பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/518

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரைநோக்கு

அரைநோக்கு பெ. (சோதிடம்) கிரக நோக்கு வகை. (செ.ப. அக.)

அரைப்பட்டிகை பெ. 1. மாதர் இடையணி வகை. மனாவே கலை அரைப்பட்டிகையாகும் (திவா. 1277). 2. வீரர் வாள் செருகுவதற்கு இடுப்பில் அணி யும் பட்டிகை. கருவி விலக்காகப் புனைந்த அரைப் பட்டிகையும் (சிலப். 14, 170 அடியார்க்.).

388

அரைப்படி -த்தல்

11 வி.

அரைகுறையாக்

அரைப்படித்த மூஞ்சூறு கழனிப்பானையில்

வைத்ததாம் (பழமொழி).

கற்றல்.

கை

அரைப்படி பெ. ஒரு படியில் பாதியளவினது. (பே.வ.)

அரைப்படிப்பு பெ.

அரைகுறைக் கல்வி. அரைப்படிப் பால் இவனுக்கு அடக்கமில்லை (பே.வ.).

அரைப்பணம்1 பெ. (இடையில் பாம்பின் படம் போன் றதாகிய) அல்குல். அரைப்பணத்தை விற்று உடுத்த பட்டு (திருப்பு. 65). அரைப்பணமே போதும் (கூளப்ப. விறலி. தூது 267).

அரைப்பணம் 2 பெ. பாதிக்காசு. (த. த. அக.)

அரைப்பு: பெ. 1. மாவு, பொடி, சாந்து முதலியன அரைக்கை. அரைப்பமை சாந்தமும் (பெருங். 1, 41, 126). 2. தேய்த்துக் குளிக்கப் பயன்படும் இலுப்பைப் பிண்ணாக்குத்தூள். (நாட். வ.)

அரைப்பு' பெ. உசிலஇலைத்தூள். (மரஇன. தொ).

அரைப்புக்கட்டி பெ. இலுப்பைப் பிண்ணாக்கு (சங். அக.)

அரைப்புப்பை பெ. பறவைகளின் வயிற்றுப்பகுதி. (மருத். க.சொ.ப.108)

அரைப்புலக்குருடு

பக்கத் தோற்றம்.

பெ. பாதிப்பார்வை நீக்கம், ஒரு (முன். ப. 117)

அரைப்பூட்டு பெ. 1. இடைக்கட்டு. (வின்.) 2. இடுப்பின் பொருத்து. (முன்.) 3. தொடைச்சந்து. (புதுவை வ.) 4. அரை நேரம். இன்று அரைப்பூட்டு வேலை

(வட். வ.).

அரைப்பேச்சு பெ. பேசத்தொடங்கும் குழந்தையின் திருந் தாப்பேச்சு. (செ.சொ. பேரக.)

அரைப்பை பெ. 1. இடுப்பிற் கட்டும் நீண்ட பணப்பை, சாளிகை. (திவ்ய. அக.ப.17) 2. அல்குல். இடை

துவள் உடைகழல இட்டத்து தொட்டுத்திரித்து (திருப்பு. 159).

அரைமனைசோடி

அரைப்பையது

அரைப்பையாக்கு-தல் 5 வி. வேண்டியபோது சிறிது சிறிதாக நுகர்தல். ஆடறுத்து அரைப்பையாக்கி அனுபவிக்கலாம் (திருவாய். 1, 7, 2 ஈடு).

வி.

...

அரைபடு-தல் 6 1. அழிவுபடுதல். நெருக்கினுட் படலால் உடலரைபட்டு (குசே. 262). ஆயிரம் பெரு வெள்ளம் அரைபடத் தேய நிற்பது (கம்பரா. 6, 30,130).2. உரைசப்படுதல். துடையிடுக்கு அரை பட்டுப் போயிற்று (பே.வ.). 3. பழிக்கப்படுதல். அவன் பலர்வாயினும் அரைபடுகிறான் ((LDGOT.). 4. அரைக்கப்படுதல். சாந்து நன்றாக அரைபட வில்லை (முன்.).

அரைபாணா பெ. சிலம்பக் கழிவகை. (மதிமோச. 1,66)

அரைமண்டலம் பெ. ஒரு மண்டலத்தின் பாதி நாட்கள். இம்மருந்தை அரைமண்டலம் சாப்பிடவும் (பே.வ.).

அரைமண்டி பெ. நாட்டியமாடும்போது நிற்கும் நிலை. (இலங்.வ.)

அரைமணி பெ. 1. அரைஞாண்மணி. (செ. சொ. பேரக.)

2. அரைச்சதங்கை. (முன்.)

அரைமணி2 பெ. முப்பதுநிமிடம். (முன்.)

அரைமதியிரும்பு பெ. பிறைமதி

(பெருங், 1,32, 96).

போன்ற வடிவுடைய

அங்குசம். அரைமதி இரும்பொடு கவைமுள்கரீஇ

அரைமலை பெ. மலையின் சார்பு, அடுக்கம்.

அரை

மலையின்கண் சிறிய தலையையுடைய மறிகளை யுடையவாகிய பெரியகண்ணையுடைய

...

பிணைகள் (புறநா. 2 ப. உரை).

.

மான்

அரைமனிதன் பெ. 1. மதிப்புக் குறைந்தவன். ஆடை யில்லாதவன் அரைமனிதன் (பழ அக. 1021). 2.சிறுவன். (பே.வ.)

அரைமனிதன் அமுரி பெ. சிறுவர் சிறுநீர். (சித். பரி

அக. ப. 156)

அரைமனைசோடி பெ. ஒரு வரிவகை. இந்தப்படிக்கு அரைமனை சோடி அதிகாரிக்கடைக்கூட்டு சோடி புறவகையும் (தெ.இ.க. 17,581,18).