பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/520

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரையன்சம்பா

அரையன் சம்பா பெ. ஒருவகை நெல்லின் பெயர். (செ.

ப. அக. அனு.)

அரையன் விரோதி (அரசன்விரோதி') பெ. கோவைக் கொடி. (மரஇன. தொ.)

அரையனணுக்கர் பெ. அரசர் மெய்காப்பாளர், கிடைப் புறம் வைத்தான் அரையனணுக்கரில் பூவன் பறை யனென் (தெ. இ. க. 14, 56).

அரையாப்பு பெ. 1.

தொடையிடுக்கில் உண்டாகும் கட்டி. பறக்குமடா கிரந்தி அரையாப்பு சூலை (போகர் 700 537). 2. தொடைச் சந்து. (புதுவை வ.)

அரையாப்புக்கட்டி பெ. அரையாப்பு. (செ.ப. அக.) மேலான கிரந்தி அரையாப்புக்கட்டி (போகர் 700,

163).

அரையாறுபடு-தல் 6 வி. குறைதல். பிரிவிலும் அரை யாறு படாதபடி காணும் கலவியிலே அவன் தேக் கின சுகாதிசயம் (திருவாய். 7, 3, 1 ஈடு).

அரயைாறுபடுத்து-தல் 5 வி. குறையச்செய்தல். அந்த ரசத்தை அரையாறுபடுத்தி (திருவாய். 4.4ஈடு,பிர.)

அரையிரவு பெ. நள்ளிரவு. மடவரலிங்கு அரையிர விற் கண்விழித்தாள் (ஞானவா. சிகித்து. 75).

அரையிருள் பெ. நள்ளிரவு. அரையிருள் நடுநாள் (குறுந். 190). உரவுரும் உரறும் அரையிருள் நடு நாள் (நற்.68,8).

அரையிறுதி பெ. (இக்.) விளையாட்டில் இறுதியாட்டத் துக்கு முந்திய ஆட்டம். அரையிறுதி யாட்டத்தில் விளையாட இக்குழு தேர்ச்சி பெற்றது (செய்தி.

வ.).

அரையுரல் பெ. 1. மருந்தரைக்கும் கலுவம்.(செ.சொ. பேரக.) 2. குழியம்மி. (முன்.)

அரையெழுத்து பெ. நெடுங்கணக்கைப் பற்றிய சிற்ற

றிவு. அரையெழுத்துக் கற்றிருக்கிறான் (பே.வ.).

அரைவட்டம் பெ. 1. வட்டத்தில் பாதி. (நாட். வ.) 2. அரை மூடி. (பே.வ.)

அரைவடம் பெ. அரைச்சதங்கை என்னும் அணிகலன். அரைவடங்கள் கட்டி (திருப்பு.415).அரைவடம் ஆழி (திருமவிைமுரு.பிள் 40).

3

90

அரைவீற்றுவளைவு

அரைவடிவப்பிறை பெ. அரைமதி வடிவத் தோற்றம். (ஆங். தமி. களஞ்சியம் ப. 484)

அரைவண்டி பெ. சிறுவண்டி. அரைவண்டியும் மாடும் அனைத்தும் போச்சு (நாஞ். மரு.மான். 9,505).

அரைவயிரக்கண் பெ. கம்மாளர் கருவிகளுள் ஒன்று. (சங். அக.)

அரைவயிரன் (அரைவயிறவன், அரைவயிறன்) பெ. கருக்காய். (சூ. அக.)

அரைவயிறவன் (அரைவயிரன், அரைவயிறன்) பெ. கருக்காய். (மதுரை. அக.)

அரைவயிறன் (அரைவயிரன், அரைவயிறவன்) பெ. கருக்காய். (இலங். வ.)

அரைவளைந்தான் பெ. தட்டுச் சுற்றுடை. (திருநெல்.வ.)

அரைவளைவாசனம் பெ.

யோகாசனங்களுள் ஒன்று.

(செ.ப. அக. அனு.)

அரைவாசி1 பெ. பாதியளவு. இதில் அரைவாசி தேறும்

(பே.வ.).

அரைவாசி 2 பெ. அரைமூச்சு. (சாம்ப. அக.)

அரைவாதம்1

பெ. இளம்பிள்ளைவாதம். (செ. சொ.

பேரக.)

அரைவாதம்' பெ. தொடைச்சந்தில் உண்டாகும் ஒரு

வகை வாதம். (முன்.)

அரைவாய்க்கொண்டுதின்னல் பெ. நோயினால் மாடு முதலியன மெதுவாக இரையெடுக்கை. (பெரியமாட்

156)

அரைவாயன் பெ. 1.தெளிவாகப் பேச அறியாதவன். (பே.வ.) 2. திறமையற்றவன். அரைவாயன் கால் வாயன் பேர் சொல்ல முடியாது (பழமொழி).

அரைவித்து பெ. நெல் பாதியளவு விளைந்து இருத்தல். வயலில் தானியம் அரைவித்தாயுள்ளது (பே.வ.).

அரைவீற்று பெ. வட்டத்தில் பாதி. (செ.ப.அக. அனு.) அரைவீற்றுவளைவு பெ. கட்டத்தில் அமைக்கும் வில் வளைவு வடிவம் (செ.ப.அக.)