பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/494

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருகல் 4

சூதுபொருகழகத் தருகலும்

(பெருங். 2,862).

அவன் என் அருகல் இலானே (திருவாய். 1,9,2).

2. சார்தல். (வட.நி. 111)

அருகல்' பெ. சாதல். (சங். அக.)

அருகன் 1 பெ. 1. அருகக்கடவுள்.

அங்கம்

பயந்

தோன் அருகன் அருள் முனி (சிலப். 10, 187). அரு கனுக்கு அனந்த ஞானம் (சி.சி. பர. 151). 2. வழி பாட்டுக்குரியவன். (சங். அக.) 3. தக்கவன். அன்பு கொள் அறத்திற்கு அருகனேன் ஆதலின் (மணிமே. 28,96). பொய்ச்சாட்சி சொல்ல நான் அருகனல் லன் (பிரதாப. ப. 247).

அருகன் 2 பெ.

1.தோழன். அருகன்... நண்பன் (பிங். 929).2. பக்கத்தில் இருப்பவன். (நாட்.வ.)

அருகன்ரத்தம் (அருகியரத்தம்) பெ. பூனைக்காலி.

(சித். பரி. அக.ப. 155)

அருகன்வாகனம் பெ. தாமரைப்பூ. (முன்.)

அருகனெண்குணம் பெ. கடையிலா அறிவு கடையிலாக் காட்சி கடையிலாவீரியம் கடையிலா இன்பம் நாம மின்மை கோத்திரமின்மை ஆயுவின்மை அழியா இயல்பு ஆகிய எட்டு அருகன் குணங்கள். (குறள். 9 பரிமே. வடி வேலு.வி.)

அருகனைத்தரித்தாள் பெ. தருமதேவதை. அருகனைத் தரித்தாள் அறத்தின் செல்வி (பிங். 190).

அருகாசனி பெ. (சமணர்க்கு இடி போன்ற) ஞான சம்பந்தர். அருகாசனி தன் சண்பை நகர் (நம்பி

யாண். ஆளுடைய. அந். 9).

...

அருகாண்மை (அருகாமை) பெ. அணிமை, பக்கம்

சமீபம். (பே.வ.)

அருகாமை (அருகாண்மை) பெ. அணிமை. (முன்.)

அருகால் பெ. வாயிற் கதவுநிலை. (LOGOT.)

அருகாழி பெ. 1.கால்விரல் அணி. (செ. ப. அக.) 2.மோதிரவகை. (செ.ப.அக. அறு.)

அருகி பெ. கள். (வைத். விரி. அக. ப. 22)

3

64

அருகு - தல்

அருகிய பெ. அ. குறைந்த. அருகிய காட்சி/வழக்கு

(பே.வ.).

அருகியரத்தம் (அருகன்ரத்தம்) பெ. (வைத். விரி. அக. ப. 22)

பூனைக்காலி.

அருகியல் பெ. சாதிப்பெரும்பண் வகை. அருகியல் மருதமும் பெருகியல் மருதமும் (சிலப். 8, 40). பின் அகம் புறமே அருகியல் மற்றைப் பெருகியல் ... இசைப்ப (கந்தபு. 2,39,23). பெரும்பண்களின் அகநிலை புறநிலை அருகியல் பெருகியல் என்ற நான்கு சாதிகளுள் மூன்றாம் சாதி (யாழ்நூல் ப.

145).

அருகியவழக்கு பெ. குறைந்த ஆட்சியுடைய வழக்கு. (செ. ப. அக.)

அருகியன்மருதம் பெ.

பெரும்பண்வகை. அருகியன் மருதமும் பெருகியன் மருதமும் (சிலப். 8, 46).

அருகிராவி பெ. நெல்வகை. (செ. ப. அக. அனு.)

அருகினோர் பெ. பக்கத்திலுள்ளோர். அருகினோர் நடுங்க நோக்கி அழல்நகை எடுத்து நின்றான் (சூளா.

1147).

அருகு1-தல்

அருகு 1-தல் 5 வி. 1. குறைதல். இரவலர்க்கு அருங் கலம் அருகாது ஈயா (புறநா. 56,17). அந்தணர் அருகா அருங்கடி வியனகர் (சிறுபாண். 187). அருகற் பிணிநின் அடியார் மேல் அகல அருளாயே (தேவா. 7, 47, 5). வையம் அருகா வினை புரிவானுளன் (கம்பரா. 1,23,26). அருகும் புனல்வெம் சுரம் (நம்பியாண். திருக்கலம். 33), நீரின் இயன்ற உணவு அருகி நிலவும் பல (பெரியபு. 21,255). ஒன்னார் மதி நிலை அருக (இரகு. யாகப். 34). உலகெலாம் அருகு அருந்திறை கொள விழைந்தவன் (ஞான. உபதேசகா. 1288). 2. அரிதாதல். அருகுவித்து ஒருவரை அகற்ற லின் (கலித். 142, 2).3. நுட்பமாயிருத்தல். அருகி மிளிர்கின்ற பொன்னே போற்றி (தேவா.6,56,8). அருகுவெண் கவரி கைக் கொண்டு (ஆச்சா. பு. 7,73),

அருகு 2-தல் 5 வி. அஞ்சுதல். அம் செஞ்சாயல் அருகா நணுகும் (சிலப். 30, 126 பா.பே.).

அருகு 3-தல் 5வி. 1. நோவுண்டாதல். (வின்.) 2. கெடுதல். பருகுவன்ன அருகா நோக்கமோடு (பொருந. 77). அருகாது ஆகிய வன்கண் நெஞ்சம் (நற்.287,8). அருகக்களிற்றினை முன்கொண்டு ஈர (பழமலை அந். 73).