பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/538

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலந்தலை’

உலவை அஞ்சினை (பதிற்றுப். 39,12). அலந்தலை ஞெமையத்து இருந்த குடிஞை (நற். 394, 2).

அலந்தலை' பெ. 1. துன்பம். அலந்தலைக்கு என்னே அலந்தலையாகி அழிகின்றதே (சேரமான். பொன். 51). மானுடர் அலந்தலைபட (கம்பரா. 6, 2, 61). அலந்தலை எய்தித் தென்திசைச் சேறல் (ஞானா. 34,6). அலந்தலைப்பட்ட சிந்தையனாகி (கோனேரி. உபதேசகா. 32, 23). 2. மயக்கம், கலக்கம். இவள் பேச்சும் அலந்தலையாய் (பெரியாழ். தி.3, 7, 1). அலந்தலையுற்ற அரும் புலன்களைந்தும் (கம்பரா. 2, 3, 17). ஆடிவரும் பேய்களின் அலந்தலை தவிர்த்து (கலிங். 311).

அலந்தலைமை பெ. துன்பம், தொல்லை. அலந் தலைமை செய்துழலும் ஐயன் ( பெரியதி. 4, 4, 3).

அலந்தா (தரு)-தல் 13 வி. துன்புறுதல். அலந்தரு மால் கொள்ள அடர்க்கும் சலந்தரன் (நக்கீர. திருக்

கலி. 23).

அலந்தாரி பெ. எழுத்தாணிப் பூண்டு. (மரஇன. தொ.)

அலந்தை1 பெ. நீர்நிலை. அலந்தை பொய்கை வல யம் சுனை சிறை ... நீர்நிலைப் பெயரே (பிங்.604). மலய முனி அலந்தை (சேதுபு. சேதுவந். 44). அகத்த அலந்தை (இரகு. மாலை. 48).

படிக

அலந்தை' பெ. துன்பம். அலந்தையாய் இருப்பார் கள் (திருவாய். 1, 3, 1 அரும்.).

அலநாங்கு பெ. திப்பிலி. (வாகட அக.)

அலநாறு பெ. கல்நார். (போகர் நி.20

அலப்படை பெ. கலப்பையாகிய ஆயுதம். ... கண்ண னோடு அவ் அலப்படையவனைக்

கொல்வான்

(செ. பாகவத. 10, 14, 12). கண்ணன் முன் வரு காளை அலப்படை அண்ணல் (சிவஞா. காஞ்சி. பல பத்திர. 2). கண்ணன் முன்தோன்றிய காளை கை அமருக் கேற்ற அலப்படை (பேரூர்ப்பு. 1, 43).

அலப்படையோன் பெ. (கலப்பையை ஆயுதமாக வுடையவனும் கண்ணனுக்கு மூத்தோனுமாகிய) பலராமன். (செ. ப. அக. அனு.)

அலப்பரை பெ. வீண் உழைப்பு. (ரா. வட். அக.)

40

8

அலபாதிகம்

அலப்பல் பெ. 1. பிதற்றல். சும்மா அலப்புகிறான் (பே.வ.). 2. கலப்புக்கட்டோசை. அலப்பல் கலப்புக்கட்டோசை (பிங். 2118).

800

அலப்பறை 1 பெ. வீண் பேச்சுப் பேசுபவன். (திருநெல்.

வ.)

அலப்பறை' பெ. 1.பிச்சைக்காரன். (செ. ப. அக. அனு.) 2. சோற்றுக்கு ஏங்கி நிற்பவன். (திருநெல்.

வ.)

அலப்பன் பெ. வீண்பேச்சுக்காரன். (செ.ப.அக.) அலப்பனாத்து பெ. குண்டூசி. (சென்.வ.)

அலப்பாட்டு-தல் 5. வி. மனம் சுழலுதல். பேதைகள் உரைப்பனவே சொல்லிப் பெரிது அலப்பாட்டினை நீ பேதை (நீல. 448).

அலப்பாரி-த்தல் 11 வி. வீண் பேச்சுப் பேசி ஆரவாரித் தல். நீ ஓயாமல் அலப்பாரிக்கிறாய் (வட்.வ.).

அலப்பு1 பெ. மனக்கலக்கம். அலப்பு அறிந்து இங்கு அரசு ஆளகிலாதார் (திருமந். 2287). அலப்பாய் ஆகாசத்தை நோக்கி (திருவாய். 5, 8,4).

அலப்பு-தல் 5 வி. அலைத்தல்.

அமர்க்கண்மகளிர்

அலப்பிய அந்நோய் (கவித். 75,7).

73, 1).

அலப்பு-தல் 5வி. 1. வீண்பேச்சுப் பேசுதல். அஞ் ஞானிகளைப் போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள் (பு. ஏற். மத்.6, 7). 2. பிதற் றுதல். அலப்பிய தக்கன் பெருவேள்வி (தேவா. 5, 3. ஓயாது பேசுதல். முகூர்த்த நேரம் வந்துவிட்டதால் இனித் தாமதிக்கக்கூடாது என்று எங்களுடன் கூட வந்து புரோகிதப் பிராமணர்கள் ஒரு பக்கத்தில் அலப்பினார்கள் (பிரதாப. ப. 87). 4. பொய் கூறுதல். அநியாயமா அலப்புறியே

(மலைய, ப. 59).

அலப்புணி பெ. வீண்பேச்சுப் பேசுபவன். (நாட் .வ.)

அலப்புறை பெ. ஒன்றில் ஏக்கங்கொண்டிருப்பவன். (பே.வ.)

அலபாதிகம் தொ.)

பெ. அம்மான்பச்சரிசிச்செடி.

(மரஇன.