பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/492

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருக்கன் 5

அருக்கன் 5 பெ. பூவழலை, ஒருவகை மருந்துப்பொடி. (போகர் நி. செ. ப. அக.)

அருக்கன் ' பெ. சுக்கு. (பச்சிலை. அக.)

அருக்கன் பெ. அரிக்கன்சட்டி. (இலங்.வ.)

அருக்கன் சட்டி

(அரிக்கஞ்சட்டி, அரிக்கண்சட்டி.

அரிக்கன்சட்டி, அரிக்குஞ்சட்டி அருக்கஞ்சட்டி) பெ. அரிசிகளையும் சட்டி. (வட்.வ.)

அருக்கன்திசை பெ. கிழக்கு. (பிங்.273)

அருக்கன் வீதி பெ. சூரியன் செல்லும் வழி. (கதிரை.

அக.)

அருக்காணிட

பெ. 1. அருமை. அஞ்சுபேருக்கு அருக் காணித் தங்கை (பழமொழி). 2. உயர்வானது. (ராட். அக.)

அருக்காணி' பெ. அழுத்தம். அருக்காணி பண்ணு கிறான் (வின்.).

அருக்காணிப்பாலகன் பெ. அருமையான குழந்தை.

(இலங்.வ.)

அருக்கியம் பெ.

நீர்.

தெய்வத்திற்கும் பெரியோருக்கும் தூய்மை செய்து கொள்வதற்காக வழங்கும் அருக்கியம் முதலினோடு ஆசனம் கொடுத்து (கம்பரா. 1,5, 41). வையை ஆற்றிடை அருக்கியம் கொடுப் பதற்கு (செ. பாகவத. 8, 8, 4). திண்ணிய அருக் கியம் வீழில் ... ஐநூறு இயம்புக (சிவதரு. 11, 44). ஐந்தெழுத்து உருவின் நாதனுக்கு அருக்கியங் கொடுத்தல் (திருவிளை. பு. 14, 25). அருக்கியம் பாத் தியம் பூசை (பெருந்.பு. 9,11). வந்துளார் தமக்கு அருக்கியம் வழங்கி (வரத. பாகவத. உருக்குமிE. 46):

அருக்கியுருக்கி வி.அ. அரும்பாடுபட்டு. (இலங். வ.)

அருக்கீசகலை பெ. சைவசித்தாந்த யோக நெறிக்குரிய பிராசாத கலைகளுள் இரண்டாவது கலை. மேதை அருக்கீசம் கலை பதினாறாம் (பிராசாதமாலை 1).

800

அருக்கீசம் பெ. பிராசாதயோக நெறிக்குரிய சோடச கலைகளில் இரண்டாவது. இதில் முதற் கண்டத்து ஏழும் அருக்கீசம் (பிராசாதமாலை 3).

3

62

அருக்கு11

அருக்கீசன் பெ. சூரியனுக்குத் தலைவனாகிய சிவன். மேதை மேல் அருக்கீசன் மேல் வாழ்ந்திருப்பவர் (செவ்வந்திப்பு. 1, 5).

அருக்கு 1 - தல்

...

5வி. 1. சுருக்குதல். மழையருக்கும் 50). யாவரையும் கொன்று

(திரிகடு.

கோள் அருக்கி (கம்பரா. 6, 16, 90). 2. நுட்பமாதல். அருக் கின்ற மூலத்துள் அங்கே இருக்கும் (திருமந்.93).

.

அருக்கு2 - தல் 5வி. 5 வி. 1. மனமின்மை காட்டுதல். அம் புவிதனில் பொன்னுள்ளோன் உலோவியாய் அருக் கினானேல் (மச்சபு. பூருவ. 88,11). 2. தயங்குதல். (இலங்.வ.)

அருக்கு-தல் 5 வி. கிடைத்தற்கு அரியதாகச் செய்தல், அருமை செய்தல். அகன்ற கிழவனைப் புலம்பு நனி காட்டி இயன்ற நெஞ்சம் தலைப்பெயர்த்து அருக்கி (தொல். பொ. 145, 12-13 இளம்.). அருக்கினான்போல் நோக்கி (கலித். 104, 70). கிருட்டிணனை அருக்கி னால் உன்னையும் அருக்க வேணுமோ (திருப்பா.10 ஆறா.). அருக்கி மெத்தெனச் சிரித்து (திருப்பு. 65).

அருக்கு-தல் 5 வி. அணைத்தல். அருக்குமங்கையர் மலரடி வருடியும் (முன். 67).

அருக்கு-தல் 5 வி. விலக்குதல். அருக்குக யார்மாட் டும் உண்டி (நான்மணி. 88).

அருக்கு - தல் 5 வி. அழித்தல், ஒடுக்குதல்.

அரிமுத

லோர் உயிர் அருக்கி ... ஆடினான் (கோனேரி. உப

தேசகா.12,422).

அருக்கு7-தல் 5வி.

ஒத்தல். மணிப்பை அருக்கு

அரை (கல்வளை அந். 55).

அருக்கு® - தல் 5 வி. காய்ச்சுதல். நீரருக்கி மோர் பெருக்கி (பதார்த்த. 1498/செ. ப. அக.).

அருக்கு-தல் 5வி. அஞ்சுதல். பல விலங்கிற்கு அருக்கி (உபதேசகா. சிவத்து. 422/சங். அக.).

அருக்கு 10 பெ. அருமை. நிதியின் அருக்கு முன்னி

(திருக்கோ. 275).

அருக்கு11 (அருக்கம்', அருக்கன்+) பெ. எருக்கு. அருக்கு என்பு நீறு அணிந்த அண்ணல் (கலைசைக்.

138).