பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/490

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிவாணம்'

அரிவாணம் ' பெ. சுண்ணமும் பாக்கும் கலந்த கலவை. (செ.ப. அக. அனு.)

அரிவாள் பெ. 1. நெற்கதிர் முதலியன அரியும் பிடி யுள்ள கத்தி. திருக்கை சென்றரிவாள் பற்றும் திண்கை (பெரியபு. 13, 19). குயமொடு புள்ளம் ... அரிவாளின் பேர் (சூடா.நி. 7, 7). கோடிய வாயை யுடைய அரிவாள் (சிலப். 16, 30 அடியார்க்.). வளைந்து நின்று அரிவாளின் வாயாலே நெல்லை அறுத்து (பொருந. 242 நச்.). சித்திரக் குறுவை யும் விளைந்து அரிவாளும் பழுதையும் புக்க நிலத் துக்கு (புது. கல். 393). 2. (முருகக் கடவுள் கையில் உள்ள) ஓர் ஆயுதம். குடாரம் விட்டேற்று அரிவாள் கரகம் (ஆறெழுத்.32). 3. வெட்டரிவாள். அறுக்க மாட்டாதவன் இடுப்பிலே ஐம்பத்தெட்டு அரிவாள் (பழ. அக. 809).

அரிவாள்மடக்கி பெ. பூண்டு வகை. (இலங்.வ.)

அரிவாள்மணை

(அரிவாண்மணை, அரிவாள்மனை) பெ. காய்கறி நறுக்க மணையில் பதித்த அரிகருவி. (பே.வ.)

அரிவாள்மணைப்பூண்டு

(அரிவாண்மணைப்பூண்டு) பெ. அரிவாள் ஒத்த கூர்இலையை உடைய செடி. (மர இன. தொ.)

அரிவாள்மனை (அரிவாண்மணை, அரிவாள்மணை) பெ. காய்கறி நறுக்க மணையில் பதித்த அரிகருவி. (பே.வ.)

அரிவாள்முகம் பெ. அரிவாள்மணைப் பூண்டு. (மரஇன. தொ.)

1

அரிவாள்மூக்கன் (அரிவாண்மூக்கன்) பெ.அரிவாண் மணைப்பூண்டு. (த. பே. அக.)

அரிவாள்மூக்குக்கீரை

(அரிவாண்மூக்குக்கீரை) பெ.

அரிவாள்மணைப்பூண்டு. (பே.வ.)

அரிவி பெ. அரிகதிர். (யாழ். அக.)

அரிவிக்கள்ளன் பெ. அரிவாட்கள்ளன். (முன்.)

அரிவிமயிர் பெ. வீரர் வேல் நுனியில் அணியும் பறவை இறகு. (வின்.)

அரிவியரிவாள் பெ. கருக்கரிவாள். (முன்.)

அரிவிவெட்டு - தல் 5 வி. கதிர் அறுத்தல். (இலங்.வ.)

360

அரு 1

அரிவீகம் பெ. கோடாஞ்சி மரம். (மரஇன. தொ.)

அரிவுதூள் பெ. மரத்தை வாள்கொண்டு அறுக்கும் போது விழும் மரத்தூள். (இலங். வ.)

அரிவேதனை பெ. சிரங்கினால் வரும் அரிக்கும் வேதனை. (ரா. வட். அக.)

அரிவை பெ. 1. (பொது)

பெண். புலம்பொடு

வதியும் நலங்கிளர் அரிவை (நெடுநல். 166). அம்மா அரிவை முயக்கு (குறள். 1107). மலைப்பரும் சிறப் பின் தலைக்கோல் அரிவையும் (சிலப். 14,154). ஆன்போய் அரிவையர் போய் ஆடவர் போய் (முத்தொள்.21). வரியேர் வளையாள் அரிவை (தேவா. 2,63,4). நெடுந்தோள் அரிவை நின்னை (பெருங். 2, 11, 152). ஆணோ அலியோ அரி வையோ என்று இருவர் காணாக் கடவுள் (திருவாச. 16, 5). அரிவையர் குழுவும் நீங்க (கம்பரா. 5, 2, 180). அரிவையர்கள் தொடரும் இன்பத்துலகு நெறி (திருப்பு.61). 2. (சிறப்பு) ஏழு பருவமகளிருள் ஐந்தாம் பருவத்துக்குரிய (இருபது முதல் இருபத் தைந்து வயதுக்குட்பட்ட) பெண். தீதிலா அங்கேழ் அரிவைப் பிராயத்தாள் (சேரமான். உலா 133). பேதை பெதும்பை அரிவை... மாதர்க்கு உருவம் பற்றிய பருவம் ஆண்டு ஐ ஐந்து (பிங். 941). கைபோய் அகல்கின்ற அல்குல் அரிவை (விக்கிரம. உலா 230). தீர்த்த வாரிக்கே அரிவைமுழுகிய நீரன்றோ (திரு வேங்கடவுலா 440).

...

...

அரிவைப்பு பெ. சமையல். (நாஞ். வ.)

அரீடம்1 பெ. கடுகு. (மர இன. தொ.)

அரீடம்' பெ. கடுகுரோகிணி

(பச்சிலை. அக.)

...

அரு1 பெ. 1. உருவமற்றது. உள்ளுமாய்ப் புறமுமாகி உருவுமாய் அருவுமாகி (தேவா. 4, 48, 7). அருவாய் உருவமும் ஆய பிரான் (திருவாச. 11, 2). ஒளிரும் மேனி அருவென்றார் சிலர் (கம்பரா. 6, 23,39). கந்தழியாவது ஒரு பற்றுமற்று அருவாய்த் தானே நிற்கும் (முருகு. நச். உரை இறுதி). அருவாகி உரு வாகி அனைத்துமாய் நின்ற பிரான் (பெரியபு. 61,1) உருவாய் அருவாய் உளதாய் இலதாய் (கந்தரனு) 51). உருவென அருவென உளனென இலனென (திருவரங்.கலம். 1). 2. உருவமில்லாத பொருள். அரு இயல் சித்தம் கன்மம் என்றிரண்டாகும் (சி. சி.பா. 67). 3. காணப்படாத தன்மை. நிலவும் அரு உருவின்றி (சிவப்பிர.13). 4. கடவுள். (சங். அக.) 5. சித்த பதவி