பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/509

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருமைக்காரன்

அருமை யுடைத்தென்று அசாவாமை வேண்டும் (குறள். 611). கான் புறஞ்சேறலின் அருமை காண்ட லால் (கம்பரா. 2,5,30). ஒரு தந்திரம் பண்ணுவது உனக்கு அருமையோ (தாயுமா. 2,9). 3. கிடைத்தற் கரியது. அருமையில் எளிய அழகேபோற்றி (திருவாச. 4, 126). 4 இன்மை. ஈண்டு அருமை இன்மைமேல் நின்றது (குறள். 7 பரிமே.).

அருமைக்காரன் பெ. கொங்கு வேளாளருட் சடங்கு நடத்தும் பெரியோன்.

அருமைக்காரி

பால். (முன்.)

(கோவை வ.)

பெ. அருமைக்காரன் என்பதன் பெண்

அருமைசெய் -தல் 1வி. 1. பேராண்மை காட்டுதல். (செ. ப. அக.) 2. அருமை பாராட்டுதல். நம்மை அருமை செய்தான் போலே (கலித். 104, 71 நச்.).

அருமைப்படுத்து-தல் 5 வி. அருமை பாராட்டுதல். (செ.

ப. அக.)

அருமைமணம் பெ. கொங்கு வேளாளரின் சடங்குகளுள் ஒன்று. (முன்.)

அருமையார் பெ. கார்காத்த வேளாளரிடைத் தமையன் மனைவியைச் சுட்டும் மரியாதைப்பெயர். (தஞ்.வ

அருமொழி பெ.

அருமொழித்தேவர். பெரும்பழுவூர்

தேவன் அருமொழி (தெ. இ. க. 13, 75).

அருமொழித்தேவநாழி பெ. முதலாம் இராசராசனது பெயரால் வழங்கிய படி. நாளொன்றுக்கு அரு மொழித்தேவநாழியால் தப்பாமல் சந்திராதித்த வரை செல்லக்கடவதாக (முன். 12, 122).

அருமொழித்தேவமரக்கால் பெ. முதலாம் இராசராசனது பெயரால் வழங்கிய முகத்தலளவை. பொலிசைநெல் அருமொழித்தேவன் மரக்காலால் இருகலமாக

(முன். 8, 5).

அருமொழித்தேவர் பெ.

பெயர்.

அருமொழிநங்கை

முதலாம் இராசராச சோழனது

(முன். 17, 314).

பெ. வீரராசேந்திரசோழன் தேவி.

(சோழர் சரித். 1 ப. 248).

அருமொழிநங்கைநாழி பெ.

அருமொழிநங்கை பெய

ரால் வழங்கிய படி. அருமொழிநங்கை நாழியாலே உழக்குநெய் (தெ.இ.க.12,168).

379

அருவரு-த்தல்

அருமொழிநங்கைமரக்கால்

பெ. அருமொழி நங்கை

பெயரால் வழங்கிய முகத்தலளவை. அருமொழிநங்கை மரக்காலால் அளக்கும் நெல்லு

(முன். 3,1,20).

அருமொழிவிநாயகர் பெ. தஞ்சைப் பெருவுடையார் கோயிலிலுள்ள முதன்மை விநாயகர். (செ.ப. அக.

அனு.)

அருவக்காமன் பெ. சிவனால் மீளவும் உயிர்ப்பிக்கப் பெற்று இரதியைத் தவிரப் பிறர் காணாவகையால் காமன் பெற்ற காரணப்பெயர். உருவக்காமன் அபர காமத்தின் அதிபதிமட்டுமே; அருவக்காமனோ, கண்காணாக் காதலுக்கும் கடவுளாகிறான் (கூத்த.

ப. 257).

அருவக்காரன் பெ. அயல்வீட்டான். (நாஞ். வ.)

அருவச்சொத்து பெ. கணக்கில் தெளிவாகப் புலப்படாத சொத்து. (கலை. அக. 2 ப. 55)

அருவடச்சுரிவு பெ. அணிவகைகளில் ஒன்று. அரு வடச்சுரிவு கல் (தெ.இ.க. 8, 77).

அருவடி-த்தல் 11 வி. வயலில் இரண்டாம் உழவினைச் செய்தல். (நாஞ். வ.)

அருவதா பெ. சதாப்புச் செடி. (செ. ப. அக.)

அருவப்பெயர்ச்சொல் பெ.

மில்லாப் பெயர்ச் சொல்.

பண்பைக் குறிக்கும் உருவ (மானிட. க. அக. ப. 57)

அருவம்1 பெ. 1. உருவமின்மை. அருவமதாவதிங்கு ஆர் அறிவாரே (திருமந். 485). அருவமும் உருவ மும் ஆனாய் போற்றி (திருவாச. 4,193). அருவ மும் உருவுமாகி (கந்தபு. 1, 11, 92). 2. சிவபிரானது அருவம் அருவுருவம் உருவம் என்ற மூன்று நிலை களில் முதல் நிலை. அருவமும் ரூபா ரூபம் ஆன தும் அன்றி (சி.சி.1,38).

அருவம்' பெ. அழகின்மை. (தமிழ்ப்பாது. நூ.) அருவம்' பெ. அருமை. (யாழ். அக.)

அருவர் பெ. தமிழர். அருவரருவர் எனா இறைஞ் சினர் (கலிங். 453).

அருவரு-த்தல் 11 வி. மிக வெறுத்தல். பயிர்ப்பு என்பது பயிலாத பொருட்கண் அருவருத்து நிற்கும் நிலைமை (இறை. அக. 2 உரை). அஞ்சனஞ்சேர் கண்ணார் அருவருக்கும் (ஐயடிகள். சேத். 15). அன்ன மென் நடையினார் கலவியை அருவருத்து அஞ்சி