பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/503

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருத்தி+

கண்டேனே (திருவாச. 31,3). அருத்தியும் அரசின் மேற்றே (கம்பரா. 6, 4, 104). அருத்தியினால் ஒருப் பட்டு அங்கு ஆதனூர்தனில் நின்றும் (பெரியபு. 18, 16). அருத்திகூர் துயில் உணர்ந்தவராமென எழுந் தார் (செ.பாகவத. 9, 9, 109). 2. விரும்பப்படும் பொருள். அருத்தியீதல் பொற் சுரதருவினுக்கும் மற்றரிது (பாரதம். 5, 4, 241). 3. அன்பு. அருத்தி யுடைய அடியார் (தேவா. 7,95,4). அருத்தி செய் திடுவது உருத்திர சாதனம் (பட்டினத்துப். கோயில். 24, 10). அருத்தியிற் கூடுழி அழகு காட்டுமே (கச்சி. காஞ்சி. கழு. 144). மக்களில் அருத்தி அமைக்கிலாய் (குசே. 84). அருத்தி மாதவ சொல்கெனச் சூதனங்கு அறைவான் (செ. பாகவத. 1,2, 1). 4. காமம். அருத்தி உற்றபின் நாணம் உண்டாகுமோ (கம்பரா. 1,20,

33).

அருத்தி பெ. 1. வழிபடுபவன். அருத்தி சேவிப் போன் (நாநார்த்த. 706). 2. இரப்பவன். அருத்தி ... யாசகன் (முன்.).

அருத்தி' பெ. செல்வன், தனிகன். அருத்தி ... தனி கன் (முன்.).

அருத்தி பெ. கள். அருத்தியே கள் ஆசை என்று இருபேர் (அக. நி. அம்முதல். 98).

அருத்தி" பெ. ஊண் ஊட்டுகை. (அரும்.நி.110)

அருத்தி8 பெ. கூத்து. (வின்.)

அருத்திசெய்-தல் 1 வி. பத்திசெய்தல் (அன்பு செய் தல்). பிரான் பெருந்தன்மையை அருத்தி செய்து அறியப் பெறுகின்றிலர் (தேவா. 5, 100, 10).

அருத்திரம் பெ. மரமஞ்சள். (வைத், விரி. அக. ப. 22)

ஆசைவைத்தல்.

உலகு

அருத்திவை-த்தல் 11 வி. அருத்தி வைத்த கடவுள் மடமங்கை (திருவாரூருலா

262).

வேள்

அருத்து 1-தல் 5வி. 1. உண்பித்தல். பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி (புறநா. 47, 4). வியிற் கடவுள் அருத்தினை (பதிற்றுப். 70, 18). அளை விலை உணவின் கிளையுடன் அருத்தி (பெரும்பாண். 163). அன்புடைத் தொண்டர்க்கு அமுது அருத்தி (தேவா. 4, 100, 1). கஞ்சி அருத்து ஒருத்தி (ஐயடிகள். சேத். 5) நஞ்சு பொதி வெம்முலை அருத்துற நடந் தாள் (செ.பாகவத. 10, 2, 1). வேதியர்க்கு அருத்திப் பின்னர் (நைடத. நாட்டு. 14).2. துய்க்கச்செய்தல்.

3

73

அருந்ததி காட்டு-தல்

மாண்பயம் தரூஉம் அரும்பொருள் அருத்தும் (பெரும்பாண்.67-68). ஆருயிர்க்கும் போகம் அருத் தித் திறம்பு உயிர்கட்கு (ஆனந்த. வண்டு. 6).3. செய் வித்தல், பண்ணுதல். அமரர்ப்பேணல் ஆகுதி அருத் தல் (ஞானா. 24,26).

அருத்து' (அத்தம், அர்த்தம், அருத்தம் !) பெ. சொற் பொருள் (அருத்தம்). கருத்தானாய் அருத்தானாய் (தேவா. 4,13,7).

அருத்துருமம் பெ. வெள்வேல். (வைத். விரி, அக.ப. 22)

அருத்தோதயம் பெ. தை மாதம் வியதிபாதயோகமும் திருவோண நட்சத்திரமும் கூடிய சூரியோதயத்தில் சூரியனும் சந்திரனும் சேரும் அமாவாசையும் ஞாயிற் றுக்கிழமையுமுள்ள நல்ல நேரம். அருத்தோதய மகோதயம் பொருந்தி லோது புண்ணிய காலங்க ளாம் (சேதுபு. சேதுபல. 23).

அருதனிமம் பெ. தாதுக்களிலிருந்து எளிதில் பிரிக்க முடியாத உலோகம். (எந்திர க. சொ.ப. 145)

அருதா பெ. சதாப்பு இலை. (வைத். விரி. அக. ப. 22) அருதிக்கிரையம் பெ. மிக்க மலிவுக்கிரயம். (ரா. வட். அக.)

அருந்ததி (அருந்துதி) பெ. 1. ஏழு முனிவருள் ஒரு வராகிய வசிட்டர் மனைவி, கற்பினால் மேம்பட்டவள். அருந்ததி அனைய கற்பின் (ஐங். 442). அருந்ததிக் கற்பினாள் தோளும் (திரிகடு. 1). அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை (சிலப். 1, 63). அருந்ததி அரிவையோடு ஆணிகன் பரவும் (பெருங். 2, 3, 34). அருந்ததிக் கற்பினாளை அடிபணிந்து அவனும் கண்டான் (சீவக. 1729). அருந்ததியும் போல் மட வார் (நம்பியாண். திருவுலாமாலை 45). அவர் தங்கண் மனைவியாரும் அருந்ததிக் கற்பின் மிக்கார் (பெரிய பு. 2, 4). கற்புக்கு அருந்ததி நாணுக்கு மானக் சுவரி நன்மான் (அம்பி. கோ. 515). அருந்ததி என் னம்மை (சிவஞர். காஞ்சி. முன்னுரை). அருந்ததி அனைய மங்கையர் (ஞான. உபதேசகா. 1284). 2. அருந்ததி நட்சத்திரம். கலங்கலில் கற்பின் அருந்ததி கண்டார் (கம்பரா. 1, 21, 92). அம்மி மிதித்து அருந்ததி காட்டி (நாட்,வ.).

அருந்ததி காட்டு-தல் 5 வி. அருந்ததி போலக் கற்புடைய வளாகுகவென்று அந்தநட்சத்திரத்தை மணமகட்குக் காட்டுத்தல். விசும்பிற் பூத்த அருந்ததி காட்டி (சீவக. 2469). அருந்ததியைக் காட்டி மணம் செய்து

(பாரதி. பாஞ்சாலி. 271, 28-29).

000