பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/529

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

அல்லிப்பிஞ்சு

அல்லிப்பிஞ்சு பெ. பூம்பிஞ்சு இளம்பிஞ்சு. (வின்.)

அல்லிப்பீடத்தரிவை பெ. தாமரையை இருக்கையாகக் கொண்ட திருமகள். அல்லிப்பீடத்தரிவைக்குத் தன் அழகமர் தோளே கோயில் ஆக்கிய பல்லவர் கோமான் (பாரத வெண். 4 உரை).

அல்லிமாதர் பெ. திருமகள்.

அல்லிமாதர் புல்க

நின்ற ஆயிரம் தோளன் இடம் (பெரியதி. 1, 7, 9).

அல்லிமுடி பெ. அல்லிப்பூவின் மகரந்தக் காம்பு. அல்லி முடி போல் சுருண்டு (மலைய. ப. 237).

அல்லிமூக்கு பெ. இரத்தம் ஒழுகும் சில்லிமூக்கு. (நாட்.வ.) அல்லியக்கிழங்கு பெ. கொட்டிக்கிழங்கு. (மரஇன. தொ.) அல்லியந்திரு பெ. தாமரைப் பூவின் அகவிதழில் வீற் றிருக்கும் திருமகள். அல்லியந் திரு மறுமார்ப நீ அருளல் வேண்டும் (பரிபா. 1, 35-36).

அல்லியம்1 பெ. (நீர்க்கொடியாகிய) கொட்டி. (வாகட அக.)

அல்லியம்' பெ. 1. மாயோன் ஆடிய பத்துவகை ஆடல் களுள் யானை மருப்பு ஒடித்து ஆடிய ஆடல் அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள் அல்லியத் தொகுதியும் (சிலப். 6, 48). 2. சிவன் ஆடிய பன்னிரு கூத்துக்க ளுள் ஒன்று, ஆனந்தத்தாண்டவம். அல்லியத்தின் முதற்படிமம் தில்லைமன்றுள் ஆடும் ஆனந்தத் தாண்டவம் (கூத்த. ப.218).

அல்லியம்' பெ. கலப்பை. (சிந்தா. நி. 299/செ.ப. அக. அனு.)

அல்லியம் + பெ. இடையர் வாழும் ஊர். (யாழ். அக.)

அல்லியரிசி பெ. அல்லிப்பூவில் உள்ள சிறுவிதை. நீரிலே நின்று விளைந்த வலிய விளை தலையுடைய அல்லியரிசியும் (சீவக. 2682 நச்.).

அல்லியன் பெ. தன் குழுவினைப் பிரிந்த யானை. (வின்.)

அல்லியாமரம் பெ. படகு வலிக்கும் தண்டு. (முன்.)

அல்லியான் பெ. (தாமரைப் பூவில் இருக்கும்) நான்முகன். அல்லியான்... நாகணைப் பள்ளியான் அறியாத பரிசெலாம் (தேவா. 5,33,9).

-99

அல்லை2

அல்லியுணவு பெ. அல்லியரிசியாலான உணவு.

யுணவின்

மனைவியோடினியே

யால் (புறநா.250, 5).

அல்லி

புல்லென் றனை

அல்லிரி பெ. அல்லிக்கொடி. (மரஇன. தொ.)

அல்லிருள் பெ. இரவில் செறிந்த இருட்டு. அருக்கனேர் நிற்பினும் அல்லிருளே காணார்க்கு (சி.போ. 11, 2,1). அல்லிவாதாளி பெ. அமுக்கிராச்செடி. (மரஇன.தொ.) அல்லீசகம் பெ. நடுவில் ஒருவரும் அவரைச் சுற்றிப் பலரும் இருந்து ஆடும் கும்மி, கோலாட்டம் போன்ற விளையாட்டு. தக்க அல்லீசகம் லலிதமோடு ஆடு வேன் (பாலசரிதம் 4, 5).

அல்லு-தல் 5 வி. 1. முடைதல். குருவி கூட்டை அல்லு கிறது (செ. ப. அக.). 2. பின்னிக்கொள்ளுதல். மரங்கள் அல்லிக்கொண்டன (முன்.).

அல்லுச்சில்லுப்படு-தல் 6 வி. சிறிது சிறிதாகக் கெடுதல்.

(பே.வ.)

அல்லுப்பு பெ. கல்லுப்பு. (போகர்நி. 20)

அல்லும்சில்லும் வி.அ. சில்லறை சில்லறையாக. (ரா.

வட். அக.)

அல்லும்பகலும் பெ. இரவிலும் பகலிலும். அல்லும் பகலும் அனவர தமும் துதித்தால் (சரசு. அந். காப்பு). அல்லும் பகலும் களவு கொடுவந்து நுகர் வோன் (ஞான. உபதேசகா. 1195). அல்லும் பகலும் இங்கே இவை அத்தனை கோடிப்பொருளினுள்ளே (பாரதி. தோத்திரம். 64,9).

அல்லுழி பெ. அல்லாத இடம். அல்லுழி எல்லாம் பரந்துபட்டு (தொல். பொ. 495 நச.).

அல்லூரம் பெ. 1. வில்வமரம்.

வில்வபத்திரி. (வாகட அக.)

(பச்சிலை. அக.) 2.

அல்லேலூயா பெ. கிறித்துவர் கூறும் இறைவா உன் னைப் போற்றுதும் என்னும் பொருள்படும் சொல். (செ. ப. அக.)

அல்லை' பெ. உணவுப்பொருளாகும் கிழங்கினையுடைய ஒரு கொடிவகை. (வின்.)

அல்லை'

அக.)

(அல்லி') பெ. அல்லிக்கொடி. (பச்சிலை.