பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/479

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிச்சந்தனம்

அரிச்சந்தனம் (அரிசந்தனம்1) பெ. 1. செஞ்சந்தனம். (வைத். விரி. அக. ப. 22) 2. ஐந்தருவிலொன்று. அரிச்சந்தனம் மந்தாரம் என்பன (கதிரை. அக.)

...

அரிச்சந்திரபுராணம் பெ. நல்லூர் வீரன் ஆசுகவிராயன் இயற்றிய அரிச்சந்திரன் கதை. அரிச்சந்திரபுராணம் வழுக்கறப் பதித்தனன் (அரிச். பு. இறுதிப்பாடல்).

அரிச்சந்திரம் பெ. கூரைக்கை தாங்குங் கட்டை. (செ.

ப. அக.)

அரிச்சந்திரம் 2 பெ. பிரதிட்டாகலையிலே தேயுதத்துவத் திலுள்ள எட்டுப் புவனங்களில் ஒன்று. (சங். அக.)

அரிச்சந்திரன் பெ. உண்மைக்காக அனைத்தையும் துறந்த பேரரசன். அரிச்சந்திரனும் சக்கரராசர் (நாம்.நி.150). சத்திரம் நிழற்ற அரிச்சந்திரன் இருந்தான் (அரிச். பு. நகரச். 22). அரிச்சந்திரனென் முழுவாய்மைப் பட்டமுடையான் (சங்கர. கோவை 222). சொல்லுக்கு அரிச்சந்திரன் வில்லுக்கு விசயன் (மெய்க். விசயநகர. 8).

னும்

அரிச்சல் பெ. நாணம். (நாட். வ.)

அரிச்சலாக வி. அ. அரிதாக. உங்களை அரிச்சலாகப் பார்த்த ஞாபகமிருக்கிறது (பே.வ.).

அரிச்சனை (அர்ச்சனை, அருச்சனை ) பெ.

(யாழ். அக )

அரிச்சாணியம் பெ. தொல்லை. (இலங்.வ.)

பூசை.

அரிச்சாவி பெ. பெருங்குமிழ் என்னும் மரம். (செ.ப. அக. அனு.)

அரிச்சிகன் பெ. பெ. சந்திரன். (சாதகசிந். 6/செ. ப. அக.

அனு.)

அரிச்சிப்பார் பெ. பூசிப்போர். நாழி நெய்முட்டாமே அரிச்சிப்பார் கையிலே குடுத்து திருவிளக்கெரிப் போமானோம் (தெ. இ. க.7,503).

அரிச்சுக்கட்டி பெ. குப்பை கூளங்களைச் சேகரிப் போன். (பே.வ.)

அரிச்சுணம் (அரிச்சுனம்) பெ. எருக்கு. (மரஇன.

தொ.)

3

49

அரிசரி

அரிச்சுவடி பெ. சிறுவர் பயில்கின்ற நெடுங்கணக்கு எழுதிய முதல் புத்தகம். அரி தேவதேவன் என் பதை அறிய முதல் நூல் அரிச்சுவடியே சாட்சி ஆம் (அறப்பளீ. சத. 52).

அரிச்சுனம் (அரிச்சுணம்) பெ. எருக்கு. (மரஇன .தொ.)

அரிச்சேக்கை பெ. சிங்காதனம். அணைந்து கோயில் அடைந்து அரிச்சேக்கை மேல் (திருவிளை. பு. 12, 27).

அரிசந்தனம்1 (அரிச்சந்தனம்) பெ. 1.ஐந்து தேவ தருக்களுள் ஒன்று. வேண்டிற்றெல்லாம் தரும் அரிசந்தனம் (சூடா.நி. 4, 2). 2. சந்தனவகை. அரிசந்தனவாசம் (பாரதம். 3,1,158). 3. கற்பகத் தின் பெயர். சந்தனம் அரிசந்தனம் அக்கற்பகம் எனும் பேர் (ஆசி. நி. 127)

...

சாற்றும்

அரிசந்தனம் 2 பெ. தாமரைப் பூந்தாது. (சங். அக.)

அரிசந்தனம்3 பெ. நிலவு. (முன்.)

அரிசந்தனம் + பெ. மஞ்சள். (முன்.)

அரிசம்' பெ. அமாவாசை அதிகமும் பிரதமை குறைவு மாய்க் கூடியுள்ள நாள். (மச்சபு. உத்தர. 44,27)

அரிசம்' பெ. மகிழ்ச்சி. அரிசமாவது புத்திரமித்தி ராதியர்களைக் கண்டு களித்து எனக்கு இனி ஒன் றும் குறையில்லை என்பிக்கை (சி. சி. 2, 80 மறைஞா.).

அரிசம்' பெ. மிளகு. (வைத். விரி. அக. ப. 22) அரிசம் பெ. மூலநோய் (மருத், க.சொ. ப. 204) அரிசம்மாரிகம் பெ. கொன்றை. (மரஇன. தொ.)

அரிசமயதீபம் பெ. சடகோபதாசர் பாடிய ஆழ்வாராதியர் வரலாறு கூறும் புராண நூல். அரிசமய தீபம் என்று ஓர் காவியமாய் சொற்றான் சடகோபதாசன் (அரிசமய. இராமாநுச. 167).

...

அரிசயம்' (அரிசலம்1) பெ. கொன்றை. (வைத். விரி. அக. ப. 22)

அரிசயம் 2 (அரிசலம்") பெ. எலுமிச்சை. (LOGIT.)

அரிசயமங்கு பெ. கொன்றை. (முன்.)

அரிசரி பெ. அத்திக்கொழுந்து. (வைத். விரி. அக. ப. 21)