பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/525

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்பபலன்

சிறுபான்மை உபயோகிக்கப்படுவதுமாகிய சுரம். (செ.

ப . அக.)

அல்பபலன் பெ. குறைந்த பயன். (பே.வ.)

அல்பம் (அற்பம்') பெ. 1. சிறுமை, கொஞ்சம். இந்த வேடிக்கைப் பேச்சில் ஓர் அல்ப மகிழ்ச்சி (முன்.). 2. இழிவு, தாழ்வு. இது ஓர் அல்பத்தன மான செயலாகும் (LAGT.).

அல்பமிறை பெ. தானியமாகக் கொடுக்கும் வரிவகை. நிலஞ்சுட்டி வெட்டிக்கூற்று நெல்லு அல்பமிறை உள்ளிட்டு (தெ.இ.க. 5, 489).

அல்பாயுசு பெ. குறைந்த வாழ்நாள். அல்பாயுசில் போய்விட்டார் (பே.வ.).

அல்பொருள்1 பெ. தீவினை, பாவம். அறனை நினைப் பானை அல்பொருள் அஞ்சும் (திரிகடு. 72).

அல்பொருள்' பெ. (அணி.) (அணி) உவமை. (அணி. 3)

அல்மதம் பெ. ஒரு மருந்துச் சரக்கு, கல்மதம். (பதார்த்த. 1129/செ. ப. அக. அனு.)

அல்ல கு.வி.மு. பலவின்பால் எதிர்மறைக் குறிப்பு வினை முற்று. ஒருவற் கணியல்ல மற்றுப்பிற (குறள். 95).

அல்ல பெ. அல்லாதவை.

அவண்வரினும் (தொல்.

நீரல்லசொல்லியக்கால்

...

சொல்லிய அல்ல பிற பொ. 656, 24 இளம்.). வெகுளார் (நாலடி. 64).

கள்ளத்த அல்ல கருதின் உள்ளத்த ஆக (ஏலாதி

27).

...

அல்லகண்டம் பெ. துன்பம். அத்தா உன் பொற் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டங்கொண்டு அடியேன் என் செய்கேனே (தேவா. 62, 1). அமைவிலா அல்லகண்டங்கள் (தேவிமான். 1,20).

6,

(தேவிமான்.1,20).

அல்லகம்'

பெ.

உற்பலச்செடி.

கோலமார் காவி

உதித்தலின் அல்லக அத்திரி (திருத்தணி. பு.வ.59).

அல்லகம்" பெ. செந்தாமரை. (சங். அக.)

அல்லகம்' பெ. கோவணச்சீலை. (முன்.)

அல்லகாத்திரி பெ. தணிகை மலை. வைகல் தொறு மலர்மூன்று கோலமார் காவியுதிர்த்தலின் அல்ல காத்திரி (தணிகைப்பு. வர. 59).

39

5

அல்லது 2

அல்லகுறி

(அல்லகுறிப்பு)

பெ. தலைமகனால் அன்றிப் பிறிதொன்றால் நிகழும் குறிபற்றிய அகப் பொருள் துறை. அல்லகுறியாவது, தலை மகனால் நிகழ்த்தப்படு வனவாகிய புள்ளெழுப்பல் முதலியன பிறிதொன்றினால் நிகழ்தல் (நம்பியகப். 159 உரை).

அல்லகுறிப்படு - தல்

6 வி. தலைவன் குறித்த இடம்

தெரியாது தலைவி

மயங்குதல். அல்லகுறிப் படுதலும் அவள்வயின் உரித்தே (தொல். பொ. 131 இளம்.).

அல்லகுறிப்பு (அல்லகுறி) பெ. தலைமகனால் அன்றிப் பிறிதொன்றால் நிகழும் குறிக்கு அகப்பொருளிலக் கியம் கூறும் பெயர். வல்லியன்னவள் அல்லகுறிப் பொடு சிறைப்புறத்து உரைத்தது (திருக்கோ. 172 கொளு).

...

அல்லங்காடி பெ. மாலையந்தியில் நிகழும் கடை. அல்லங்காடி அழிதரு கம்பலை (மதுரைக். 544). அல்லங்காடியுமுண்டாதலின் இதனை நாளங்காடி என்றார் (சிலப். 5, 63 அடியார்க்.).

அல்லசங்கம் பெ. வெள்ளி. (சாம்ப. அக.)

அல்லணை பெ. கல்லா அமைத்தல்

அணைக்கட்டு.

(செ.ப. அக. அனு.)

அல்லத்தட்டு-தல் 5 வி. 1. தடுத்தல் (வின்.) 2. நம் பிக்கையைக் கெடுத்தல். (முன்.)

அல்லது1 பெ.

(நல்வினை அல்லாதது) தீவினை. நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின் (புறநா. 195,7). அல்லது கெடுப்பவன் அருள்கொண்ட முகம்போல (கலித். 148, 4). அல்லது கடிந்த அறம் புரி செங்கோல் (பெரும்பாண். 36). அறம் நனி சிறக்க அல்லது கெடுக (ஐங். 7). அழச்சொல்லி அல்லது இடித்து (குறள்.795).

அல்லது இ. சொ. இரண்டிலொன்று, அப்படியில்லை யென்றால், அதுதவிர, அல்லாமல் என்னும் பொருள் பயக்கும் இணைப்பு இடைச்சொல். குறிப்பினும் இடத் தினும் அல்லது வேட்கை நெறிப்பட வாரா (தொல். பொ.108 நச்.). செந்நீர்ப் பூசல் அல்லது வெம்மை யரிது நின் அகன்றலை நாடே (பதிற்றுப்.28,13). இரங்குநர் அல்லது தருநரும் உளரோ (அகநா. 75,15). மகளிர் மலைத்தல் அல்லது (புறநா.10,9). விலங்குபகை அல்லது கலங்குபகை அறியா (பட்டி னப். 26). தன்னையே தான் நோவின் அல்லது (நாலடி. 76). சேவடி தொழுதல் ஒன்றோ அல்லது