பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/511

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருவி3

அருவி' பெ. உருவமில்லாதது. அருவிக் கால் பாராட்ட (பரிபா. 6,53). உருவியாகிய ஒரு பெருங்கிழவனை அருவி கூறுதல் ஆனந்தம்மே (புற. வெண்.235

சாமுண்டி.).

அருவித்தின்னு-தல் 8 வி. மிகவும் துன்பப்படுத்துதல். அருவித் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன் (பெரியதி.

7, 7, 1).

அருவிலைக்காலம் பெ. பஞ்ச காலம். (செ.ப.அக.)

அருவு 1-தல் 5வி. 1. மெல்லென இறங்குதல். இட்ட குடிநீர் இருநாழி ஒருழக்காச் சட்ட ஒரு முட்டை நெய் தான் கலந்தட்ட அருவாச் சாறு என்று அங்கு அழாமுன் (ஐயடிகள். சேத். 16). 2.வழிதல். கண்ணீர் அருவ (நக்கீர. திருக்கண்ணப்ப. 1, 1). 3. அறுத்தொழுகுதல். கரையை ஆற்றுவெள்ளம் அரு வுகிறது (நாட்.வ.).

.

அருவு '-தல் 5 வி. இசை கூட்டுதல். சுரும்பு அருவ அறுபதம் பண்பாட (தேவா.7,16,1).

அருவு3-தல்

5 69. 1. துன்பப்படுத்துதல். அருவி நோய் செய்து (பெரியதி. 9,7,6). 2. தைத்த முள் போன்றன இருந்து உராய்தல். (பே.வ.)

அருவு -தல் 5 வி. கிட்டுதல். (வின்)

அருவு' பெ. அத்தி. (மரஇன. தொ.)

அருவுகா பெ. அருகுக்கால். (செ.ப. அக.)

அருவுடம்பு பெ. நுண்ணுடல். உடம்பென்ற பொது மையான் உருவுடம்பும் அருவுடம்பும் கொள்ளப் படும் (குறள். 345 பரிமே.).

அருவுரு பெ. சிவபிரான் வடிவங்களாகிய

அரு, அரு

வுரு, உரு என்ற மூன்றில் ஒன்று. அருவுருவாகும் சதாசிவம் (திருமந். 1810). அருவுருவுமாய் எங்கும் அமரா நிற்கும் (சூத. முத்தி. 4, 16).

அருவுருவம் பெ அருவுரு. அருவாய் உருவாய் அரு வுருவம் இல்லா உருவாய் (மதுரைச் உலா 273).

அருவேதனை

பெ. பெருந்தொந்தரவு.

உன்னுடைய அருவே தனை என்னாற் பொறுக்க முடியவில்லை (நாட் வ.).

381

அருள் (ளு) -தல்

23, 1).

அருள்(ளு) 1-தல் 5 வி. 1. தொடர்பு வற்றாமல் இயல் பாக எல்லா உயிர்கள் மேலும் இரக்கம் காட்டுதல். நல் கினை ஆகுமதி எம் என்றருளி (பதிற்றுப். 53,3). சுரம் பல வந்த எமக்கு அருளி (புறநா. 256,4). அருளாதான் செய்யும் அறம் (குறள்.249) அகல் வயலூரன் அருளுதல் பாண (ஐந்.ஐம். கடல்விடங் கண்டருளி உண்ட பிரான் (தேவா. 4, 93,10). ஆதலின் இதுபெற அருளென (கம்பரா. 3, 2, 42). உவந்து எமக்கருள (கலிங். 162). சக்கு அரவிந்தம் அன்னவன் தனக்கு அருளும் மெய்த் தலைவா (சிவஞா. காஞ்சி. பாயி. 2). 2. அளித்தல், நல்குதல். நாடவற்கு அருளிய பிள்ளை யாட்டும் (தொல். பொ. 63, 18 இளம்.). பகைவர்ஆரப் பழங் கண் அருளி (பதிற்றுப். 37, 3). வெள்நிண

...

மூரி அருள (புறநா.33,14). சேலடுகண்ணி அடகு அருளிச் செய்ய (சீவக. 354). (சீவக. 354). அணி தூசு ஆதியாய பாங்குள மற்றவை அருளி (கம்பரா. 1,5, 38). அடியேற்குத் தவநெறி தந்தருள் என்று (பெரியபு. தடுத்தாட். 79). ஏற்றவர்க்கு மாற்றாது அருள் செங்கை (தஞ்சைவா.கோ 126). மரியம்மாள் ஈன் றருளும் மைந்தனாரே (அந்தோனி. அண். 5). அருள்(ளு) *-தல் 5 வி. 1. பெற்றெடுத்தல். 5 உத்தான பாதன் அருள் உரோமபதன் (கம்பரா. 1, 5,35). 2. காத்தல். இவ்வையம் அருள வருநர் உளரே (சூளா. 2020).

.

அருள்(ளு) 3-தல் 5வி. மகிழ்தல். அரிமயிர் ஒழுகு நின் அவ்வயிறு அருளி மறை நவில் ஒழுக்கம் செய் தும் என்றனர் (தொல். பொ. 146 நச். உரைமேற்கோள்). அருள்(ளு )-தல் 5 வி. 1. கூறுதல். அங்கதற்கு இனியன அருளி (கம்பரா. 4, 10, 138). அமலனே அபயனாகி வருக என்று அருளியே (கலிங். 185). 2. கட்டளை யிடுதல். கமலக்கண்ணன் அருள் முறை...வானரர் ஆகிவந்தார் (கம்பரா. 1, 5, 28). முரசு என்று அருளுதலும் (கலிங். 280).

.

அறைக

அருள்(ளு)-தல் 5 வி. (செயல் அல்லது நிகழ்ச்சி கருணையுடன் நிகழ்வதாகக் குறிப்பிக்கும்) ஒரு துணை வினை. தன் வழிப்படூஉம் நம் நயந்தருளி (நற்.173, 3). பித்துப் பெருகப் பிதற்றுகின் றார்பிணி தீர்த்தருளாய் (தேவா. 4, 110, 10). சொல்லுகேன் கேட்டருளாய் (பெரியாழ். தி. 3, 10, 2). புருவம் நெறித் தருளிய (திருமாளி. திருவிசை. 1,9). ஆர்காப்பார் எங்களை நீ அறிந்தருளிக் காப்பதல்லால் (கலிங். 213). பெரியோய் ஈண்ட அமுதுசெய்தருள்க (பெரியபு. 4, 24).

அருள் (ளு) - தல் 5 வி. அச்சமுறுதல். அருண்டு என் மேல்வினைக் கஞ்சி (தேவா. 7,66,2).