பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/535

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலங்கல்க

(சீவக. 510). 2. ஒளி. அலங்கல் அம் கண்ணி ஆயிரம் பேர் உடை அம்மான் (திருவாய். 10, 1, 2 ஈடு). அலங்கல் வேல் இலங்கைவேந்தன் (கம்பரா. 5,

14, 37).

அலங்கல்' பெ. ஒழுங்கு. பொன்

அலங்கல் நன்

மாடம் (தேவா. 7, 76, 10). அலங்கல் நன் மாநடம் (சேரமான். பொன். 86). அலங்கல்அம் புரவித் தானை அருங்கலத் தேரின் பேரான் (சூளா.

322).

அலங்கல்" பெ. ஆடுகை. ஆயிரம்தேரை ஆடல் யானையை அலங்கல் மாவை அறுத்தும் (கம்பரா.

6, 21, 29).

...

அலங்கலம் பெ. அசைகை. (யாழ். அக. அனு.)

அலங்கழித்தொழில் பெ. வருத்தும் தொழில். அறவிய மனத்தினையாகி அலங்கழித்தொழில் ஒழிந்தடங்கி (நீல. 74).

அலங்கன் (அலங்கம்!) பெ. கொத்தளம். (செ.ப.

அக. அனு.)

அலங்கன்' பெ. கண்காணி. அலங்கனுக்குப் பின்னே போய் (மலைய. ப.137).

அலங்கனாரி பெ. முத்துச்சிப்பி. (வின்.)

அலங்காரச்செம்பரத்தை பெ. அடுக்குச் செம்பரத்தை. (மரஇன. தொ.)

அலங்காரசாத்திரம் பெ. அணியிலக்கணநூல். (செ.ப.

அக.)

அலங்காரப்பேச்சு பெ. கற்பனை மிகுந்த சுவையான பேச்சு. இவன் அலங்காரப்பேச்சில் வல்லவன் (பே.

வ.).

அலங்காரபஞ்சகம் பெ.

வெண்பா, கலித்துறை, அக வல், விருத்தம், சந்தவிருத்தம் ஆகிய இவ்வைவகைப் பாடல்களும் அந்தாதியாக வரப் பாடும் நூல். வெள்ளை கலித்துறை அகவல் விருத்தம் எள்ளலில் வண்ணம் இவை ஓர் ஐந்தும் அலங்கார பஞ்சகம் ஆகும் என்ப (இலக். வி. 844).

அலங்காரம் 1 பெ. 1. அழகமையச் செய்யும் புனைவு, ஒப் பனை. பெருமகன் எழுதிய பேரலங்காரம் (பெருங்.4, 13,98). அலங்கார நல்லார்க்கு அறை (திணைமாலை.

405

அலங்காரமண்டபம்

127). விரவு பேரலங்கார விழுச்செல்வம் (பெரியபு. 37, 123). கன்னியர் சீர்கண்டு அலங்காரம் மருளேன் (திருவரங். அந். 74). மதிமுகத்து வல்லிக்கு அலங்காரம் செய்து (மதுரைச். உலா 428). அலங்காரம் ஆக மலர் கொன்றை மாலிகை சூடும் அண்ணலே (அறப்பளீ சத. 53). 2. அழகு. அலங்காரமால் (அழகர்கலம். 69). அலங்கார முடிக்கிரணத் திரண்டாறு முகத்து (திருப்பு. 78). அலங்காரக்கண்பேதை (வெங்கைக்கோ. 8. அலங்கார வத்திரம் தரித்துச் செல்வமாய் வாழ்கிறவர்கள் (விவிலி. லூக். 7,25). 3. அணி கலன். பாம்பலங்காரப் பரன் (திருக்கோ. 11). அலங்காரம் என உலகுக்கு அமுதளிக்கும் தனிக் குடை (கம்பரா. 3, 4, 22).

அலங்காரம்' பெ. 1. (சீவக சிந்தாமணிக் கதையில் கூறப்படும்) நாவிதர்க்குரிய ஒரு நூல். தோய்ந்த கேள்வித்துறை போய் அலங்காரமும் தோற்றி

னான்

(சீவக. 2492). 2. செய்யுளில் அமையும் அணிகளைப் பற்றிய அணியிலக்கணம். அலங்காரமும் ஆகிய நான்கும் (ஞானா. 5 உரை). விள்ளரிய காவி யத்துட் பொருள் அலங்காரம் விரிவிலக்கண விகற் பம் (அறப்பளீ. சத. 75). 3. அணியிலக்கணம் கூறும் நூல். மாறனலங்காரம், தண்டியலங்காரம் (நூ. வகை. கந்தன் அனு நறுந்தொடையல் பல

Qu.). 4. ஒரு சிற்றிலக்கிய பூதி அலங்காரம் முதலாய வனைந்து (அருணகிரி பு. 8,15). கந்தர் அலங்காரம், திருப்போரூர் முருகன் அலங்காரம் (நூ.பெ.).

அலங்காரம்' பெ. 1. திருமால் கோயில்களில் படைக்கப் படும் அன்னம் குழம்பு ரசம் முதலிய படைப்பு உணவு கள். (வைண.வ.) 2. மேளதாளத்துடன் வழிபாட்டுப் பொருள்கள் கொண்டு வருகை. எண்ணெய் அலங்

காரம் (கோயில் வ.).

அலங்காரம் பெ. சங்கீத உறுப்பு வகை. தாளத்தின் அங்க அமைப்புக்குத் தக்க வகையில் அமைக்கப் பட்ட சுரவரிசைக்கு அலங்காரம் என்றுபெயர் (சங்கீதசாரம் [ப. 9).

அலங்காரம்' பெ. தஞ்சை மாவட்டத்தில் வாழும் கள்ளர் இனத்தாருள் வழங்கும் பட்டப் பெயர்களுள் ஒன்று. (தஞ். வ.)

அலங்காரம்' பெ. வெடியுப்பு. (சங். அக.)

அலங்காரமண்டபம் பெ. வரவேற்புக்கூடம். (செ.ப.அக.

அனு.)