பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/516

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

அரைக்காப்பு

அரைக்காப்பு பெ. அரைஞாண். பாம்பால் இழைத்த அரைக்காப்பாரிடம் (சிங். சிலே. 75).

அரைக்காய்ச்சல் பெ. அவித்து முழுதும் காயாத நிலை யில் அரைத்த வதவலரிசி (செ. ப. அக. அனு.)

அரைக்கால் பெ. (1/8) எட்டிலொருபங்கு என்னும் பின்ன அளவு. அரைக்காலுக்குக் காசு ஒன்றுக்கு (தெ.இ.க.5,578). அக்கால் அரைக்கால் கண்டு அஞ்சாமுன் (தனிச்செய்யுட். சிந். காளமேகம் 144).

அரைக்கால்வாசி பெ. பழைய வரிவகை. வெட்டி மேற் பாடிகாவல் அரைக்கால்வாசி உள்ளிட்ட அனைத்து வர்க்கமும் (தெ.இ.க. 2, 61).

அரைக்கீரை (அறுகீரை, அறைக்கீரை1) பெ.

கீரை

வகை. அத்திப்பழமும் அரைக்கீரை நல்வித்தும் (திருமந்.160).

அரைக்குரல் பெ. தெளிவில்லாப் பேச்சு. (புதுவை வ.)

அரைக்குழல் பெ. அரைஞாணிற் கோத்து அணியும் மந்திரத்தகடு அடைத்த குழல். (செ.ப.அக. அனு.)

அரைக்குளம்பு பெ. நடக்கும்போது முன்கால் குளம்பு திருகிப் பூமியில் தேய்த்துக்கொண்டு நடப்பதாகிய மாட்டு நோய். (மாட்டுவாகட. ப. 212)

அரைக்கூழ் பெ. (தாள் முதலியன) முழுதும் கூழ் ஆகாத நிலை. (அச்சுக்கலை ப.26)

அரைக்கொட்டு பெ. பாதியளவு தேய்ந்து போன மண் வெட்டி. அரைக்கொட்டு எங்கே காணவில்லை

(வட். வ.).

அரைகடி பெ. இடுப்பில் உண்டாகும் சொறிப்புண். (செ.ப.அக.)

அரைகல் பெ. அம்மி. (பே.வ.)

அரைகுலையத்தலைகுலைய வி. அ. மிக்க அவசரமாய். அரைகுலையத் தலைகுலைய வந்து (திருவாய். 3, 5,

1 ஈடு).

அரைகுளம்பு பெ. கால்நடைகளின் குளம்புகளில் காணப் படும் ஒருவகைக் குற்றம். (பெரியமாட். 19)

அரைகுறை பெ. முற்றுப்பெறாமை. வேலை அரை குறையாகக் கிடக்கின்றது (பே.வ.)

36

அரைசு

அரைஙகரம் பெ. (குறுணியில் பாதி; ங என்பது குறுணிக்குக் குறியீடு) நால்நாழி. (செ.ப.அக.)

அரைச்சட்டை பெ. உடற்பயிற்சி செய்யும்போது இடுப் பிலிருந்து அடித்தொடை வரை அணியும் காற்சட்டை. அரைச்சட்டை அங்கி அனேகம் ( சுந். வேடு. 32).

அரைச்சதங்கை பெ. பிள்ளைகள் இடுப்பில் கட்டும் அணிவகை. (பே.வ.)

அரைச்சம்பளம் பெ. 1. பெற்ற ஊதியத்தில் சற்று ஏறக் குறையப் பாதி வரும் ஓய்வு ஊதியம்.

(செ. ப. அக. அனு.)2.பணியாளர் விடுப்பில் பெறும் பாதி ஊதியம்.

(அலுவலக வ.)

அரைச்சலார் பெ. அரைவிலை. (இலங்.வ.)

அரைச்சவரம் பெ. 1. தலைச்சவரம். (செ. ப. அக.அனு.) 2. முகச்சவரம். (முன்.)

அரைச்சாயம் பெ. இளஞ்சாயம். இளஞ்சாயம். (செ.ப. அக.)

அரைச்சொல் பெ.

முதிராதகல்வி. அரைச்சொல்

கொண்டு அம்பலம் ஏறலாமா (பழ. அக. 534).

அரைசல்புரைசல் பெ. தெரிந்தும் தெரியாமலும் உள்ள நிலை, அரைகுறை. செய்தி அரைசல்புரைசலாகக் காதில் விழுந்தது (தஞ்.வ.).

அரைசன் (அரசன்,அரயன், அரையன்)பெ.

மன்னன்.

இனக்குருகு குப்பை வெண்மணல் ஏறி அரைசர் ஒண்படைத் தொகுதியின் இலங்கித் தோன்றும் (நற். 291, 2-4). அரைசர் பின்னோர் அகநகர் (சிலப் 15,109). அரைசன் கலம் என்று அகமகிழ்வு எய்தி (மணிமே.25,129). அரைசனே அன்பர்க்கு (திருவாச. 22,3). உலகம் ஆண்ட அரைசன் ஒதுங்க (கம்பாா. 1, 10, 75).

அரைசாந்து பெ. அரைத்த சுண்ணாம்பு. (செ. ப. அக.)

அரைசிலை பெ. (அரைப்பதற்கான கல்) அம்மி. அரைசிலை யம்மியாகலு முரித்தே (பிங். 1695). அரைசு (அரசு) பெ. 1. மன்னன். அரைசுபடக் கடக்கும் ஆற்றல் (பதிற்றுப். 34,11). அரைசு பட அமர் உழக்கி (புறநா. 26, 6).

அரைசு கால்

கிளர்ந்தன்ன (கலித். 149,3). அரைசே

யான்