பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/483

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிதம்'

அரிதம்' பெ. 1. பச்சை. சாமமும் அரிதமும் பச்சை (பிங். 1934). 2. பசும்புல்தரை. அரிதம் சாட்டுவலம் பசும்புல் தரையே (பிங்.620).

...

அரிதம்' பெ. 1. பொன்னிறம். அரிதம் காஞ்சனி பொன்மையின் பெயரே (பிங். 1932).2. மஞ்சள். (பரி. அக. செ. ப.அக.அனு.)

அரிதம்' பெ. பசும்புரவி. (நாநார்த்த.666)

அரிதம்' பெ. பூமி. அரிதம் பூமியும் பச்சையும் திக் கும் (பொதி.நி. 2,101).

அரிதலை பெ. முழுமையாகப் பயன்படுத்துகை. தீர்த்தக் குளமும் தெற்கும் மேற்கும் அரிதலைக்குறை உட்பட்ட தோட்டங்களும் (தெ. இ. க. 24, 142).

அரிதளம் பெ. அரிதாரம். (வின்.)

அரிதா (தரு) - தல் 13வி.

அறுத்தல். ஒரு கணை

சென்று அரிதர மழை சிந்துவ மதமலை (கம்பரா.

6, 17, 129).

அரிதாசர் பெ. இரு சமய விளக்கம் என்னும் நூலை இயற்றிய புலவர். அரிதாசர்...தலைவராக நியமனம் (தமிழ்ப்புலவர. பதினாறாம்.

செய்யப்

ப. 22).

பெற்றார்

அரிதாட்புள்ளி பெ. கதிர் அறுத்த தாளைக் கொண்டு கணக்கிடும் தானிய மதிப்பு. (செ.ப. அக.)

அரிதாதன் பெ. அரிதாசர். பழமறைகள் துணி பொருளைப் பேணிப் பேசும் அரிதாதன் இருசர ணம் (இருசமய விளக்கம் பாயி.)

அரிதாரக்கட்டு பெ. தாளகக்கட்டு. (செ.ப.அக.)

அரிதார நீற்றி பெ.முட்பலா. (சித். பரி அக. ப. 155)

அரிதாரம்1 பெ. கத்தூரி. அஞ்சனத் திரளும் அணி அரிதாரமும் (சிலப். 25,40). ஏய்ந்த அரிதாரம் ஏட்டின்மேல் பூசி (திருமந். 1001). மான்வயிற்று ஒள்ளரிதாரம் பிறக்கும் (நான்மணி. 4). அஞ்சனம் மனோசிலை அணி அரிதாரம் (பெருங். 3, 17, 146). மானின் வயிற்று அரிதாரத் திலகம் இட்டு (பெரியபு. 10, 48). அரிதாரச் சாந்தம் கலந்தது போல (தொல்.

பெ.சொ.அ. 1-23

35

53

அரிது1

சொல். 55 சேனா.). கதிர் உறு பொன் நிமிளை கெந்தி கடகம் அரிதாரம் (சோலை, குற. 92).

அரிதாரம்' பெ. மஞ்சள். (வைத். விரி. அக.ப.21)

அரிதாரம்3 பெ. பழுப்பு. பழுப்பென்பர் அரிதாரப்

பேர் (சூடா.நி.6,18).

அரிதாரம்+ பெ. திருமகள்.

அரிதாரம் அன்னவள்

அம்பகம் காட்டும் (மறைசை அந். 42).

அரிதாரம்5 பெ. தாளகபாடாணம். குன்மமெட்டும் பேருங்காண் அரிதாரத்தால் (பதார்த்த.

அரிதாரம்ே

900

1188).

பெ. (இக்) நடிகர் பூசிக்கொள்ளும் வண்ணப்பூச்சு. நாடகத்தில் நடிகர்கள் அரிதாரம் பூசி ஒப்பனை செய்தார்கள் (தொ.வ.).

அரிதாரவஞ்சி பெ. கொத்துமல்லி. (சித்.பரி. அக, ப. 155)

அரிதாலம் பெ. அரிதாரம். (புதுவை வ.)

அரிதாள் பெ. கதிர் அறுத்த தாள். அரிதாளின் கீழாக ஐங்கலம் தேன்கூடு கட்டும் (நாட். வ.).

அரிதாளம் 1 பெ. தாளகபாடாணம். (செ. ப. அக.)

அரிதாளம்' பெ.

நவதாளத்து ஒன்று. (திவா. 2693)

அரிதிருமருகன் பெ. 1. (திருமாலின் மருகரான) அரிதிருமருகன் கணபதி பெயரே

விநாயகர்.

...

(பிங். 93). 2. முருகக்கடவுள். அரிதிருமருகன் அறுமுகக் கடவுள் (முன். 110).

...

அரிதிற்கடத்தி பெ. வெப்பம் அல்லது மின்சாரத்தைக் கடத்தும் திறன் குறைவாக உள்ளது. (பௌதிக

சொ. ப. 3)

க.

அரிதின் வயச்சி' பெ திருநாமப்பாலை.(பச்சிலை. அக.)

அரிதின் வயச்சி2 பெ. காட்டு நன்னாரி. (சித். பரி. அக.

ப. 155)

அரிதினம் பெ. திருமாலுக்கு உகந்ததாகிய ஏகாதசி. ஏதமறுந் துவாதசியின் இலங்கும் அரி தினத்தும் (அகோர. வேதார. பு. அந்தர்க். 1).

அரிது' பெ.

னையால்

1. எளிதில் கிட்டாதது. அரிது வேட்ட நெஞ்சே (குறுந். 120). அரிது அமர்