பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/524

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்கு - தல்

கதிர்ச் செல்வன் தோன்றினான் (கம்பரா. 3, 11, 101). 2. அழிதல். அளியினால் தொழுவார் வினை அல்குமே (தேவா. 5, 23, 10). 3. கலங்குதல். அல்கிய திருவைத் தேற்றி (கம்பரா. 6,37,265).

அல்கு5-தல் 5 வி. மறத்தல். நெறிஅரு நீள்சுரத்து அல்குவர்கொல் தோழி (திணைமொழி. 15).

அல்கு பெ. தங்குகை. அல்கு தங்கலும் கங்குலும் ஆகும் (பொதி.நி.2,133).

அல்கு பெ. 1. இரவு. அரில் இவர் புற்றத்து அல்கு இரை நசைஇ (அகநா. 257,19). அல்கு உண்டு அடங்கல் வழி (ஆசாரக். 29). மான் அதள்படுத்து அல்கில் காலையில் ஏகும் (கப்பற்கோ. 296). 2. பிற் பகல். அல்கு நிழல் போல் அகன்றகன்றோடுமே (நாலடி.166).

அல்குகழி பெ. 1. சிற்றாறு. (சங். அக.) 2. உப்பங்கழி. அல்குகழியினுஞ் செல்லாதோ கடல் (நன்னெறி 16)

அல்குநர் பெ. குடிமக்கள். அல்குநர் போகிய ஊரோர் அன்னர் (கலித். 23,11).

அல்குப்பை பெ. கரிசலாங்கண்ணி, பொற்றலைக் கையாந் தகரை. (வைத். விரி. அக. ப. 11)

அல்குபதம் (அல்குமிசைவு)பெ.

900

சிலநாள் வைத்து

உண்ணுதற்குச் சேர்க்கும் உணவு. வல்வில் இளை யர்க்கு அல்குபதம் மாற்றா மன்னன் (புறநா. 353,10). அல்குபதம் மிகுத்த கடியுடை வியன் நகர் (அகநா. 49, 14).

அல்குமிசைவு (அல்குபதம்) பெ.

சிலநாள்வைத்து

உண்ணுதற்குச் சேகரிக்கும் உணவு. பெரும்பழம் அல்குமிசைவு ஆகும் (புறநா. 236,2).

அல்குல்1 பெ. 1. பக்கம்.கவைத்தாம்பு

தொடுத்த

காழ் ஊன்று அல்குல் (பெரும்பாண். 244). 2. இடைக் குக் கீழும் தொடைகட்கு மேலும் தோற்றத்தில் பாம் பின் படம் போன்று அகன்றமைந்துள்ள உடற்பகுதி. அல்குல் தைவரல் அணிந்தவை திருத்தல் (தொல். பொ. 259 இளம்.). பசுங்காழ் அல்குல் பற்றவன் ஊக்கிச் செலவுடன் விடுகோ (நற்.222, 5-6). மாண் வரி அல்குல் மலர்ந்த நோக்கு (பதிற்றுப். 65, 7).நல் எழில் அல்குல் வாடிய நிலையே (ஐங்.351). மார் பும் அல்குலும் மனத்தொடு பரியை (பரிபா. 13,54). மிடைந்து சூழ்போகிய அகன்றேந்தல்குல் (சிலப்.

39

04

அல்பத்துவம்

மணி

13.160). மேகலை விரீஇய தூசுவிசி அல்குல் (பெருங். 1, 44, 6). கள னெனக் கரையும் அல்குல் (சீவக. 684). பையரவு அல்குல் மடந்தை நல்லீர் (திருவாச. 9, 12). மணந்தாழ் புரி குழலாள் அல்குல் போல வளர்கின்றதே (திருக்கோ. 9). வாமமேகலையினுள் வளர்ந்தது அல்குலே (கம்பரா. 1, 12, 62). கிளர் காஞ்சி அல்குல்வரி அரவுலகைவென்ற துணிவு கொண்டார்ப்ப (பெரியபு. தடுத்தாட். 138). ஆர்த்த மணிக் காஞ்சி அல்குலாள் (மதுரைச். உலா 242). 3.பெண்ணுறுப்பு. அல்குல் வடிவு அகல் உபத்தமும் ஆகும் (பிங். 1003). அல்குலும் செந்தா மரைப்பூப்போல் இருக்கும் (கூளப்ப. காதல் 201). 4. அரை, இடை. அரியல் பெண்டிர் அல்குல் கொண்ட (அகநா. 157, 1). அல்குல் மருங்குல் நடுவு நுசுப்பு இவை ஒல்கும் இடைக்கு ஒத்த

2, 14).

ர்

பெயர்

(உரி. நி.

அல்குல்' பெ. பெண் இனங்களின் வயிற்றுப் பகுதியில் காணப்படும் ஒரு நோய். (மருத். க சொ. ப. 167)

அல்குலழற்சி பெ. பெண்குறி வெளியுறுப்புகளின் வேக் காடு. (சாம்ப. அக.)

அல்குற்கந்தம் பெ. அல்குற் புற்றுநோய். (முன்.)

அல்குற்காசு பெ. அல்குலிற் கட்டிய மணிகள். நிழல விர் அல்குற்காசு சிலம்பொடு சிலம்ப (சீவக. 1254).

அல்குற்சூலை பெ. பெண்குறியின் பெண்குறியின் சூதகத்தாரையில் ஏற்படும் வலி. (செ. சொ. பேரக.)

அல்குறு-தல் 6வி. தங்குதல். பல்குறு மானுடப் பரப்பெலாம் ஒருங்கு அல்குற இடம் குறைவாக (Salmar. 4. 49, 16).

அல்சா பெ. சுக்கான். (வட். வ.)

அல்சி பெ. ஆழிவிதைச் செடி. (சாம்ப. அக.)

அல்தி பெ. கோலியாடுபவன் கோலி அடிக்கத் தடை யாக உள்ள செத்தை குப்பைகளை நீக்குவதற்காகச் சொல்லும் வார்த்தை. (செ. ப. அக. அனு.)

அல்நார் பெ. கல்நார். (ராட். அக.)

அல்பசங்கை பெ. மலசலங்கழித்தல். (நாட். வ.)

அல்பத்துவம் பெ. 1.சிறுமை. (பே.வ.) 2. வெகுத் துவம் என்பதற்கு எதிர்மறையானதும் ஓர் இராகத்தில்