பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/521

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரைவெறி

அரைவெறி பெ. கட்குடியால் உண்டாகும் சிறுமயக்கம்.

(all air.)

அரைவேக்காடு பெ. 1. பாதியளவு வெந்தநிலை. சோறு அரைவேக்காடாக இருக்கிறது (பே.வ.) 2. அரைகுறையாகத் தெரிந்து கொண்டவன். அறி வில் இவன் ஓர் அரைவேக்காடு (பே.வ.). 3. பக்குவமின்மை. (இலங். வ.)

அரைவேட்டி பெ. ஆடவர் இடுப்பில் கட்டும் ஆடை. அரைவேட்டி வாங்கக் கூடக் காசில்லை (பே.வ.).

அரைவைப்பல் பெ. கடைவாய்ப்பல். (மருத். க. சொ. ப.

278)

அரைவைப்பை பெ. 1. மீன், பூச்சி, நத்தை வகை களின் சதைப்பற்றுள்ள இரைப்பை. (கலை. அக, 2 ப. 100) 2. பறவைகளின் குடற்பைகளுள் இரண்டாவ தான் அரைவைப்பை. (முன்.) 3. கறகுடல். (முன்.) அரைவைரக்கண் பெ. பொற்கொல்லர் பயன்படுத்தும் கருவி. (தொ.வ.)

அரைவைரம் ப. முதிராத நெல். (வட்.வ.)

அரோ . அத்தி. (மரஇன. தொ.).

2

அரோ இ. சொ. செய்யுளில் வரும் அசைச்சொல், வயல்பரக்கும் வார் வெள்ளருவி பரந்து ஆனாது அரோ. (பரிபா. 17, 40). நோதக இருங்குயில் ஆலுமரோ (கலித். 33, 24). அரிதரோ தேற்றம் (குறள்.1153). கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கவ்வையுடைத்தரோ (முத்தொள். 110). வென்றி அரிதரோ (புற.வெண். 105). நற்குணக்கடல் ஆடு தல் நன்றரோ (கம்பரா. பாயி.2).

அரோகணிக்கடுக்காய் (அரோகி, அரோகிணி, அரோ கிணிக்கடுக்காய், அரோகிணிக்காய்) பெ. கடுக்கா யில் ஒருவகை. (குண. 1 ப. 141)

அரோகதிடகாத்திரம் பெ. நோயில்லாத வலிமையுள்ள உடல் அரோகதிடகாத்திரம் தந்து என்னையே அன்னை போலும் கருணை வைத்து ... உணர்த் தினை (தாயுமா.27,59).

அரோகம் பெ.

தந்து (முன்.).

நோயின்மை. அரோக திடகாத்திரம

அரோகி (அரோகணிக்கடுக்காய், அரோகிணி, அரோ கிணிக்கடுக்காய், அரோகிணிக்காய்) பெ. கடுக்காய்

வகை.

தண்மையுண்டாம்

(தேரை. வெண். 141).

...

அரோகிமுதலாம்

39

1

அல்1

அரோகிணி (அரோகணிக்கடுக்காய், அரோகி, அரோ கிணிக்கடுக்காய், அரோகிணிக்காய்) பெ. கடுக்காய் வகை. அரோகிணிக் கடுக்காயால் சந்நிபாதமும் சீதமும் நீங்கும் (பதார்த்த. 1002 உரை).

அரோகிணிக்கடுக்காய்

(அரோகணிக்கடுக்காய், அரோகி, அரோகிணி, அரோகிணிக்காய்) பெ. கடுக்காய் வகை.

(முன். 1002).

பெ. 1.

அரோகிணிக்காய் (அரோகணிக்கடுக்காய், அரோகி, அரோகிணி, அரோகிணிக்கடுக்காய்) பெ. பெ. கடுக் காய் வகை. அரோகிணிக்காய் ஒன்றுண்டால் சந்நிபாதமொடு சீதம் பறக்கும் காண் (முன்.). அரோசகம் (அரோசனம், அரோசிகம்) (மருத்) உணவில் வெறுப்பு. நாவையும் மனதை யும் அனுசரித்த திரிதோசங்களினால் அரோசகம் பிறக்கும் (சீவரட், ப.89).2 அருவருப்பு. அன்ன பானாதிகளில் ஈ எறும்பு முதலியவற்றில் ஒன்று வீழ்ந்திருப்பக்காணினும் மிகவும் அரோசகம் உடை யவனாய் (கொலைமறு. 17 குறிப்புரை).

அரோசம் பெ. வெறுப்பு. கன அந்தன் என்மீது அரோசமா (சர்வ.கீர்த்.30,1).

அரோசனம் (அரோசகம், அரோசிகம்) பெ. 1. அரு வருப்பு. அரோசனத்துடன் அந்நகர் நண்ணினார் (பாரதம். 1, 5,105). 2. சுவையை அறிகிற நாக்கின் இயல்பு கெடச்செய்யும் நோய். (மருத் . க.சொ.ப. 180)

அரோசி-த்தல் 11 வி. அருவருப்பாதல். உணவு எனக்கு அரோசித்துப் போயிற்று (வட்.வ.).

அரோசிகம் (அரோசகம், அரோசனம்) பெ. 1. உண வில் வெறுப்பு.(பே.வ.) அரோசிக நோய் காணாது ஓடும் (போகர் 700 191). 2 அருவருப்பு. ஆழ்ந்து நினைக்கின் அரோசிகமாம் இவ்வுடல் (தாயுமா.

45, 8).

அரோணிக்கபாலி பெ. கவிழ் தும்பை. (மரஇன.தொ)

அரோதம் பெ. தடுப்பு. சீத அரோதக் குருதித்திரை ஒரீஇத் தூதர் ஓடினர் (கம்பரா. 6, 28, 1).

அரோரூட்டு பெ. ஒருவகைக் கிழங்கு. (மரஇன.தொ.) அல்1 பெ. 1. இராக்காலம். அல்சேர்ந்து அல்கி அசை தல் ஓம்பி (மலைபடு. 256). அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் (நற். 142, 9). பின்னையும் அல்லிடைப் பெயர்ந்தனர் (சிலப். 13, 136). அல்