பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/528

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்லாரி3

அல்லாரி' பெ. அடர்த்தியின்மை. (செ. ப. அக.)

அல்லாருகம் பெ. பெருந்தாளி. (சாம்ப. அக.)

அல்லால் இ.சொ. தவிர, அல்லாமல். கூந்தலும் பித்தையும் சோர்ந்தன பூவினுமல்லால் சிறிதானும் நீர் நிறம் தான் தோன்றாது (பரிபா. திர . 2,85-86). நீர்முற்றி மதில் பொரூஉம் பகையல்லால் நேரா தார் போர் முற்றொன்றறியாத புரிசை (கலித். 67, 4). அஞ்சாமை அல்லால் துணைவேண்டா (குறள். 497). இன்றே யல்லால் இறந்தோர் பலரால் (சிலப். 14, 44). அறிந்தபின் அல்லால் ... மறையை மொழியற்க (பழமொ. நா. 257). காகுத்தன் அல்லால் ஒரு தெய்வம் யானிலேன் (இயற். நான்முகன் திருவந். 53). அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக் கேனே (தேவா. 7, 24, 1). பயன்பெறும் பெற்றி அல்லால் நவை என்றலுக்கு ... ஆர் கொல் (கம்பரா. 4, 7, 44). நினதருள் வழியே நிற்பது அல் லால் அடுத்த நெறி வேறு உளதோ (பெரியபு. 10,

46).

...

அல்லாவண்ணம் பெ. அற்ற தன்மை.

ணம் பெற்றேன் யான் (திருவாச. 5,86).

...

அல்லாவண்

அல்லி (அல்லை2) பெ. 1. அல்லிக்கொடி. அல்லிப் படூஉம் புல்லாயினவே (புறநா. 248, 5). ஒருக்கார்ந்த அல்லி (கைந். 47). 2. வெள்ளல்லிப்பூ, வெள்ளாம்பல். அல்லி கழுநீர் அரவிந்தம் ஆம்பல் (பரிபா. 12, 78). அல்லியும் மல்லிகையும் (தேவா. 7,29,5). கொடிக் குழாம் சூழ அல்லிபோல் இருந்து (சீவக. 2631).3. அகவிதழ். தாமரைத் தாதின் அல்லி அயல் இதழ் (அகநா. 16, 1-2). புன்னை அல்லியிடைப்பெடை வண்டுறங்கும் (தேவா. 7, 10, 8). அல்லிக்கமலத்து அயன் (திருவாச. 27, 4). குவளைப்போதின் அல்லி யுட் கிடந்தவோலை (சீவக. 669). அல்லித்தாமரைக் கண்ணன் (கம்பரா. 3, 4, 35). தாமரை அல்லித் தவி சிடை வளர்ந்த (நம்பியாண். மும். 28,5). அல்லியந் தாமரை அனைய சேவடி (செ.பாகவத. 10, 15, 12). அல்லியங் கமலக்கண்ணன் (குசே. 570). 4. தாமரை. அல்லியந் திரு மறு மார்ப (பரிபா. 1, 39).அல்லி சேர் அணங்கிற்கு அணங்கு அன்னவள் (சீவக. 162). அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன் (பெரியதி. 1, 7,9).5. பூந்தாது. நல் இள வனமுலை அல்லியொடு அப்பியும் (அகநா. 389,5). தாமரை அல்லிசேர் ஆயிதழ் (கலித். 13,12). 6. அல்லியரிசி. அல்லியுண்ணும் கழிகல மகளிர் (புறநா. 280,13). அல்லி அரும்பதமும் அடகும் காயும் ஈந்தாள் (சீவக. 2602).

...

3

98

அல்லிப்பாவை

யல்லி

அல்லி' பெ. காயாமரம். பூவை அஞ்சனி புன்காலி காசை வச்சி காயாவாகும் (பிங். 2715).

அல்லி' பெ. மாதுளை. அல்லியுங் அதுங்கப் பழுத்திருக்க (நாட். வ).

அல்லி பெ. இளவேர். (யாழ். அக.)

அல்லி" பெ. வெண்கடுகு. (வாகட அக.)

கொய்யாவும்

அல்லி' பெ. மதுரையில் தனிப் பெண்ணரசு செலுத்தி

அருச்சுனனை மணந்த அரசி.

அல்லிப்பெருமாள்

அரசாளும் நாயகியாள் (பவளக். ப. 4).

அல்லி பெ. இராப்பொழுது. அல்லி வண்டு இயங் கும் (தேவா. 7, 8, 4).

அல்லி ' (அலி) பெ. ஆண்பெண் அல்லாதது. அல்லி அலியும் (பொதி.நி.2,131).

...

அல்லிக்கிழங்கு பெ. கொட்டிக்கிழங்கு. (மரஇன. தொ.)

அல்லிக்கேணி பெ. சென்னையில் பார்த்தசாரதிப்பெரு மாள் கோயில் அமைந்துள்ள வைணவத்தலம். மயிலைமா அல்லிக்கேணியான் (இயற். நான்முகன் திருவந். 35). சிற்றவை பணியால் முடிதுறந்தானைத் திருவல்லிக்கேணிக் கண்டேன் (பெரியதி. 2, 3, 1). அல்லிக் கேணியின் மேவிய பெருமாளே (நூற்றெட் திருப்பு. தொண்டை. 21).

அல்லிக்கோணி

தொ.)

பெ. காட்டுக் கற்றாழை. (மரஇன.

அல்லிகம் பெ. பேய்க்கொம்மட்டி. (பச்சிலை. அக.)

அல்லித்தண்டு பெ. அல்லியின் தாள். அல்லித்தண்டு அற்று வீழ்ந்தபோதும் நூல் அறாது தொடர்ந்து நிற்கும் தன்மை போல (சீவக. 2876 நச்.).

அல்லித்தாமரை பெ. செங்கழுநீர். (செ.ப. அக.)

அல்லித்தாள் பெ. 1. அல்லித் தண்டு. அல்லித்தாள் அற்றபோதும் அறாத நூலதனைப்போல (சீவக. 2876).2. பூவின் உறுப்பாகிய அகவிதழ். (செ.ப.அக.)

அல்லிப்பாவை பெ. அல்லியம் என்னும் கூத்தில் ஆட்டும் பொம்மை. அல்லிப்பாவை ஆடுவனப்பு ஏய்ப்ப (புறநா. 33,17).