பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/541

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலமாரி"

அலமாரி! பெ. பேராசையுள்ளவன். நீ ஏன் அலமாரிப் பேயாய்த் திரிகிறாய் (வட் வ.).

அலமாரி' பெ. 1. பொருள்கள் வைப்பதற்காக நிற்கும் நிலையில் பல தட்டுப் பலகைகளுடன் கூடிய பெட்டி போன்ற அமைப்பு, நிலைப் பேழை. அலமாரிப் புத் தகங்களைக் கீழே தள்ளிவிடாதே (பாரதி. வசனக் கவி.3,9).2. நிலைப்பேழை போலச் சுவரில் கட்டிய அமைப்பு. (பே.வ.)

அலமாறு பெ. தொந்தரவு. (வட்.வ.)

அலமான் பெ. திப்பிலி. (சங். அக.)

அலமானை பெ. திப்பிலி. (வாகட அக.)

அலமிளகு பெ. திப்பிலி. (சாம்ப. அக.)

அலமுகம் பெ. கலப்பைநுனி, கொழுமுனை. (த.த.அக.)

அலமுகவிரும்பு பெ. கலப்பைக்கொழு. (முன்.)

அலமுறு-தல் 6வி.

துன்பமடைதல். தந்தை தாயை இழந்து அலமுறுமின் என்ன (திருவிளை. பு. 2, 45, 7). அலமேலு பெ. திருப்பதியில் எழுந்தருளியிருக்கும் பெரு மாளின் தேவியாகிய அலர்மேல் மங்கைத் தாயார்.

(வைண.வ.)

அலர் 1-தல் 4 வி. 1. மலர்தல், இதழ்விரிதல். போது அவிழ் தளவமொடு பிடவு அலர்ந்து (ஐங். 412). அலர் பதத்து அசைவளி வந்து ஒல்க (கலித். 126, 12). நன்னாகம் நின்று அலரும் நன்னாடன் (முத் தொள். 122). மொட்டு அலர்ந்து விரைநாறும் (தேவா. 7, 40,1). அலர்ந்த அலர்கள் இட்டேத்தும் ஈசன் (இயற். நான்முகன் திருவந். 82). குறுந்தேன் வழி கொண்டு அலரும் குவளை (நந்திக்கலம். 80). வாண் முகத்து அலர்ந்த போலும் மழை மலர்த்

தடங்கண் (சீவக. 470). சித்திரத்தின் அலர்ந்த

செந்தாமரை (கம்பரா. 5, 3, 20). கோடல் வான் முகை மீது அலர்ந்துறும் கொழும்பூவை (செ.பாக வத. 8, 2,13). சாற்றிய கதிரோன் நிற்கத் தாமரை அலரும் (சி. சி. சுப. 52). மால் நாக அரும்பு அலர் சோலைசூழும் மதில் அரங்கா (திருவரங். அந். 86). பிழியுநறைக் கற்பகம் அலர்ந்த பிரசமலர் (மீனா. பிள்.90). 2. (இசையும் வசையும்) பேச்சால் பரவு தல். நாணும் விட்டேம் அலர்க இவ்வூரே (நற். 15,10). அலர்ந்த புகழோன் தாதை ஆகலின் (பரிபா 4, 14). (இடத்தால்) பரந்திருத்தல். அலர்ந்த விரிநீர் உடுக்கை உலகம் (கலித். 114,18). அங்கராகம் அங்கணிந்து அலர்நத ஆர மார்பி னான் (சூளா. 138). அலர்கதிர் உச்சி சென்றணுக

3.

411

அலர்க

(கம்பரா. 2, 9, 26). அலர்தலை மாநிலம் (நைடத. சிறப்புப். 1). 4. பெருத்தல். ஆரந்தாங்கிய அலர் முலை ஆகத்து (அகநா. 206, 9). அலர்முலை ஆகத்து (கலித். 14,5). 5. உணர்வு முதலியன ) மிகுதல். ஆடுவார் நெஞ்சத் தலர்ந்தமைந்த காமம் (பரிபா. 6, 105).

அலர்'-தல் 4 வி. 1. ஒளிர்தல். செயிர்இன்றி அலர்ந்த பொற்பும் (கம்பரா. 1, 20,8). ஆழியங்கிழவனாய் அலரும் (சூளா. 112). 2. (அறிவால்) விளங்குதல். அணங்கெழில் விரிந்த நூல் அலர்ந்த நாவினான் (சூளா.382). 3. சுரத்தல். அலர்முலைச் செவிலி

யம் பெண்டிர் (பெரும்பாண். 250 பால் சுரந்த முலை யினையுடைய. நச்.). 4. தோன்றுதல், தோற்றமுண்டா தல். இரும்பு அலர் நெடுந்தளை ஈர்த்த கால் (கம்பரா. 2,10, 116).

அலர்' பெ. மலர். நூற்றிதழ் அலரின் நிரை கண் டன்ன (புறநா. 27, 2). புகழ்சால் தாமரை அலர் (பரிபா.2, 53). கட்டலர் கண்ணிப் புதல்வனை (கைந். 39).வாசமிக்கு அலர்கள் கொண்டு (தேவா. 4, 61, 1). நந்தன வனத்து அலர் கொய்து (கம்பரா. 1,3,69). அலரும் நிலவும் மலரும் முடி யார் (பெரியபு. தடுத்தாட். 176). புன்னைகள் சிந்து அலரே (திருவரங். கலம். 84). தாதலர்தார் அணி (சிலையெழு. 22).

அலர் பெ. 1. களவுக் காதலர் பற்றி ஊரார் வெளிப் படப் பேசும் எள்ளற்பேச்சு. அம்பலும் அலரும் களவு வெளிப்படுத்தலின் (தொல். பொ. 137 இளம்.). அலர் வாய் அம்பல் மூதூர் கேட்பினும் (அகநா. 218,19). அலர் எடுத்த ஊராரை (கலித். 104, 75). அலர் எமக்கீந்தது இவ்வூர் (குறள். 1142). அலர வண புதைக்கும் அருமறை நாடி (பெருங்.1,35, 61). பேரலர் சிறந்தது சிறுநல்லூரே (சேரமான். மும். 25,18). மையலார் பேரலராய் மன்றேற (குலோத்.உலா 386). சொல்லாது சொல்லி அலர் தூற்றாமே (திருக்காளத்.உலா 326). நாவாய் பெரி தலர் தூற்ற வந்தால் (சங்கர. கோவை 128). அலர் மொழிகள் சிறிதும் செப்பாள் (குசே.80).2. (பொதுவாக) பழிப்புரை. சமண் சாக்கியர் தாம் அலர் தூற்ற (தேவா. 1, 34, 10).

அலர்க பெ. நீர். கனவிரதமும் சீவனீயமும் அலரும் நாரமும் அமுதும் நீர் எனலாகும் (பிங். 57). என் கோ அலர் ஓட கைப்பறை யோசை அம்பு ஏறும் (கலைசைக். 219). நன்னீர் அலர் எனற்கு ஒப்ப மேவும் (மண்ணிப்படி. பு.நாட்டு.7).

...