பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/517

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரைசுகட்டு

இதுகாண அஞ்சினேன் (கம்பரா. 4, 7, 165). 2. அரசியல், ஆட்சிப்பகுதி. அரைசு மேம்படீஇய அகநிலை மருங்கின் (சிலப். 5,161) அரைசு எய்தி இருந்த பயன் எய்தினன் (கம்பரா. 1, 6, 10). 3.தலைவன், இறைவன். சீருடைச் சிவபுரத்து அரைசே (திருவாச. 22, 2).

அரைசுகட்டு

பெ. கோயில் சுதந்தர வகை. ஆதி சண் டேசுரதேவர்க்குப் பறைமை பாடிகாவல் அரைசு கட்டு மற்றும் சுதந்தரங்களும் (புது. கல். 396).

...

அரைசெலவு பெ. குழம்பு போன்றவை வைப்பதற்காக அரைக்கும் மசாலைப் பொருட்கள். (தஞ்.வ.)

அரைஞாண் 1 (அரைநாண்) பெ. இடுப்பிற் கட்டும் கயிறு, பொன்னாலோ வெள்ளியாலோ ஆன கொடி. இரதநம் அரைஞாண் (பிங். 1194). மேலணி சுந்தர அரைஞாணும் (திருமலைமுரு. பிள். 18). பொற்கொடியொன்றிற் கட்டும் அரைஞாணும் (சோலை. குற. 127). ஆதிப்பசும்பொன் அரை ஞாணும் (தெய்வச். விறலி. தூது 214). மூன்றடுக்குப் பொன்னரைஞாண் (கூளப்ப. காதல் 134). மோதிரம் அரைஞாண் கெழுமச்சாத்தி (மாயூரப்பு. தேவி. 18).

அரைஞாண்' பெ. கிணற்றின் செங்கல் வரிசை. (தொ.வ.) அரைஞாண்கூட்டு-தல் 5 வி. குழந்தைக்குச் செய்யும் சடங்காகிய இடுப்பில் கயிறு கட்டுதல். (நாட். வ)

அரைஞாண்கொடி பெ.

அரைஞாண்மணி

அரைஞாண்!. (பே.வ.)

பெ. அரையிற்கட்டும் சதங்கை. கட் டழகு மேய அரைஞாண்மணி கறங்க (கந்தபு. 1, 14,

2).

அரைஞாணம் பெ. இடையில் அணியும் அணி. (நாஞ்.

வ.)

அரைத்தகடு பெ. தகட்டால்

செய்யப்பட்ட நாணயம்.

அரைத்தகடு காயல் தகடு என்ன வழங்கவரும் பிர தானி (மூவரை. விறலி. தூது 80).

அரைத்திரணையரம் பெ. பாதி திரண்ட அரம் என்னும் கருவி. (செ.ப.அக.)

அரைத்துப்பூசு-தல் 5 வி. ஒரே அளவாக அளவாக இருத்தல், வண்ணத்தை அரைத்துச் செழிப்பம் தோன்றப் பூசு பெ.சொ.அ.1-25 அ

3

87

அரைநொடி

தல். செடிகள் உயரம் தாழ்வு இலலாமல் அரைத் துப்பூசியது போல வளர்ந்துள்ளன (வட். வ.).

அரைத்தூக்கி பெ. தூக்கு மரவகை. (செ. ப. அக. அனு.) அரைத்தெரச்சி பெ. தெரச்சி என்னும் மீன்வகை. (நாஞ்.

வ.)

அரைத்தொடர் பெ.இடைச்சங்கிலி. நாணும் அரைத் தொடரும் (பெரியாழ். தி. 1, 4, 4).

அரைதிரள்(ளு)-தல் 2 வி. இடை அல்லது தண்டு திரண்டு காணப்படுதல். (நாஞ்.வ.)

அரைநலவன்

(of air.)

பெ. நன்றாக விதையடிக்கப்படாத மாடு.

அரைநாண் (அரைஞாண்1) பெ. இடுப்பில் கட்டும் கயிறு, பொன்னாலோ வெள்ளியாலோ ஆனகொடி. பொன் அரைநாணொடு (பெரியாழ். தி. 1, 7, 2).

அரைநாவை பெ. கலப்பையின் ஒரு பக்கம் வளைந்த நுனி. (வின்.)

அரைநாள் பெ. 1. நடு இரவு, நள்ளிரவு. மழை யமைந்துற்ற அரைநாள் அமயமும் ((மதுரைக். 649). நீர் இரங்கு அரைநாள் (நற்.341,8). குறிவரல் அரைநாள் (அகநா. 138,15).2. நடுப்பகல், நண்பகல். மண்டிலம் ஒருதிறம் சாரா அரைநாள் அமயத்து (நெடுநல். 73-75). 3. நாளின் பாதியளவு. குறுமகள் புணரப் புணரின் அரைநாள் வாழ்க்கையும்

...

வேண்டலன் (குறுந். 280).

அரைநீர் பெ. குறித்த காலங்களிற்

பாய்ச்சும் நீர். (செ.ப.அக. அனு.)

சாகுபடிக்குப்

அரைநூல் பெ. 1. இடுப்பிலும் காலிலும் கட்டும் சதங்கை.

அரை நூல் சதங்கை

...

(அரும்.நி.403).

மேகலை. அரை நூல் மேகலை (முன்.).

அரைநூன்மாலை

2.

பெ. மேகலாபரணம். அரை நூன்

மாலையும் பொன்சரடும் போகச் சின்னங்களும் (திருப்பா.106 பிரமாணத்.).

அரைநொடி பெ. மிகு விரைவு. அழைக்கும் பொழு தினிற் போக்குச் சொல்லாமல் அரை நொடிக்குள் வருவான் (பாரதி. கண்ணன். 1, 3).