பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/531

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலக்கலக்காய்

அலக்கலக்காய் வி. அ. தனித்தனியாய். கடிகாரத்தை அலக்கலக்காய்ப் பிரித்துப் பார்க்கிறான் (பே.வ.).

அலக்கவுழு-தல் 1 69. மேலோட்டமாக உழுதல், கலப்பை அசைய உழுவதால் சால் அங்கொன்றும் இங் கொன்றுமாகச் செல்லுதல். (தொ.வ.)

அலக்கழி 1-தல் 4 வி.

1.

நான் அலக்கழிந்தேன்

துன்புறுதல்.

...

கலக்க

(தேவா. 4, 70, 3). 2.

(ஒன்றை அடைவதற்கு) அலைந்து திரிதல். வேலை கிடைப்பதற்கு அலக்கழிகிறான்

(பே.வ.).

அலக்கழி'-த்தல் 11 வி. 1. சிதைத்தல், கெடுத்தல். தக்கன் பெருவேள்வி யங்கு அலக்கழித்து ஆரருள் செய்தவன் (தேவா. 5, 73, 1). 2. அலைத்து வருத் துதல். அலுவலகத்தில் ஊதியம் உடனே தாராமல் அலக்கழிப்பதாகப் பணியாள் கூறினான் (பே.வ.). 3. ஏளனம் செய்து அழகுகாட்டுதல். (நாட். வ.)

·

அலக்காக வி. அ. எளிதாக. அடிபட்டுக் கிடந்த

.

வரை அலக்காக

(பே.வ.).

எடுத்துக்

கொண்டுவந்தான்

அலக்கு' பெ. 1. கூரைவரிச்சு. அலக்கும் காலும் நிரப்பினான் (கம்பரா. 6, 8, 16). அந்தம் இல் மனையில் நீடும் அலக்கினை அறுத்து வீழ்த்தார் (பெரியபு. 4,19). 2. காய் பறிக்க நுனியில் வளைந்த சிறு அரிவாள் கட்டிய நீண்ட மூங்கில்கழி, துறட்டுக் கோல். (பே.வ.) 3. நீண்ட மூங்கில்கழியின் நுனியில் பொருத்தும் வளைந்த சிறு அரிவாள். (முன்.)

2.

அலக்கு-தல் 5வி. 1. அசையச் செய்தல். சங்கு அலக்கும் தடங்கடல்வாய் (தேவா. 7,51,3). சிறுவர் விளையாடும் தெறிப்புக்காய் போன்றவற்றில் காயை அசைத்துவிடுதல் (நாட்.வ.)

அலக்கு 3 - தல் 5 வி. துணி வெளுத்தல். (நாஞ்.வ.)

அலக்கு பெ. எலும்பு. விலா அலக்கு உக அலக்கு உக அடிக்கடி சிரித்தன (கலிங். 230).

அலக்கு' பெ. கிளை. (வைத். விரி. அக. ப. 7)

அலக்கு' பெ. கோட்டை. (செ. ப. அக. அனு.)

அலக்குத்தடி பெ. வேலியடைக்க உதவும் மரக்கிளை.

(நாட். வ.)

பெ. சொ . அ.1-26

401

அலகிருக்கைவெண்பா

அலக்குப்போர் பெ. சேவகர் ஈட்டிகளை ஒன்றோ டொன்று எதிர்த்து வைக்கை. இரண்டு தலையி லுள்ள பந்துக்களும் கைவிட அலக்குப் போர் போலே கூடுதல் (திருவாய். 5, 3 ஈடு பிர.)

...

அலக்கைச்சுரம் பெ. கீழ்க்காய் நெல்லி, கீழாநெல்லி. (வைத், விரி. அக. ப. 23)

அலகப்பிரியம் பெ. கருமருது.

(மரஇன. தொ.)

அலகம்1 பெ. ஆனைத்திப்பிலி. (பச்சிலை. அக.) அலகம் (அழ கம்? அளகம்') பெ. மயிர். (உரி. நி. 2)

அலகமான் பெ. ஆனைத்திப்பிலி. (பச்சிலை. அக.)

அலகர் பெ. சோழிகளைக் கொண்டு குறி சொல்வோர். சொரி வெள் அலகரும் பழுதில் வாய்மையர்

(கல்லாடம் 15, 7).

அலகரி பெ. பெரிய அலை. (செ.ப.அக. அனு.)

அலகலகாக வி. அ. ஒன்றோடு ஒன்று கூடாமல் தனித் தனியாக. சுருண்டிருப்பதாய் அலகலகாக எண்ணிக் குளிர்ந்துள்ள மயிர்முடியை

கொள்ளலாய்

...

உடையவனாய் (திருவாய். 3,6,5 ஈடு).

அலகழங்கு பெ. ஆனைத்திப்பிலி. (சங். அக.)

அலகிடு -தல் 6வி. 1. அளவிடுதல். அலகிட்டுக் காணலாம்படி என்பு எழுந்த மெய் (கச்சி. காஞ்சி. கழு. 65). தருமேவும் இலை அலகிட்டு வழக்கினும் (காசீம். திருப்பு. 90). 2. செய்யுள் அசை கணக்கிடுதல். இவ்வாறு அலகிட ஆசிரியத்தளையும் கலித்தளை யும் தட்டுச் செப்பல் ஓசை சிதைதலின் கடியார்பூ என்றும் கோதை என்றும் அலகிட ஓசை சிதை யாதாம் (இலக்.வி.752).

அலகிடு-தல் 6 வி. துடைப்பத்தால் கோயிலிடத்தைத் தூய்மை செய்தல். கோயில் புக்குப் புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்கும் இட்டு (தேவா. 6,31, 3). ஊதையில் அலகிட்டு உறை புயல் தெளித்து (கல்லாடம் 15,7). அந்தியும் பகலும் தொண்டர் அலகிடுங் குப்பை (திருவிளை. பு. கடவுள். 18). ஒருத்தி சம்பு அருகு அலகிட்டு (ஞான. உபதேசகா. 987).

அலகிரி பெ. வெட்கங் கெட்டவன். (செ. ப. அக. அனு.) அலகிருக்கைவெண்பா பெ. (யமகம் திரிபு நிரோட் டகம் போன்ற இயல்புகளைக் கொண்ட) மிறைக்