பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/489

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரில்2

3. சிறுகாடு. பின்னிஅன்ன பிணங்கு அரில் நுழை தொறும் (மலைபடு. 379). 4. சிறுதூறு. முளி அரில் புலம்பப்போகி (அகநா. 103,5). பிணங்கு அரில் வாடிய பழவிறல் நனந்தலை (நற். 37, 1). வீததை வியல் அரில் துஞ்சிப் பொழுது செல (குறுந். 338). முளிஅரில் பொத்திய முழங்கு அழல் (கலித். 13,20). அரில் பிணங்கு அடுக்கமும் (பெருங்.1, ஈண்டு அரில் சூழ்ந்த விளையும் வெண். 89). காட்டகம் முற்றும் வெவ் அரில்களை முருக்கு மாறுபோல் (செ. பாகவத. 6, 4, 21).

52, 28).

அரில்' பெ. மூங்கில். (பச்சிலை. அக.)

அரில்' பெ. பலா.

(அரும்.நி.450)

(புற.

தப

அரில் பெ. 1. பிணக்கு, மாறுபாடு. அரில் உணர்ந்தோர் (தொல். பொ. 56 நச்).2. குற்றம். அவையடக்கியலே அரில்தபத் தெரியின் (தொல். பொ. 418 இளம்.). அன்னதால் அரில்தப அறிந்து கூத்தி கூறினாள் (சீவக. 693). அரில் தபத்தெரிந்து (யசோதர. 55). ஆய்ந்து வேள்வி அரில்தப ஆற்றி டின் (செ. பாகவத. 3, 9, 52). நீ அதை அரில்தபத் தெருட்டு (திருவிளை. பு.54,18). அரில் அறுக்கும் மறைபயில (கச்சி. காஞ்சி. நகர். 139).

அரில்' பெ. கோபம். அரில்கலாம் சினம் கோபம் (நாம.நி.637).

அரில்' பெ. பெ. வைரம். (கயா. நி. 465)

...

அரில் பெ. பரல். அரில் சிறு தூறும் பரலும் வயிரமும் (பொதி நி. 2,97).

அரில் 8 பெ. குழல். (அரும்.நி. 450)

அரில்' பெ. பாயல். (முன்.)

அரில்' பெ. குரல். அரில் குரலும்

2, 97).

அரிவரி பெ. 1. நெடுங்கணக்கு. பள்ளித்தொடக்க வகுப்பு. (இலங்.வ.)

(பொதி.நி.

(பே.வ.) 2.

அரிவருடச்சுரிவு பெ. மணி (இரத்தின) வகை. (தெ. இ.க.8,42)

அரிவருடம் பெ. பூமியின் ஒன்பது கண்டங்களுள் ஒன்று. அம்புவியின் நிடத முதல் ஏமங்காறும் அரிவருடம் (கந்தபு. 2,11,37).

359

அரிவாணம்!

அரிவாட்கட்டுக்கதிர் பெ. அறுவடை செய்வோர்க்கு அரிவாள்களைக் கட்டிவைப்பதற்கென உரிமையாக அளிக்கும் கதிர்க்கட்டு. (நாட்.வ.)

அரிவாட்கள்ளன் பெ. அரிவாள் பிடித்தலால் வரும் கைந்நோய் (வட்.வ.)

அரிவாட்கோரை பெ. கோரைப் பூண்டு வகை. (இலங்.வ.) அரிவாட்சொண்டன் பெ. கடலில் திரிகின்ற அரி வாள் போன்ற அலகு படைத்த கொக்கு. (செ.ப.அக.)

அரிவாட்டாயர் பெ. நாயன்மார் அறுபத்துமூவருள் அரிவாட்டாயர் என்பவர். அள்ளல் பழனக்கணமங் கலத்து அரிவாட்டாயனே (நம்பியாண். அந். 14). அரி தலால் அரிவாட்டாயர் ஆயினார் (பெரியபு. 13,22).

அரிவாட்பதக்கு பெ. பழைய வரிவகை. அரிவாட் பதக்கு சான் தியாயம் மற்றும் சில்வரி (புது. கல். 90).

அரிவாட்பெட்டி பெ. மரமேறிகள் மரமேறும்போது இடுப்பில் கட்டிக்கொள்ளும் கள்ளிறக்குதற்கான கருவிப் பெட்டி. (செ. ப. அக.)

அரிவாண்மணை

(அரிவாள்மணை, அரிவாள்மனை) பெ. காய்கறி நறுக்க மணையில் பதித்த அரிகருவி. கூர்வாயிரும்பு அரிவாண்மணை (பிங். 1722,).

அரிவாண்மணைப்பூண்டு

(அரிவாள்மணைப்பூண்டு) பெ. அரிவாள் ஒத்த கூர்இலையுடைய செடி. (மரஇன.

தொ.)

அரிவாண்மூக்கன் 1 (அரிவாள்மூக்கன் ) பெ. → அரிவாள் மணைப் பூண்டு (செ. ப. அக.)

அரிவாண்மூக்கன்2

பெ.

கொக்கு. (முன்.)

அரிவாட்சொண்டன் என்ற

அரிவாண்மூக்குக்கீரை (அரிவாள் மூக்குக்கீரை) பெ. அரிவாள் மணைப்பூண்டு.(நாட்.வ.)

அரிவாண்மூக்குப்பச்சிலை பெ. → அரிவாள் மணைப் பூண்டு. வெட்டுக்காயத்தை விரைவில் அகற்றி விடும் அரிவாள் மூக்குப் பச்சிலை (பதார்த்த. 571).

அரிவாணம் 1 பெ. செப்புத்தாலம். அரிவாணம் பன் னிரண்டுக்கு (தெ.இ.க. 7,22).