ஒருவர். மாதேவன் அரனே உருத்திரன் சங்கரன் சௌமியன் ஏகாதசருத்திரர் பெயர் (பிங்.181). 3. இறை. அயனும் அரனும் ஆதியின் பெயரும் இறையே (பிங். 3183).

...

...

4. அழிப்புத் தொழிற்கடவுள்