பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/522

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்2

இடை ஆக்கொண்டு அப்பதி அகன்றோன் (மணிமே. 13,38). அல் ஊண் நீத்தலின் அஃகிய உடம்பினன் (பெருங்.4,7,159). அல் உணா வல் அமணர் (தேவா. 4, 101, 2). அல்லும் நண்பகலினோடும் ஆன மாலை காலையும் (திருமழிசை. திருச்சந். 118). விடி யாத அல்லினோடும் (நந்திக்கலம். 59). அல் பகல் ஆக்கும் சோதிப் பளிக்கறை (கம்பரா. 1, 15, 52). அல்லூர் வெண்பிறை அணிந்தார் (பெரியபு. 21, 215). அச்சம் அற்று எல்லும் அல்லும் அதரிடை வருதல் உற்றான் (திருவால.பு.53,7). 2. இருள். அணிமிக வந்திரைஞ்ச அல் இகப்பப் பிணி நீங்க (பரிபா.திர. 1,63). அல்வழி வந்து நம் அல்லல் தீர (பெருங்.2, 1,71). அல்லை ஆண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச (கம்பரா. 2, 11, 42). அல் புறம் செல்ல விரிசுடர் எஞ்சினும் அஞ்சும் (அம்பி. கோ. 269). அல் பெரும் கோதை மலர்மங்கை வாழிடம் (அறப்பளீ . சத. 20). அல் எனுங்களத்து அண்ணல் தன் அணிவிழா (திருவிளை. பு. திருநகரச்சி. 8). அல் படும் மிடற்றினோன் (சானந்த.பு. பாயி. 6). அல்லினுக் குட் பெரும்சுடர் காண்பவர் (பாரதி. தோத்திரம். 19, 5). 3. அந்திவேளை. அல் அங்காடி அழிதரு கம்பலை (மதுரைக். 544). 4. கருமை. அல்ஆர் கண்டத்து அண்டர்பிரான் அருளால் பெற்ற படிக் காசு (பெரியபு. 21, 259). அல் கண்ட விடம் பிறந்த தலைநாளில் (திருவெண். பு. பாயி. 1). அல் அற்ற ஆனை தந்தவல்லி (திருப்பு. 1204). அல் உறும் குழல் திலோத்தமையாம் எனும் அணங்கும் (செ. பாகவத. 12, 8, 18). அல்கொண்ட மிடற்றானை அகத்தில சேர்ப்போம் (செவ்வந்திப்பு. பாயி. 1). 5. மயக்கம். அல்ஆல் சாயுச்சியப் பயனை (ஒழிவி. பொதுவி. 6 அல்லால் என்பதை மயக்கத்தால் எனக்கொள்க- சிதம். உரை). அல் மருவு பீடை யுண்டாம் (அறப்பளீ, சத. 77). அல்நுழையாத உள்ளத்து (சூத. முத்தி. 3,

50).

...

அல்2 பெ. நாள். அல் ஆயிரம் ஆயிரம் அஃகினவால் (கம்பரா. 6, 17, 68).

அல் பெ. 1.சூரியன். அல்லே இரவியும் (அக.நி. அம்முதல். 183). 2. வெயில். அல்லே ... வெயிலும் என்றே விளம்பும் நாற்பெயரே (முன்.).

அல்' பெ. மதில். (யாழ். அக.)

அல்' பெ. அதிசாரம். (சங். அக.)

அல்' பெ. சுக்கு. (முன்.)

அல்' பெ. விறகு. (சாம்ப. அக.)

392

அல்11

அல் பெ. சூட்டினால் உண்டாகும் வயிற்றுளைச்சல் அல்லது வயிற்றோட்டம். (முன்.)

அல்' பெ. (இலக்.) மெய்யெழுத்து. அல்லின்மேல் அச்சேறின ஆரிய முடிவு (தக்க. 124).

அச்சும்

அல்லா அல்லும் ஆம் எழுத்து (திருநூற்.21).

அல்10 கு.வி.அ. (அல்லேன், அல்லேம், அல்லை, அல் லிர், அல்லன், அல்லர், அல்லள், அன்று, அன்றி அல்ல முதலிய வடிவங்களுக்குரிய) எதிர்மறைக் குறிப்பு வினையடி. நல்லை அல்லை (குறுந்.47). அறிந் தனிர் அல்லிரோ (நற். 376, 12). கடுங்கண்யானை காப்பனர் அன்றி (புறநா. 337,15). புலக்குவேம் அல்லேம் (ஐங். 80). செல்கென விடுக்குவன்அல்லன் (பொருந. 177). அல் இடத்துக் காக்கினென் காவாக் காலென் (குறள். 301). தமர் அல் மாக்களை (பெருங். 1, 43, 66). அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே (தேவா. 1, 1, 1). பெயர்பொருள் அல் பொருள் (தண்டி. 56). கொடியை அல்லைநீ யாரையும் கொல்கிலாய் (கம்பரா. 1, 10, 77). அல் நெறியில் செறிந்தடைந்த அமண்மாசு (பெரியபு.

28, 651).

அல்11 இ. சொ. 1. தன்மை ஒருமை வினைமுற்று விகுதி. என் ஏன் அல் என வரூஉம் தன்வினை யுரைக்கும் தன்மைச் சொல்லே (தொல்.சொல். 203 சேனா.). காலமுன்ப நின் கண்டனென் வருவல் (புறநா.23,17). சென்றவர்த் தருகுவல் என்னும் (ஐங். 474). கொன் ஒன்று கிளக்குவல் அடுபோர் அண்ணல் (மதுரைக். 207). குடிசெய்வல் என்னும் ஒருவற்கு (குறள். 1023). தாள் தொழுதகையேன் போகுவல்யான் (சிலப். 11, 149). எறிதரு கோலம் யான் செய்குவல் என்றே (மணிமே. 23, 40).இதன் நினக்கு ஈதே ஆகில் இயற்றுவல் காண்டி (கம்பரா. 5, 3, 148). 2. உடன்பாட்டு வியங்கோள் விகுதி. செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறல் (தொல். சொல்.20 சேனா.). மக்கட் பதடியெனல் (குறள்.196). 3. எதிர்மறை வியங்கோள் விகுதி. நிலம் பெயரினும் நின்சொற்பெயரல் (புறநா. 3,14). பயனில் சொல் பாராட்டுவானை மகனெனல் (குறள். 196). சிறியர் என்று இகழ்ந்து நோவு செய்வன செய்யல் (கம்பரா. 4, 8, 12). 4. எதிர்மறை ஏவல் ஒருமை விகுதி. இளங்கொடியே இடர் எய்தல் (திருக்கோ. 15). 5. தொழிற்பெயர் விகுதி. அறியலும் அறியேன் (நற்.

147, 7). இருத்தலும் இல்லேன் நிற்றலும் இல்லென (சிலப். 23, 180). செய்வன செய்தல் (சிலப்.23,180).

...

இனியகூறல் (கம்பரா. 4, 8, 11). 6. எதிர்மறைப்பெய ரெச்சம். தாமுடைய நெஞ்சம் துணையல்வழி (குறள்.