பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/514

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளொடுநீங்கல்

அருளொடுநீங்கல் பெ. உலகின் துயரங் கண்டு பற்று நீங்குவதாகிய புறத்துறை. அருளொடு நீங்கல் உளப் படத் தொகைஇ (புற. வெண். வாகை. நூற். 8).

அருனாவரிசி பெ.

மருந்துச் சரக்கு

அறுவகை அரிசியுள்

(செ.ப.அக. அனு.)

ஒன்றான

அரூதா 1. பெ. சதாப்புச்செடி. (சங். அக.)

அரூதா' பெ. எருக்கு. (மதுரை. அக.)

அரூபம் பெ.

உருவமின்மை. அஞ்சலின் நயனநீர்

உகுத்து அரூபமாய் வீசுமே (இரகு. திக்கு.253).

...

அரூபமா-தல் 5 வி. பாழடைதல், அழிதல். அந்த ஊர் அரூபமாய்விட்டது (வட். வ.).

அரூபராகம் பெ. புத்தாகளின் பத்துக்

கட்டுக்களுள்

ஒன்றாகிய உருவம் பெறாமல் உலகில் வாழ விரும் புகை. (மணிமே. உ.வே.சா. முன்னுரை, பௌத்த தருமம் ப. 94)

அரூபலக்குமி பெ. விட்டுணுவின் வலப்புற மார்பில் மூன்று இலைகளைப் போல் தானே தோன்றிய மச்சம். (சிற். செந், ப. 133)

அரூபி1 பெ. 1.உருவமற்ற நிலை. ஆகாசமே அரூபி யாய்ப் போயின (தக்க. 212. ப. உரை). 2.(அருவத் திருமேனியாக உள்ள) சிவன். அரன்சிவன் அரூபி அனந்தன் உருத்திரன் (பிங். 94). 3. உருவமற்ற தாய் வானிலிருந்து உண்மை வழங்கும் குரல், அசரீரி. மல்லல் அரூபி வழங்கியதன்றே (பாரதம். 3,

3, 77).

அரூபி' பெ. கர்ப்பூரம். (சித். பரி. அக. ப. 155)

அரூபி3 பெ. சிவப்பு. (போகர் நி.20)

அரேசகண்டு பெ. (காறு) கருணைக்கிழங்கு. (வைத்.

விரி, அக. ப. 22)

அரேசகானம் பெ.

காறுகருணை. (மர இன. தொ.)

அரேசிகம் பெ. வாழை. (வைத். விரி. அக.ப. 22)

அரேணவம் பெ. கருங்கடலை. (மரஇன.தொ.)

அரேணு பெ. குலப்பெண்.

(நாநார்த்த. 761).

அரேணு...குலப்பெண்

384

அரை'

வால்மிளகு

அரேணு' பெ. வால்மிளகு. அரேணு

(முன்.).

3

அரேணு பெ.

அரேணுகம்1

கடலை. அரேணு கடலை (முன்.).

(அரேணுகை) பெ. 1. வால்மிளகு.

(வைத். விரி. அக. ப. 22, 2. காட்டுமிளகு. கருவேம்பு அரேணுகம் கைச்சோரம் வாலுகம் மகாகோளி மகிழம்பூ (தைலவ. 75 / சங். அக). 3. கடுமரத்தின் வேர்.(சங். அக.) 4. கவுந்திக்கொடி. (முன்.)

அரேணுகம்' பெ.

பெ. கடுக்காய். (வைத். விரி. அக. ப. 22)

அரேணுகம்' பெ. வாள். அரேணுகம் வாள் மருந் தாம் (அரும்.நி.439).

அரேணுகை

(கதிரை. அக.)

(அரேணுகம்1) பெ. காட்டுமிளகு.

அரேநுகம் பெ. பெ. வால்மிளகு. (வாகட அக.)

அரை1 பெ. 1. பாதி, இருசமக்கூறுகளில் ஒன்று. மெய்யின் அளபே அரையென மொழிப (தொல். எழுத். 11 இளம்.). மழை அமைந்துற்ற அரை நாள் அமயமும் (மதுரைக். 649). அரை இருள் யாமத் தும் பகலும் துஞ்சான் (சிலப். 4, 81). இன்று அரைக்கண் உடையார் எங்கும் இல்லை (தேவா. 4, 86, 7). அரை கடையிட்டு அமைவுற்ற முக்

கோடி (கம்பரா. 6, 36, 241). காவதம் அரையில் கண்டார் (பெரியபு. 10, 95). குடிலிலிருந்தே அரை நொடியில் வந்தான் (முக்கூடற். 64). 2. (கணக்.) முழு எண்ணில் பாதி, ஒன்றில் பாதி. (நாட். வ.) 3. (உடலின் நடுப்பகுதியாகிய) இடுப்பு. என் அரை ... சிதாஅர் களைந்து (புறநா.385,5). நுழை நூல்கலிங்கம் ...வெள் அரைக் கொளீஇ (மலைபடு. 562). பிறங்கிய முத்து அரை முப்பத்திருகாழ் (சிலப். 6, 87) பெருமான் அரையில் பீதக வண்ண ஆடை (நாச்சி.தி.13, 1). பொன்னார் மேனி யனே புலித்தோலை அரைக்கு அசைத்து (தேவா. 7, 24, 1). அரைச் சீரையின் பொலிவு (கம்பரா. 2 4, 158). அரைக்கொரு துகில் இலாதான் (செ. 4. (தூண் முதலியவற்றின்) நடுப்பகுதி, நடுவிடம். குளகு அரையாத்த குறுங் கால் (பெரும்பாண். 148).

பாகவத. 1, 3, 5).

2,

அரை பெ. வயிறு. கன்று அரைப்பட்ட கயந்தலை மடப்பிடி (மலைபடு. 307 கன்று வயிற்றிலே உண்டான மெல்லிய தலையினையுடைய-நச்.),