பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/486

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிமருகன்

பாண்டியன் கேட்டு வரவழைத்து (திருவிளை. பு.

58, 6).

அரிமருகன் பெ. 1. (திருமாலின் மருகரான) விநா யகர். (நாநார்த்த. 738) 2. முருகக்கடவுள்.

அரிமல் பெ. மாவிலிங்கம்,

(முன்.)

(வைத். விரி.அக.ப.22)

அரிமலம் பெ. பெ. மாவிலங்கு. (வாகட அக.)

அரிமா' (அரிமான்) பெ. சிங்கம். அரிமா வழங்கும் பெருங்கல் நாடன் (நற். 112, 4). அரிமா அன்ன அணங்குடைத் துப்பின் திருமாவளவன் (பட்டினப். 298). இரை தேர் வேட்டத்து எழுந்த அரிமா (சிலப். 26,188). வள்ளுகிர் நோன்தாள் அரிமா மதுகை யவர் (நாலடி. 198). கொல் நவிலும் கோளரிமா (இயற். பெரியதிருமடல் 20). ஆட்டிடைப் பாயும் அரிமாப்போல (பெருங். 2, 9, 160). எட்டு மதமா கரி இரட்டி அரிமா தொட்ட முத்தலை அயில் (கம்பரா. 3, 1, 5).

...

அரிமா' (அரிமாரம்) பெ. ஒட்டுமாமரம். (மரஇன. தொ.)

அரிமாதம் பெ. (சிங்கம்) ஆவணிமாதம். அத்தனே அரிமாதம் பூராடநாள் ஆண்டுதோறும் (கருவைப்பு.

2, 34).

அரிமாநோக்கம் பெ. (இலக்.) (சிங்கம் முன்னும் பின் னும் நோக்குவது போன்று ஒரு நூற்பா முன் னுள்ள நூற்பாவையும் பின்னுள்ள நூற்பாவை யும் தொடர்புறுத்துவதாகிய) நால்வகைச் சூத்திர நிலையுள் ஒன்று. ஆற்றொழுக்கு அரிமா நோக்கம் தவளைப் பாய்த்து பருந்தின்வீழ்வு அன்ன சூத்திர நிலை (நன். 19).

அரிமாரம் (அரிமா) பெ. ஒட்டுமாமரம். (மர இன. தொ.)

அரிமான் ( அரிமர்) பெ. சிங்கம். வியல் உளை அரி மான் மறம் கெழுகுரிசில் (பதிற்றுப். 88,15). அரி மான் இடித்தன்ன அம்சிலை வல்வில் (கலித். 15,1). அரிமானோடு அவ்வரை ஒல்கி உருமிற்கு உடைந் தற்றால் (கள. நாற்.35). அரிமான் ஏந்திய அமளி மிசை(சிலப்.20,22). அரிமான் துப்பினர் (இறை. அக. 2 உரை). அரிமான் ஓர் மெல்லணை மேல் மஞ்ஞை சூழக் கிடந்தாங்கு (சீவக. 294).

அரிமானம் பெ. அரிப்பு. (அறிவி. க. சொ.)

3

56

அரியண்டம்

அரிமுக்கை பெ. மூன்று கைப்பிடி நெல்லாக எடுக் கப்படும் நெல்வரி. அரிமுக்கை யுட்பட்ட பல நெல் லாயங்களும் (தெ.இ.க. 1,89).

அரிமுகவம்பி பெ. சிங்கமுக ஓடம். அரிமுகவம்பியும் அருந்துறை இயக்கும் பெருந்துறை (சிலப். 13, 177).

அரிமுகிலூர்தி பெ. (மேகவாகனனாகிய) இந்திரன். (கயா. நி. 16)

அரிமேதம் பெ. வேலமரம். அரிமேதம் வேலம் (நாம்.

நி. 324).

அரிமேரை பெ.

ஊர்ப்பணியாளர்க்கு அறுவடைக்காலத் தில் நெற்களத்தில் அளிக்கும் உரிமைப்பேறு. (செ. ப.

அக.)

அரிமைதா பெ. வெள்வேல். (வைத். விரி. அக. ப. 22)

அரிமோதகி பெ. அலம்பமரம். (மரஇன. தொ.)

அரிய பெ. அ.

(செய்தற்கு) எளிதில் கிடைக்காத, இயலாத. அரிய உயிர் துறந்து (கலித். 103, 66). அரிய கானம் செலவு இன்னா (இன். நாற். 18). அயன் திருமாற்கு அரிய சிவம் (திருவாச. 11, 5). எண்ணரிய மறையினொடு (கம்பரா. 1, 10, 153). காணரிய பங்கயற்கண்ணான் (மதுரைச். உலா 5-6). அரிய முனிவர் ஒருபுறம் (சிலையெழு. 4).

அரிய' பெ. எளிதிற்கிடைக்காத உயர்ந்த பொருள்கள். அரிய தந்து குடி அகற்றி (மதுரைக். 766). அரிய வும் பெரியவும் நெரிய ஈண்டி (பட்டினப்.192). அரிய என்னாது ஓம்பாது வீசி (பதிற்றுப். 44, 4). செயற்கரிய பாவுள நட்பின் (குறள். 781).

அரியகம் 1 பெ. (பாடகம் போன்ற) காலணி வகை, 1 காற்சரி. அரியகம் காலுக்கு அமைவுற அணிந்து

(சிலப். 6,85).

அரியகம் 2 அரியசம்) பெ. கொன்றை. (பச்சிலை.

அக.)

அரியசம் (அரியகம்.) பெ. கொன்றை. (முன்.)

அரியசாரணம் பெ. மாவிலங்கு. (வாகட அக.)

அரியசாரணை பெ. மாவிலிங்கம். (பச்சிலை. அக.) அரியண்டம் (அரிகண்டம்) பெ. துன்பம். (செ.ப.

அக.)