பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/488

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரியன்?

அரியன்' பெ. 1. தலைவன். (நாநார்த்த.710 2. போற்றத்தக்கவன். (முன்.) 3. வணிகன். (முன்.)

அரியாசம் பெ. புகைக்கும் நறுமணப்பொருள். அஞ் சனக்கட்டி அரியாசம் பச்சிலை ஆரம் அகில் உறுப் போரைந்து (சிலப். 5, 14 அரும்.).

அரியாசனம் பெ. அரியணை, அரசு கட்டில். வண்ணங் கரியானைக் கண்டு கடன்கழியா வேந்தன், அரியா சனமளித்தான் ஆங்கு (பாரத வெண். 162). பாரில் அரியாசனம் உனக்கே (தமிழ்விடு. 62). அரியாசனத் தில் வைத்த தாய் (தனிப்பா. 1, 2, 1). அரசர் குழாத்தொடும் அரியாசனத்தில் ஏறி (சீவல. கதை

358).

...

.

அரியாதனம் பெ. சிங்காதனம். தன்பால் மா அரியா தனத்திருத்தி மனத்திருத்தியோடு (கருவைப்பு. 27, 19). காண்டற்கரிய காட்சி கவின்திகழ் அரியா தனத்தில் அமர்ந்தனன் (பாரதி. தேசியம். 42, 145-146). அரியாயோகம் பெ. 1. அரைப்பட்டிகை. அரியாயோ கமும் கருவிவிலக்காகப்புனைந்த அரைப்பட்டிகை யும் (சிலப். 14, 170 அடியார்க்.). 2. மருந்து. அரி யாயோகம் வியாதிகளைக் கெடுக்கும் மருந்து என்றும் ஆம் (முன்.).

அரியார் பெ. திருமால். விதியார் படைப்பும் அரி யார் அளிப்பும்... அணுகாது (பட்டினத்தார்.

42).

பொது

அரியான்' பெ. சிவபெருமான். ஒள் ஆர் எரியாய் உணர்தற்கு அரியானூர் போலும் (தேவா. 2,

63, 9).

அரியான்2 பெ. ஆடிமாதத்தில் விதைத்து நான்கு/ ஆறு மாதங்களில் அறுவடையாகும் நெல்வகை. (வட்.வ.)

அரியீயம்' பெ. செம்பு. (சங். அக.)

அரியீயம்' பெ. நெட்டிமுட்டி என்னும் செடி. (முன்.)

அரியுண்மூலம் பெ. கோரைக்கிழங்கு. (முன்.)

அரியுப்பு பெ. கறியுப்பு. (வைத். விரி. அக. ப.16)

அரியூசி பெ. எழுதுவதற்கான பனையேடுகளைக் கோக்கத் துளையிடும் கருவி. (இலங்.வ.)

அரியூர்தி பெ. ( திருமாலின் வாகனமாகிய) கருடன். (திவா. 2732)

358

அரில்1

அரியெடுப்பு பெ. ஊர்ப்பணியாளர்க்குக் களத்திற் கொடுக்கும் இருகை அளவுத் தானியம். (செ. ப. அக.)

அரியென்னவல்லாநாழி பெ. பண்டைய முகத்தலளவை ஒன்றன்பெயர். நாள் ஒன்றுக்கு அளக்கும் அரி யென்னவல்லாநாழியால் நெய் உழக்கும் (05. 9.

8. 4, 358).

அரியென்னவல்லாமரக்கால்

பெ. பண்டைய முகத் நாள் ஒன்றுக்கு அரியென்ன வல்லாமரக்காலால் அமுதுபடி குறுணி (முன்.4, 360).

தலளவைகளுள் ஒன்றன்பெயர்.

யும்

அரியேற்றுக்கொடி பெ. திருமாலாகிய இடபக்கொடி. மூதரியேற்றுக் கொடி தான் முன்போத (முப்.உலா

177).

அரியேறி பெ. (சிங்கவூர்தியுடைய) கொற்றவை, பகவதி. கொற்றவை ஐயை எழில் அரியேறி

23).

...

(திவா.

அரியேறு பெ. ஆண்சிங்கம். முழையுள் மூரி முழங்கு அரியேறு அனான் (சீவக.1338). மடங்கல் அரி யேறும் மதமால் களிறும் (கம்பரா. 5, 2, 65). பகு வாய் அரியேறு போழ்ந்த செங்கண் நெடியான் வாள் அரியேறு போல (யசோதர. 118). அரியேறு ஏந்தும் ஆசனம் (பாரதம். 5, 4, 76).

(TIT. 2).

அரியோதரம் பெ. அரிசிச்சோறு. ஆனை நல்ல தடம் போல அப்பளங்கள் அரியோதரம் (சின்னத்தம்பி

கதை 58).

அரிராசி பெ. ஊர்ப்பணியாளர்க்கு அறுவடையின்போது நெற்குவியலில் கீழே எஞ்சிய தானியம் பெறும் உரிமை. (செ.ப.அக.)

அரிராயவிபாடன் பெ. விசயநகர அரசரின் பட்டங்களுள் ஒன்று. (தெ.இ.க.1,79)

அரில்' பெ. 1. பிணைப்பு. முள்ளரைப்பிரம்பின்மூது அரில்செறியும் (அகநா. 6, 19). மஞ்சளும் இஞ்சி யும் மயங்கு அரில் வலயத்து (சிலப். 10, 74). மூது அரில் நிவந்த முதுகழை ஆரிடை (புற. வெண். 255). 2. பின்னல். ஐவன வெண்ணெலொடு அரில் கொள்பு நீடி (மதுரைக். 288). அரில் பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனி (குறுந். 91). அரில் வலை உணக்கும் துறைவன் (நற். 4, 4). அரில் வலை உணங்கு முன்றில்களும் (திருக்காளத். பு. 2, 9 ),