பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/530

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்லை

அல்லை' கு. வி. மு. இல்லை. மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் பொழுது (குறள்.

1221).

...

அல்லைதொல்லை பெ. பலவகைத் துன்பம். (பே.வ) அல்லோலகல்லோலம் பெ. 1. ஆரவாரம். (நாட். வ.) 2. குழப்பம். (செய்தி.வ.)

அல்லோன் பெ. 1. (இரவில் ஆட்சிபுரியும்) சந்திரன். விது நிலவு அல்லோன் ... சந்திரன் ... தன் பெயர் (பிங்.225). அருக்கனும் அல்லோன் என்னும் அரும் இரு சுடரும் (ஞானா. ராய. நகர. 24). 2. தீயவன். அல்லோன் எனா வரவும் நாணாது (கலைமகள்

பிள். 77).

அல்வழக்கு பெ. தகாதவொழுக்கம். அல்வழக்கொன்று மில்லா அணிகோட்டியர்கோன் (பெரியாழ்.தி. 1,

1, 11).

அல்வழி' பெ. 1. இரவில் வரும் வழி. சூழ்கானத் தல்வழி வேற்றுமையில் (சங்கர. கோவை 188). 2. நெறியல்லாத நெறி. அல்வழி என்மனம் ஆகுமோ (கம்பரா. 1,10,147). அல்வழி அகற்றி எமை நல்கு கலைமங்சை (கலைமகள் பிள். 85). 3. அல்லாத வேறிடம். தேற்றமும் சிறப்பும் அல்வழியான (தொல். எழுத். 273 இளம்.). 4. அல்லாத பொழுது. தாமுடைய நெஞ்சம் தமர் அல்வழி (குறள்.1300).

அல்வழி' பெ. (இலக்.) வேற்றுமைப்புணர்ச்சியல்லாத அல்வழிப்புணர்ச்சி. அல்வழியெல்லாம் இயல்பென மொழிப (தொல். எழுத். 362 இளம்.). வேற்றுமை

...

ஐம்முதல் ஆறாம் அல்வழி என ஈரேழே (நன். 152). இலக்கணம் உணர்த்து ... அல்வழியும் (கலை

மகள் பிள். 43).

அல்வழிச்சாரியை பெ. (இலக்.) (அகலப்பாயல் என வரவேண்டிய இடத்து அகலத்துப்பாயல் என வரு தல் போன்று) வேண்டாத இடத்தில் வரும் சாரியை. அகலப் பாயல் என இருபெயரொட்டாக்கி அத்தை அல்வழிச் சாரியை என்க (பதிற்றுப். 16,17-18 ப. உரை). அல்வழிப்புணர்ச்சி பெ. (இலக்.) வேற்றுமைப்புணர்ச்சி யல்லாத பதினான்கு தொகைநிலைத் தொடர்கள். அல் வழிப்புணர்ச்சி வினைத்தொகை முதலிய ஐந்து தொகை நிலையும் எழுவாய்முதல் ஒன்பது தொகா நிலையுமெனப் பதங்கள் பொருந்தும் தொடர்ச்சி பதினான்காம் (நன். 152 சங்கரநமச்.).

அல்வா பெ. கோதுமைப் பாலும் சீனியும் நெய்யும் கொண்டு செய்யும் இனிப்புப் பண்டம். (நாட். வ.)

4

00

அலக்கரிவாள்

அல்வான் பெ. பலவகை வண்ணத்துணிகள். (செ.ப.

அக.)

அல்வினை பெ. தீவினை. அல்வினை அடைந்த காலை அல்லலில் துளைவர் எல்லாம் (குசே. 122). அல்வெண்ணிரத்தம் பெ. அளவுக்கு மேற்பட்ட வெள்ளை யணுக்கள் உண்டாவதால் தோன்றும் இரத்தநோய். (மருத். க. சொ. ப. 7)

அல-த்தல் 12 வி. 1. வருந்துதல், துன்புறுதல். அலப் பென்தோழி அவர் அகன்ற ஞான்றே (குறுந். 41). அலந்தனர் பெரும நின் உடற்றியோரே (பதிற்றுப். 71,8). அலந்தாரை அல்லல் நோய் செய்தற்றால் (குறள்.1303). அலந்த மஞ்ஞை யாமம் கூவ (பெருங். 1,54, 144). உடலுள்ளுறு சூலை தவிர்த் தருளாய் அலந்தேன் அடியேன் (தேவா. 4, 1, 6). ஆய்ச்சி வன் தாம்புகளால் புடைக்க அலந்தானை (நம். திருவிருத்.86). அலந்தேன் அடியேன் (திரு வாச. 4,185). ஆழியால் வெருட்டலுற்றாய் அலந் தனை பெரிதும் என்றான் (சூளா. 1458). மன் மதன் மலர்க்கணை படுந்தொறும் அலந்தேனே (திருவாலி. திருவிசை.2,2). பார்மிசை நின் ஒலி காணுதற்கு அலந்தோம் (பாரதி. தேசியம். 11, 3). 2. வறுமைப்படுதல். அலந்தவர்க்குதவுதல் (கலித். 133, 6). அலத்தற்காலை ஆகியது (LDGCLD. 15, 50).

கை

...

...

அலந்து ஒன்று அற்றார்க்கு கொடுப்ப (பாரத வெண். 234). 3. ஏக்குறுதல். இன்பச்சுடர் காண்பான் அலந்து போனேன் (திருவாச. 32, 1). அலந்து மதுகர முனிவர் பரவவளர் கமலம் அனைய திருவடியிணைகள் (சிவப்பிர. 3). அண்டை வீட்டுக்கூழை அலந்து வாரியுண்டு வயிறு நிரப்பும் (நாஞ். மரு. மான். 10, 159).

அலக்கண் பெ. துன்பம், துக்கம், கலக்கம். உமை யாள் அஞ்சி விரல் விதிர்த்து அலக்கண் நோக்கித் தரித்திட்டார் சிறிதுபோது (தேவா. 4, 32, 1). அரும்பசிநலிய அலக்கண் உற்று (நம்பியாண். திருக் கலம். 7, 4). ஆவிபதைப்ப அலக்கண் எய்து கின்றான் (கம்பரா. 2, 3, 18). சிலர் வாய் விண்டு அலக்கண் உற்று அழ (செ.பாகவத. 7,2, 6). உல கத்துள்ளோர் மேயின அலக்கண் நீப்பான் (கச்சி. காஞ்சி. திருக்கண். 274). தீக்குணம் பிறங்க நீறணிந் தால்...அலக்கண் ( கழுக்குன்றப்.வசுதேவ.16). அலக் கண் அற்றுறு தன்னினால் (குமண சரி.35). அலக் கண் அற... விளையாட வருக (கலைமகள் பிள். 76). அலக்கரிவாள் பெ. அலக்குக் (துறட்டு) கோலின் நுனியில் கட்டியுள்ள வளைவான சிறு அரிவாள். (தஞ். வ.)