பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/473

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரி-த்தல்.

அரி-த்தல் 11 வி. 1. வடிகட்டுதல். நார் அரி நற வின் மகிழ் நொடைக்கு ஊட்டும் (அகநா. 296,9). நுளைமகள் அரித்த பழம் படு தேறல் (சிறுபாண். 158). நார் அரி நறவிற் கொங்கர் கோவே (பதிற் றுப். 88,19). குறவர் பன்மணி அரித்து இதை விதைப்பன் (பெரியபு. 19, 7) மதுவார்த்து அரித்த நித்திலத்தின் (மீனா. பிள். 25). 2. (வேண்டாதன கழித்துப்) பிரித்தல். முள் அரித்து இயற்றிய வெள் அரிவெண்சோறு (மலைபடு. 465). கள்ளரிக்கும் குயம் சிறுசின் மீன்சீவும் பாண்சேரி (புறநா.348, 3-4). 3. (சிதறிக் கிடப்பனவற்றைக்) கூட்டிச் சேர்த்தல். காட்டில் சருகரிக்கப் போனார்களே (பே. வ ). 4. சல்லடைபோன்றவற்றால் சல்லித்தல். ஆம் (தேற்றாங்கொட்டை) என்ற விதை யிடித்து அரித்துக்கொண்டே அமுரினில் மண்டலந் தான் உண்டாயானால் (போகர்ஏழா. 383).

அரி + - த்தல் 11 வி. நீர் அறுத்துச் செல்லுதல். அரித்து ஒழுகும் வெள்ளருவி (தேவா. 4, 3, 3).

அரி - த்தல் 11வி. 1. (கறையான் முதலியவை பொருளைச் சிறிதுசிறிதாகத்) தின்னுதல் கணச் சிதல் அரித்த (சிறுபாண். 133). கழுகு அரிப்பதன் முன்னம் கழலடி தொழுது (தேவா. 5,31,7). செல் அரித்த ஓலை செல்லுமோ (திருவரங்கலம்59).2. துருப்போலச் சிதைத்தல். நல்குரவே செல்வே பொல்லா வெகுட்சியே மகிழ்ச்சியே வெறுப்பே நீங் கள் நிரைந்தோடி மாநிலத்தை அரித்துத்தின்பீர்க்கு (தேவா. 6, 27,8). 3. மொய்த்தல். மாலையை வேய்ந்து அரிக்கும் மிஞிறு ஆர்ப்ப விடுத்தாள் (சீவக. 1769). வண்டு அரிக்க ஒண்கமலம் நாறுவன (திருக்காளத்.பு.2,31). அரித்த வாயும் (முக்கூடற்.

53).

(தேவா. 7, 63,

அரி - த்தல் 11 வி. நீக்குதல். அரித்தநம்பி அடி கை தொழுவார் நோய் ஆண்ட நம்பி 6). ஆய்ந்து அரிக்கும் நறவம் மலர்மாலை (சீவக. 1769). என்றன் வல்வினையை அரித்தேன் டினத்துப். அந். 3). அரித்திடவே அவலவினை (சிவ தரு. 11,61).

-

(பட்

அரி 7 - த்தல் 11 வி. படைத்தல். ஓங்குலகை அரித்தும் அளித்தும் அழிப்பவர் (திருநூற்.அந்.16). கழஞ் சுறு பொன்னாயிரம் முன் அரிக்கும் அதை நல்கி நீ தருமம் முழுதுமே புரிதி (ஞான. உபதேசகா. 1464). அரி 8 - த்தல் 11 வி. (இடைவிட்டுவிட்டு) ஒலித்தல். ஆடுகளப்பறையின் அரிப்பன ஒலிப்ப (அகநா.33,2). அரித்தெழுகின்ற பறை ஓசை (மதுரைக். 261 நச்.).

3

843

அரி15

அரி - த்தல் 11 வி. 1. அழித்தல், சங்கரித்தல். உல கரிப்பான் (சீகாழித் பு. ஆபத், 4). 2.கெடுதல். அரிக்கப்பாவமும் ஆறுடன் ஐந்துற (சிவதரு. 12, 166). 3. கெடுத்தல், ஒழித்தல். பாண்டியற்கும் உடல் வெப்பு அரிப்பனே (சிவதரூ. 10, 125).

அரி-த்தல் 11 வி. வகுத்தல். (சூடா. உள். 378 உரை)

டால்

அரி1 பெ. 1. கதிர் அறுக்கும் பருவம். அரிபுகுபொழு தின் இரியல்போகி (பெரும்பாண். 202). சாலியரி சூட் மடை நடைக்கு (முத்தொள். 68). 2.நெற் கதிர். செழுஞ்செய் நெல்லின் சேயரி (அகநா. 156, 3). அரி ஏர் கழனிப் பழனம் சூழ்ந்தங்கு அழகாய் (தேவா. 2,63,4). எறிதரு அரியின் சும்மையெடுத்து வானிட்ட போர்கள் (கம்பரா. 1, 2, 20). 3. கதிர்க் குவியல். நிரப்பி அரிகள் எங்கும் பரப்பினாரே (முக்கூடற். 137,8). செந்நெல் அரிந்து அரிபரப்பி (சேதுபு.நாட்டுச். 72). 4. நெல். பொங்கரித்திரளை வாரித்தூற்றி (பேரூர்ப்பு. திருநாட்டு. 71).5. அரிசி. பகர்விரவு நெல்லின் பல அரி அன்ன (மலைபடு. 413). உலைதந்த மெல் அரிபோலும் உலகம் (திருமந். 422). வால் அரி கழுவிய வண்ணச் செம்புனல் (சீவக.830). போய்த்தாழ் செறிதசை அரிசிந்தின படி பொங்க (கம்பரா. 5, 10,38). பன்ன உடை அரிதந்ததும் (திருக்கோவ. பு. 17, 148). 6. மூங்கிலரிசி. (பச்சிலை. அக ) 7. மூங்கில். கன்னிமா அரிநாகம் கவினுமால் (செ.பாகவத. 8, 2, 15). 8. பனங்கருக்கு. (இராசவைத். 146./செ. ப. அக.)

...

அரி 12 பெ. குடியிறை. அரிகிளிபுணரி வரி மதி சேகு (சூடா. நிரகர.33).

அரி 13 பெ. கள். நடுங்குபனி களை இயர் நார் அரி பருகி (புறநா. 304,2). நார் அரிநறவின் மகிழ் நொடைக்கு ஊட்டும் (அகநா. 296,9).

அரி 14 பெ. 1. அரிக்கை. அரி ... அரிதலே சயனம் நேமி (சூடா.நி.11, 34). 2. இடைவிடுகை. கலுழ்ந்து வார் அரிப்பனி பூணகம் நனைப்ப (புறநா. 144, 5).

அரிக பெ. 1. மென்மை. அரிநரைக் கூந்தல் செம் முது செவிலியர் (நற். 110,6). நல் ஏறு அரிமடப் பிணையோடு அல்கு நிழல் (குறுந். 338). திரண்ட நேர் அரி முன்கை (கலித். 59,4). அரித்தளிர் மெல் லணை (கம்பரா. 1,10,81). அரிபொற் கிண்கிணி (சீவக. 2385).2. நுண்மை. விலங்குவீழ் அரிப்பனி பொலங்குழைத்தெறிப்ப (அகநா. 351, 12). 3. நொய் மையான தகட்டு வடிவு. அரியும் தகடும் அடரும் ஐம்மை (பிங். 2237). 4. வரி, கோடு. அண்ணல்