பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/504

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருந்ததியர்

அருந்ததியர் (அருந்ததீயர்) பெ. சக்கிலியர் என்ற குலத் தார். (செ. ப. அக. அனு.)

அருந்ததீயர் (அருந்ததியர்) பெ. சக்கிலியர் என்ற குலத் தார். (சென். வ.)

அருந்தப்பு பெ. மயிரிழையில் தப்புகை. (இலங். வ.)

அருந்தமன் பெ. விட்டுணு. அருந்தமன் என்பதும் அங்கு அவன்பெயரே (பிங். 131).

அருந்தல்

பெ. அருமை, போதாமை. அருந்தலே அருமை (சூடா. நி. ரகர. 38). பாசனத்திற்குத் தண் ணீர் அருந்தலாக இருக்கிறது (நாட், வ.).

அருந்தவர் பெ. அரிய தவத்தையுடைய முனிவர். ஐந் நூற்றுவர் அருந்தவர்களோடும் (யசோதர. 23). இமையவர் வரத்தின் அமரர் அருந்தவர் அரசுடல் பேணினர் (செ.பாகவத. 9, 11, 10).

அருந்திச்சாகம் பெ. முன்னாள் புதுக்கோட்டை அரசின் காசுவகை. இக்காசு அருந்திச்சாகத்துக்குள்ளும் இந்நாச்சியார் பக்கலில் நின்றும் வாங்கி (புது. கல்.

388).

800

அருந்திறல் பெ. பேராற்றல். பேராற்றல். அருந்திறற் கட்டூரவர் வாராமுன் (புற. வெண். 276 கொளு). விமானத்து அருந்திறல் வானம் அடைந்தனர் (திருவிளை. பு.

45, 49).

அருந்திறை

பெ. பகைவர் கொடுக்கும் திறையாகிய அரிய பொருள். அருந்திறை அளப்ப ஆறிய சினத் தொடு (புற.வெண். 45 கொளு).

அருந்து - தல் 5வி. 1. உண்ணுதல், தின்னுதல். நெய்ம்மிதி அருந்திய கொய்சுவல் எருத்தின் (புறநா.

299,

4). காய்ச்செந்நெல் கதிர் அருந்தும் மோட்டு எருமை (பட்டினப். 13). அருந்தியது அற்றது போற்றி உணின் (குறள். 942). நஞ்சம் அருந்து நம்பி (தேவா. 7,63, 3). மிக்க நஞ்சு அமுதா அருந்தினனே (திருவாச. 6,18). அருந்தும் மெல்அடகு ஆரிட அருந்தும் என்றழுங்கும் (கம்பரா. 5, 3, 15). பரிசனங்கள் எல்லாரும் இனிது அருந் தப் பண்ணியபின் (பெரியபு. 29,161). 2. குடித் தல். தேன் அருந்தி மழலை வரி வண்டுகள் இசை பாடும் (திருவாய். 5, 9, 9). அருந்தியவா றெங் ஙனே எம்பிரானும் அமரருமே (அம்பிகா. 23). கதிர்வாய் அருத்தியும் (ஞானா. 45,2). தெள்ள

374

அருநிலை1

மிர்தம் அருந்தினர் போல் சிந்தை களிப்புற (பெரியபு. 28,138). அகலும் ஆறென வழிந்திடும் அதை அருந்தினர்கள் (செ. பாகவத. 5, 3, 28). நீரைவிரும்பும் ரசமதாக்கி அருந்தச்செய்ததை யும் (அந்தோனி. அண்.14). 3. துய்த்தல். துன்னி யாங்கு அருந்தல் (ஞானா. 26, 21). ஆருயிர்கள் பயனருந்தும் (கோயிற்பு. வியாக். 6).

அருந்து 2 - தல் 5வி. 1. தன்னிடத்துக் கொள்ளுதல். கொழுஞ்சூட்டருந்திய திருந்து நிலை யாரத்து (பெரும்பாண்.46). 2. பூசுதல். சாந்தருந்தி

(புறநா.

161, 26). 3. தடவுதல். நெய் அருந்து நெறிகொள் ஐம்பால் (அகநா. 177, 4-5).

.

...

அருந்துதன் பெ. வேதனை செய்வோன். வேதனை செய்வோன் பெயரே அருந்துதன் (பிங்.832).

அருந்துதி' (அருந்ததி) பெ. ஏழு முனிவருள் நடுவரான வசிட்டர் மனைவி. இடப்பால் அருந்துதி காணும் அளவும் (திருக்கோ.300). அருந்ததி போல் கற் புடைய வாள்ஒத்த கண்ணாள் (தெய்வச். விறலி

தூது 103).

அருந்துதி 2 பெ. (அரும் +துதி) அரிய தோத்திரமாகிய தேவாரம். அன்பர் தொடுத்த அருந்துதி (ஆனந்த

வண்டு. 172).

அருந்தேரர் பெ. (நால்வகைத் தேர்வீரருள் ஒருவரா கிய) அர்த்தரதர். வீடுமனும் விதுரனும் முத லாகிய அருந்தேரர் பெருந்தேரர் (பாரதவெண். 105

உரை).

...

அருந்தோடு பெ. (அருந்து + ஓடு ) சாப்பிடும் தட்டுக் கணக்கின் மீது இறுக்கும் வரி. உள்ளூர் நிலமும் அருந்தோடும் சிறுபாடி காவல்கண்காணி (தெ.இ.

க. 7, 67).

அருநிகர் பெ. ஒப்பின்மை. அருநிகர்த் தன் திருத்தமை யனாகிய (முன். 5, 647).

அருநிலம் பெ. பாலைவனம் மிகுதிமிக்க அருநிலத்தே தன் கணவனை இழந்து தனித்த தலைமகள் (தொல்.

பொ. 79 நச்.).

அருநிலை 1 பெ.

ஆழமான நீர்நிலை. அருநிலை நீரின் அவள் துயர் கண்டு (பரிபா. 21, 43). வாய்ப்புகு நீரும் அருநிலையாய் ஆறியிருக்கவும் மாட்டாது மெலிகையும் (நம். திருவிருத். 16 வியாக்.).