பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/526

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்லதூஉம்

இவ்வுடம்பு நீங்க வேற்றுலகு அடைதல் ஒன்றோ (சீவக. 1745). ஆறிலொன்றறமென அருளின் அல்லது ஒன்று ஊறுசெய்து உலகினுள் உவப் பதில்லையே (சூளா. 54). பாதம் அல்லது பற்றிலர் பற்றிலார் (கம்பரா. பாயி. 3). நீயாக அல்லது மாந் தழையாக நினைந்திலளே (தஞ்சைவா.கோ. 129) மல்லிகை அல்லது முல்லை வாங்கி வா (பே.வ.).

அல்லதூஉம் இ.சொ. (ஒன்றை முதலில் குறிப் பிட்டுப் பின்னர் மற்றொன்றை இணைக்கும் போது வரும் இணைப்பு இடைச்சொல்) மேலும். அல்லதூஉம் பெண்டிர்க்கு அறம் என்பது கற்பு (இறை. அக. 29 உரை). அல்லதூஉம் அவனுடைத் துணைவர் ஆயினார்க்கு (கம்பரா. 5, 12, 22).

அல்லதேல் இ. சொ. அல்லாமற் போனால். அத்த இங்கினிக் காத்தருள் அல்லதேல் அன்னவா றொன்றினைச் செய்வாயே (கந்தபு. 1, 5, 10).

...

அல்லதை இ. சொ. அல்லாமல். என்னுற்றன கொல்

எனின் அல்லதைக் கிழவோற் சேர்தல் கிழத்திக் கில்லை (தொல். பொ. 200 இளம்.). கை இரப் போர்க்குக் கவிதல் அல்லதை ... மலர்பு அறியா (பதிற்றுப். 52,11). செய்வினை மருங்கின் எய்தல் அல்லதை (புறநா.38,13). உடம்பாங் கொழிந்ததை அல்லதை நெஞ்சம் நின்னுழையதுவே (அகநா.29, 23). சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கல்லதை நீருளே பிறப்பினும் நீர்க்கவைதாம் என் செய்யும் (கலித். 9, 15-16). நடுக்கின்றி நிலைஇய என்பது அல்லதை ஒடுக்கம் கூறார் (சிலப். 1, 17).

அல்லம் (அல்லமாகிகம், அலம்) பெ. இஞ்சி. நல்லம் அல்லம் நறுமருப்பு இஞ்சி (பிங்.2916).

அல்லமன் பெ. (துறைமங்கலம் சிவப்பிரகாசர் இயற்றிய) பிரபுலிங்கலீலைக் கதைத் தலைவர். காமம் அல்லமன் அன்றி வடிவுளார் யார் கடந் திடுவார் (பிரபு. லீலை 5, 69).

அல்லமாகிகம் இன.தொ.)

(அல்லம், அலம் ) பெ. இஞ்சி. (மர

அல்லரசம் பெ. இஞ்சிச்சாறு. அல்லரசம் நல்அமுதை யார் ... விட்டுப் பிரிவார் (தேரை. வெண். 288).

அல்லரியல் பெ. கண்ணறையுள்ளதாக நெய்யப்படுவது. அல்லரியற் புடைனை. (இலங்.வ.).

39

26

அல்லன்2

துன்பம். அல்லல் தீர ஆர்வமொடு

அல்லல்

அல்லல் பெ. அளைஇ (தொல். பொ. 144, 10 இளம்.). நெஞ்சம் அலமலக்குறுமே (குறுந். 43). புறவின் அல்லல் சொல்லிய (புறநா. 39,1). அல்லல் அரும் படர் காண்க நாம் சிறிதே (நற்.307, 10). எல் வளை நெகிழச் சாஅய் அல்லல் உழப்பது எவன் கொல் (ஐங். 27). அல்லல் களைந்தனள் தோழி (கலித். 54,16). அல்லல் அறிய முறையிட்டால் (காரை . அந். 4), அல்லல் என்செயும் அருவினை என் செயும் (தேவா. 5, 1, 4). நாயேனை அல்லல் அறுத் தாட்கொண்டு (திருவாச. 31, 5). அல்லலுற் றழுங்கி நெஞ்சிற் கட்டியங்காரன் ஆழ்ந்தான் (சீவக. 438). அல்லலும் உள இன்பம் அணுகலும் உள 2, 8, 27). அல்லற்பவந் தொலைக்கும் அங்கயற் கண் அம்மை (மதுரைச்.உலா 39).

.

(கம்பரா.

அல்லல்கழனி பெ. துன்பத்திற்கு ஏதுவான உடல். (சித். பரி. அக. ப. 25)

அல்லவன் பெ. தீயவன். நல்லவர்கள் வாழ்வுபெற அல்லவர்கள் வீழ்வுபெற (கம்பன் பிள். பாயி. 2).

அல்லவை

பெ. 1. தீவினை, பாவம். நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும் செவிலிக்குரிய (தொல். பொ. 151 இளம்.). வேந்தனும் அல்லவை செய்யான் (புறநா. 191, 5). அழுக்காற்றின் அல் லவை செய்யார் (குறள் 164). அறம்புரிந்து அல் லவை நீக்கல் இனிதே (இனி. நாற். 21). அல்லவை செய்தார்க்கு அறங்கூற்றம் (சிலப். 20 வெண். 1). அல்லவை புரியும் மாந்தர்க்கு அத்திரம் ஒன்றும் வாயா (சீவக. 815). 2. பயனற்றவை. அல்லவை பயனில் சொல்லாகும்மே (பிங். 1906). அல்லவை ஒழித்தவாறு (கூர்ம. பூருவ. பதிகம் 24). 3. மாறானவை. தவமறைந்து அல்லவை செய்தல் (குறள். 274).

அல்லறம் பெ.

தீவினை, பாவம். அல்லறம் செய் வோர் அருநரகடைதலும் (மணிமே. 16, 89). அல் லறம் செய்யும் அறிவில்லவரும் (சூளா.1954).

அல்லறைசில்லறை

அல்லன்1

பெ. மிச்சத் தொகை. (வட். வ.)

கு.வி.மு. அன்மைப் பொருளில் வரும் ஆண் பாற் குறிப்பு வினைமுற்று. இறையுமல்லன் (சி.சி. சுப. 8, 38).

அல்லன்' பெ. 1. வேறுபட்டவன். ஒருவனே எல்லாம் ஆகி அல்லனாய் உடனும் ஆவன் (சி.சி. சுப. 46 மறைஞா.). 2. தீயவன். அல்லனோடொரு பந்தி யயின்றிடல் (சேதுபு. காசி. ப. 66).